முத்துப்பேட்டையில் முத்தரையர்கள் மீது வழக்கு....! நிருபர் மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் முத்தரையர் மன்னரின் சதயவிழா மாநாட்டிற்கு போலீஸ் திடீர் தடை. தடையைமீறி நடத்திய நிர்வாகிகள் மீது போலீஸ் வழக்கு. பரபரப்பு முத்துப்பேட்டை மே - 25 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் முத்தரையர் மன்னரின் 1340-வது சதயவிழா மாநாடு முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடத்துவதற்கு மாநில இளைஞர் அணி செயலாளர் தீரன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாநாடு அழைப்பு அச்சடித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்தார். அதற்கு போலீசார் மாவட்ட எஸ்.பி.யிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து தீரன் கடந்த வாரம் திருவாரூர் எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் ஆகியோரிடம் அனுமதி கோரிய கடிதம் கொடுத்திருந்தார். மனுக்களை பெற்ற எஸ்.பி மற்றும் ஆட்சியர் அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 23-ம் தேதி காலை மேடைகள் அமைத்து மாநாடு பணிகளை தீரன் முன் நின்று கவனித்து வந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை போலீசார் மாநாடு நடத்த தடை விதித்ததாக தீரனிடம் தெரிவித்து மேடைகளை அகற்றி கொள்ளும்படி உத்தரவிட்டனர். இதனால் அதிர்ப்தி அடைந்த தீரன் காவல் துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டார். பயனில்லை. அதனையடுத்து போட்டப்பட்ட மேடைகளை அமைப்பினர் அகற்றினர். இந்த நிலையில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முஜிபுர் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமாக அமைத்து நேற்று முன்தினம் மாலை போலீஸ் தடையை மீறி சதயவிழா மாநாட்டை நடத்தினார். இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜ சோழன் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மாநில இளைஞர் அணி செயலாளர் தீரன் தலைமையில் நிர்வாகிகள் ராஜேந்திரன், ரமேஷ,; மேகநாதன் உட்பட 15 பேர் மீதும், அதே போல் முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்தியதாக மாநில இளைஞர் அணி செயலாளர் தீரன் உட்பட 25 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் முத்துப்பேட்iயில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக