முத்தரையர் சதயவிழா
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1,340-வது சதய விழா திருச்சியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தகடையில் பாரதிதாசன் சாலையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு நேற்று தமிழக அரசின் சார்பிலும் மற்றும் அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.விஸ்வநாதன், மாநில பொது செயலாளர் பாப்பாக்குறிச்சி முருகேசன், பொருளாளர் எஸ்.வி.பாஸ்கர், இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.பாலமுருகன், தலைமை நிலைய செயலாளர்கள் சண்முகம், கங்காதரன், திருச்சி மாநகர தலைவர் செவ்வந்திலிங்கம், மாவட்ட தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அரசியல் கட்சியினர்
அ.தி.மு.க. சார்பில் மாணவர் அணி செயலாளரும், கவுன்சிலருமான பூபதி தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பா.ஜ.க. மாநில செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் மாநில துணை தலைவர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பலத்த பாதுகாப்பு
ம.தி.மு.க. சார்பில் மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சோமு, சேரன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அரசியல் ஆலோசகர் பன்னீர்செல்வம் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன், மேற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிலைக்கு மாலை அணிவிக்க ஏராளமானவர்கள் வந்ததால் சிலையின் அருகே மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக