Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

எம் .ஆர் .கோவேந்தன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 06.08.1977 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரை

1977 ல் சட்டமன்றத்தில் அய்யா எம்.ஆர்.கோவேந்தன் பல கோரிக்கைகளை முன் வைத்து பேசியிருக்கிறார், கிட்டதட்ட 40 ஆண்டுகளை நெருங்கிவிட்டபோதும், இதில் ஒன்றிரெண்டை தவிர ஏனையபெரும்பாலான கோரிக்கைகள் அப்படியேதான் இருக்கிறது

என் சாதிசனமோ டாஸ்மார்க் போதைக்கு அடிமையாகி கிடக்கிறது :(

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் இதெல்லாம் நிறைவேற....??

---------------------------------------

அன்பு  முத்தரைய சொந்தங்களுக்கு  வணக்கம் ,
                                                                                       நம்  முத்தரையர்  இனத்தில்  முதன்  முதலாக  அமைச்சர்  பதவியை  அலங்கரித்தவர்  என்ற  பெருமைக்குச்  சொந்தக்காரர்  எம் .ஆர் .கோவேந்தன்  அவர்கள்  சட்டமன்ற  உறுப்பினராக  இருந்தபோது  06.08.1977 அன்று  சட்டமன்றத்தில்  ஆற்றிய  உரையை  அப்படியே  தருகின்றோம் .

பேரவைத்  தலைவர்  அவர்களே ,

பிற்பட்டோர்  நல  கோரிக்கை  நாளான  இன்று  தமிழ்  இலக்கியத்திலும்  வரலாற்றிலும்  சிறப்பானதொரு  இடத்தைப்பெற்ற  ஒர்  இனம்  கவனிப்பாரற்று  சமுதாயத்தில்  ஒதுக்கப்பட்டு  மிகத்  தாழ்ந்த  நிலையில்  வாழ்ந்துவரும்  அவலநிலையை  இந்த  மாமன்றத்தில்  எடுத்துக்  கூற  கடமைப்பட்டுளேன் .

முத்தரையர்  எனும்  பொதுவான  பெயரில்  வாழும்  இவர்கள்  பல்வேறு  வழக்கு  பெயர்களில்  இன்று  தமிழகத்தில்  வாழ்ந்து  வருகின்றனர் . அவைகளாவன  
முத்தரையர் ,முத்திரியர் ,முத்துராஜா ,முத்துராச்சி ,முதிராஜ் ,அம்பலம் ,அம்பலகாரர் ,வலையர் ,கண்ணப்பக்குள  வலையர் ,பூசாரி ,தலையாரி ,நாயுடு ,காவற்காரர்  ,முத்திரையை  மூப்பனார் ,முத்திரையை  ராவ் ,முத்திரா  வன்னியர் ,முத்திரையை  நாயக்கர் , முத்திரையை  நாய்டு , பாளையக்காரர் ,பாளையக்கார  நாய்க்கர் ,பாளையக்கார  நாய்டு ,முத்திரையை  ஊராளிக்கவுண்டர் ,கம்பளத்தார் ,சேர்வை ,சேர்வைக்காரர் ,தேவர் ,வழுவாடியார் ,பிள்ளை  முதலியவைகளாகும்
.
“முத்தரையர்  கோவை ” என்ற  தனிஇலக்கிய  நூலையும் ” பெரிது  வந்தீயும்  பெரு  முத்தரையர் ” என  நாலடியாரில்  சிறப்பித்துப்  பாடப்பெற்ற  இந்த  இனம்  சமுதாயத்தின்  கடை  நிலைக்கு  தள்ளப்பட்டு  இருக்கிறது . இவர்கள்  தமிழகம்  முழுவதும்  85 லட்சத்திற்கு  மேல்  ஒரு  கோடி  அளவில்  வாழ்ந்து  வருகிறார்கள் . இவர்களுடைய  இன்றைய  நிலையை  ஒரு  அரசு  தொல்பொருள்  ஆய்வாளர்  பிறருக்கு  வாரி  வாரி  வழங்கிய  வள்ளல்களாகத்  திகழ்ந்தவர்கள்  இன்று  பரிதாபத்திற்குரியவர்களாக  ஆக்கப்பட்டிருக்கிறார்களே  என்ற  பச்சாதாபம்   ஏற்படுகிறது  என்று  கூறுகிறார் .

தமிழகத்தில்  ஐந்தில்  ஒரு  பகுதியினராக  வாழும்  இவர்களுக்கென்று  இதுவரையிலும்  எந்த  அமைச்சரவையிலும்  இடம்  கிடைத்தது  இல்லை . முத்தரைய  மாணவர்கள்  அதிக  மதிப்பெண்  பெற்றிருந்தும்  தமிழ்நாடு  பணியாளர்  தேர்வாணைக்குழு   (தமிழ்நாடு  பப்ளிக்  சர்வீஸ்  கமிஷன்  )குரூப்  1 மற்றும்  குரூப்  2 பிரிவுகளில்  யாரும்  தேர்ந்து  எடுக்கப்படவில்லை .
சர்வீஸ்  கமிஷன்  இதுவரை  இச்சமூகத்தை  சேர்ந்த  எவரும்  உறுப்பினர்  பதவி  கொடுக்கப்படவில்லை   IAS ,IPS போன்ற  பதவிகளில்  இச்சமூகத்தை  சேர்ந்த  ஒருவர்  கூட  இல்லை .

பொறியியல்  கல்லூரி , மருத்துவக்கல்லூரி  போன்றவற்றில்  இச்சமூக  மாணவர்கள்  அதிக  மதிப்பெண்கள்  பெற்றிருந்தும்  கூட  இடம்  கிடைப்பதில்லை .அரசுத்துறை ,அரசு  நிறுவனங்கள் ,அரசு  சார்புத்துறை ,அரசு  நிறுவனம் ,நீதித்துறை  போன்ற  எவற்றிலும்  இதுவரையிலும்  பதவி  ஏதும்  அளிக்கப்படவில்லை .

தமிழக்கத்தில்  சில  ஊர்களில்  இம்மக்கள்  சமூகத்தில்  ஒதுக்கப்பட்டவர்களைப்போல்  நடத்தப்படுகிறார்கள் . இவ்வினத்தைச்  சார்ந்த  வலையர் ,அம்பலகாரர் ,அம்பலம்  முதலான  பட்டப்  பெயர்களைக்  கொண்டவர்க்கு  தீண்டாமை  ஒழிப்பு  சட்டத்தின்  மூலம்  ஆதி  திராவிட  சகோதரர்களை  போன்று  சட்டப்பாதுகாப்பு  தரப்படுவதில்லை .

பின்தங்கிய  மாணவர்கள்  விடுதிகளில்  முத்தரைய  சமூக  மாணவர்கள்  சேர்க்கப்படுவதில்லை .தேர்தல்  அறிக்கையின்  போதுகூட   எந்த  அரசியல்  கட்சியும்  இம்முத்தரைய  மக்களை  பற்றி   குறிப்பிடுவதில்லை . குறிப்பாக  சென்ற  சட்டமன்றத்  தேர்தல்  அறிக்கையில்  இந்த  இன  நலன்  பற்றி  எந்த  கட்சியினரும்  குறிப்பிடவில்லை .இது மிகவும்  வருந்தர்க்குரியது

இவற்றிற்கெல்லாம்  காரணம்  முத்தரைய  சமூக  மக்களைப்பற்றி  அரசுக்கு  சரியான  புள்ளி  விபரம்  இல்லாததுதான்  என்பதை  வழியுறுத்திக்  கூற  கடமைப்பட்டுள்ளேயன் . எனவே  பல்வேறு  பெயர்களில்  உள்ள  இவர்களை  முத்தரையர்  என்ற  தலைப்பின்  கீழ்  ஒரே   இனமாக  அரசு  அறிவிக்க  வேண்டும்

சர்வீஸ்  கமிஷனில்  முத்தரைய  சமூகத்தை  சேர்ந்த  ஒருவரை  உறுப்பினராக்கவேண்டும் . முத்தரைய  சமூகத்தைப்பற்றி  உண்மை  நிலையை  அறிய  விரைவில்  ஒர்  ஆய்வுக்குழு  அமைக்க  வேண்டும் .

1972-ஆம்  ஆண்டு  பிற்பட்டோர்  நலக்குழு  பரிந்துரைத்த ”கள்ளர்  புனரமைப்பு ” போன்று  “வலையர்  புனரமைப்பு ” அமைக்க  வேண்டும்  என்ற  பரிந்துரை  இதுவரை  செயலாக்கப்படவில்லை . இது  மக்களுக்கு  செய்யும்  அநீதியாகும்  ஆகவே  உடனடியாக  முத்தரையர்  புனரமைப்பு  ஏற்படுத்த  வேண்டும் .

முத்தரைய  மக்கள்  மற்றைய  பின்  தங்கிய  மக்களோடு  போட்டி போட்டு தேர்வுகளில்  வெற்றி  பெற  இயலவில்லை . ஆகவேய  பிற்பட்ட  வகுப்பிற்க்கும்தாழ்த்தப்பட்ட   வகுப்பிற்கும்  இடையே  ஒரு  வகுப்பை  ஏற்படுத்தி ,கல்வி  வேலை  வாய்ப்பு  ஆகியவற்றில்  தாழ்த்தப்பட்ட  சகோதரர்கள்  பெரும்  சலுகைகள்  அனைத்தையும்  வழங்க  வேண்டும்  அல்லது  தாழ்த்தப்பட்ட  சமூக  வகுப்போடு  இவ்வினத்தையும்  சேர்க்க  வேண்டும் .

இந்த  ஆண்டு  தமிழ்நாடு  சர்வீஸ்  கமிஷன்  தேர்வுகளில்  பிற்பட்ட  மக்களுக்கென  ஒதுக்கும்  பதவிகளில்  பெரும்பாலானவற்றை  இச்சமூக  மக்களுக்கேய  ஒதுக்கவேண்டும் .பின்தங்கிய  மாணவ  விடுதிகளில்  முத்தரையர்  சமூக மாணவர்களுக்கு  முன்னுரிமை  வழங்கவேண்டும் .வீட்டுமனைப்பட்ட ,நில  பட்டா  கொடுப்பதில்  இம்மக்களுக்கு  முன்னுரிமை  வழங்கப்படவேண்டும் .

முத்தரைய  மக்களுக்கு  பிற்பட்டோர்  நலக்குழு  வேலை  வாய்ப்புக்குழு  அறங்காவலர்  குழு  போன்றவற்றில்  இடமளிக்கப்பட்டு  சமுதாயத்தில்  சம  அந்தஸ்து  அளிக்கப்படவேண்டும் .
எனவே , தமிழகத்தில்  ஏறக்குறைய  ஒரு  கோடிபேர்  வாழும்  இம்மக்களை  தேர்தல்  கால  வோட்டுகளுக்கு  மட்டும்  பயன்படுத்தாது ,சமூக  பொருளாதார ,கல்வி  முன்னேற்றத்திற்கு  இம்மக்களுக்கு  வாய்ப்பளிப்பதன்  மூலம்  தமிழகத்தின்  முன்னேற்றத்திற்கும் ,உயர்வடைவதற்கும்  வழி  வகுக்கும்  என  நம்புகிறேன் .

ஆதாரம் :முத்தரையர்  முழக்கம் -18-08-1977-மாதப்பத்திரிக்கை .

தொகுப்பு : பழனிவேல் சங்கிலிதேவன்

அறிவார்ந்த அவை கூடல்...!

மிக விரைவில்.....

அறிவார்ந்த அவை கூடல்...!

உறங்கி கிடப்பவர்களை உசிப்பிவிட அறிவார்ந்தவர்களின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்த பெரியவர்கள் சிலர் திட்டமிட்டு இருக்கிறார்கள்

இதில் வேடிக்கை பார்க்க வரும் ஒருவருக்கும் அனுமதியில்லை, உணர்ச்சி அரசியலை கைவிட்டு ஆக்கப்பூர்வமான அரசியலை நோக்கி சமூக மக்களை வழி நடத்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களோடு வருபவர்களுக்கே அனுமதி,

இந்த சாதி பயணப்பட்ட பாதை எது ? பயணிக்க வேண்டியபாதை எது ?
எது நம்மை வீழ்த்தியது ?
எந்த இடத்தில் நாம் வீழ்ந்து போனோம் ? யாரெல்லாம் நம் எதிரிகள் ?
யார் நம்முடைய துரோகி ?
வீழ்ந்த நாம் எழ என்ன வழி ?

வாருங்கள் விவாதிப்போம்

மறவாதீர்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக்கமே இனி நம் சமூகம் பயணிக்கும் பாதையாக கூட மாறலாம் 

அந்த கருத்தாக்கத்தின் மீதே விவாதம்

இதுதான் திட்டம்

யாரெல்லாம் வருவீர்கள் ?

யாரெல்லாம் வர வேண்டும் ?

உங்கள் கருத்து

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

பேராவூரணித் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் திரு .குழ .செல்லையா அவர்கள் 15.03.73 இல் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை

பேராவூரணித் தொகுதிச்  சட்டமன்ற  உறுப்பினர்  திரு .குழ .செல்லையா  அவர்கள்  15.03.73 இல்  சட்டமன்றத்தில்  ஆற்றிய  உரை

சொல்லருவி குழ செல்லையா அவர்கள் சட்டப்பேரவையில் முழங்கியது.சட்டமன்ற உரைகளையெல்லாம் பொழுதுபோக்கிற்காக போடவில்லை அதற்கான நீண்ட காரணங்களை பிறிதொரு நாளில் பதிவிடுகிறேன்.

நமது சமுதாய யுவன்களும்,யுவதிகளும்,அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான் இங்கு பதிவிடுகிறோம் .
இதை அதிகமான நம் சமுதாய நண்பர்கள் பகிரவும் நன்றி.

இப்படிக்கு : PALANIVELU  SANGILIDEVAN .

துணைத்  தலைவர்  அவர்களே ! தமிழ்நாட்டு  மக்களை  பொறுத்தவரை  நாலைந்து  பகுதிகளாக  நாம்  பிரித்திருக்கிறோம்  .பிற்பட்டோர்  என்றும் ,மிகவும்  பின்தங்கியவர்கள்  என்றும் , தாழ்த்தப்பட்டோர்  என்றும்  பல்வேறு  வகையாகப்  பிரித்திருக்கிறோம் . ஆனால்  உண்மையிலே  நாட்டில்  இருக்கும்  பின்தங்கிய  மக்களுக்கு  ஒதுக்கப்பட்டு  இருக்கும்  சலுகைகள்  சரியான  முறையில்  கிடைத்திருக்கின்றனவா  என்பதைக்  கவனமாகப்  பார்க்க  வேண்டும் .
பிற்பட்டோர்  நல ஆணைக்குழு  தமிழ்நாடு  முழுவதும்  சுற்றிப்பார்த்து , அவர்கள்  எல்லாம்  நேரடியாகச்  சந்தித்துக்   கேட்டறிந்த தகவல்களைக்   கொண்டு  அரசுக்கு  அனுப்பிய  பரிந்துரையில்  110 விதமான  திட்டங்களை  கூறியிருக்கிறது . அந்த  110 வகையான  திட்டங்களில்  17 வகையான  திட்டங்களைத்தாம்  அரசு  ஏற்றுக்  கொண்டிருப்பதாகத்  தெரிய  வருகிறது . அவர்கள்  சொன்ன  மற்றது  திட்டங்களையும்  அரசு  ஏற்று கொண்டுஇருப்பதாகத்  தெரிய  வருகிறது . அவர்கள்  சொன்ன  மற்றது  திட்டங்களையும்  அரசு  ஏற்று  செயல்படுத்த  முன்வர  வேண்டுமென்று  கூறக்  கடமைப்பட்டிருக்கிறேன் . அப்படி  எல்லாவற்றையும்  ஏற்று  செயல்  படுத்தினால்  தான் உண்மையிலே  மிகப்  பின்  தங்கிய  வகுப்பை  சேந்த  மக்கள்  விடப்பட்டிருக்கிறார்கள் . குறிப்பாக  தஞ்சை  மாவட்டத்தில்  அந்தப்  பகுதியில்  முத்துராஜா  வகுப்பை  சார்ந்த  மக்கள் , பிரதிநிதிகள்  இல்லாமல் ,குறைகளை  எடுத்துச்  சொல்வதற்கான  வாய்ப்பு  இல்லாமல்  இருக்கிறார்கள்  .

மாண்புமிகு  முதல்வர்  அவர்கள்  1957 இல்  குளித்தலைப்  பகுதியில்  நின்று  வெற்றி  பெற்றிருக்கிறார்கள் . அவர்களை  அனுப்பிய  அந்த  மக்களில்  முத்துராஜா  சமுதாயத்தைச்  சார்ந்த  மக்கள்  தாம்  அதிகமாக  வாக்களித்து  மாண்புமிகு  முதல்வர்  அவர்களை  அனுப்பினார்கள்  என்பதில்  பெருமையும்  பூரிப்பும்  கொள்கிறோம் . அந்த  மக்களை  பற்றி  முதல்வர்  அவர்கள்  நன்கு  அறிவார்கள் . அந்த  மக்கள்  தமிழகத்தில்  80  லட்சத்திலிருந்து  ஒரு  கோடி  வரையில்  இருக்கிறார்கள்  என்பதை  இந்கு  எடுத்துச்  சொல்ல  நான்  கடமைப்பட்டு  இருக்கிறேன் .
குறிப்பாகத்  தஞ்சை ,ராமநாதபுரம் ,கோவை ,வட ஆர்க்காடு  போன்ற  மாவட்டங்களில்  உள்ள  பல்வேறு  பகுதிகளில்  பல்வேறு  பெயர்களைக்  கொண்டு  இந்த  முத்துராஜா  குல  மக்கள்  வாழ்ந்து  வருகிறார்கள் . திருச்சியைப்பொறுத்த  வரையில்  முத்துராஜா  என்றும் ,முத்தரையர்  என்றும்  இப்படி  பல்வேறு  பெயர்களில்  வாழ்ந்து  வருகிறார்கள் . தஞ்சை  மாவட்டத்தை  எடுத்துக்கொண்டால்  முத்துராஜா  என்றும் ,அம்பலகாரர்  என்றும்  ,வலையர்  என்றும் ,மீனவர்  என்றும் ,பூசாரிகள்  என்றும்  இப்படி  பல்வேறு  பட்டப்பெயர்களில்  இருந்து  கொண்டிருக்கிறார்கள் . அவர்களது  சர்டிபிகேட்டுகளைப்  பார்த்தல்  முத்துராஜா   என்று  போடப்பட்டு  இருக்கும் .மதுரை  மாவட்டத்தை  எடுத்துக்  கொண்டால்  கண்ணப்பர்  குல  மக்கள்  என்று  போட்டுக்  கொண்டிருக்கிறார்கள் . இப்படி  பல்வேறு  மாவட்டங்களில்  பல்வேறு  பகுதிகளில்  பல  உட்பிரிவாக  இந்த  முத்துராஜா  குல  மக்கள்  வாழ்ந்து  வருகிறார்கள்  இந்தச்  சமுதாய  மக்கள்  80 லச்சத்திருக்கு  மேல்  ஒரு  கோடி  வரையில்  தமிழ்நாட்டில்  இன்றைய  தினம்  வாழ்ந்து  வருகிறார்கள் .இப்போது  பின்தங்கிய  வகுப்பினர் ,மிகவும்  பின்தங்கிய  வகுப்பினர்  என்று  பிரிக்கப்பட்டுச்  சலுகைகள்  வழங்கப்பட்டு  வருகின்றன . இப்படிப்பட்ட  சலுகைகளை  வழங்கும்போது  நான்  ஏற்கனவேய  குறிப்பிட்டது  போல  மிகவும்  பின்தங்கிய  பொருளாதாரத்  துறையில்  ,கல்வித்துறையில் ,தொழில்துறையில்  மிகமிகப்  பின்  தங்கிய  மக்களுக்குத்  தாம்  அவர்களுக்கான  சலுகைகள்  கொடுக்கப்பட  வேண்டும் . ஆகவே  ,இன்று  அரசு  சலுகைகள்  வழங்குகின்ற  காரணத்தால்  உயர்ந்த  வகுப்பார்  கூடாது  தங்களை  எந்த  விதத்திலாவது  பின்தங்கிய  வகுப்பினர்  பட்டியலில்  சேர்த்துவிடக்  கூடாதா  என்று  எப்படியோ  தங்கள்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி , தங்களுடைய  செல்வாக்கைப்  பயன்படுத்திப்  பின்தங்கிய  வகுப்பினர்  பட்டியலில்  சேர்க்கப்பட்டு  அந்தச்  சலுகைகளை  பெற்று  வந்துவிடுகிறார்கள் . தமிழ்நாட்டில்  80 லத்திலிருந்து  ஒரு  கோடி  வரி  முத்துராஜா  குல  மக்கள்  இருக்கிறார்கள்  என்று  ஏற்கனவே  சொல்லி  இருக்கிறேன் . அவர்களில்  10 சதவீதம்  varai தவிர  மற்ற  அத்துணை  பேர்களும்  கூலிவேலை  செய்து  பிழைக்கக்   கூடிய  நிலையில்  தான் இருக்கிறார்கள்

குறிப்பாக  ஆதி  திராவிட  மக்களை  எந்த  அளவில்  மதிக்கிறார்களோ , அந்த  அளவிற்குத்  தான்  இவர்களையும்  மதிக்கிறார்கள் . அவர்களை  எந்த அளவிற்கு  வைத்திருக்கிறார்களோ  அந்த  அளவிற்க்குதான்  இவர்களும்  வைக்கப்பட்டிருக்கிறார்கள் . தஞ்சை  மாவட்டமானாலும்  சரி ,மதுரை  மாவட்டமானாலும்  சரி ,திருச்சி  மாவட்டமானாலும்  சரி ,கோவை  மாவட்டமானாலும்  சரி  இந்த  முத்துராஜா  இன  மக்கள்  மிகப்  பின்தங்கிய  முறையில்  வாழ்கிறார்கள்   நல்ல  உடை  உடுக்க  முடியாமல்  நல்ல  தொழில்  செய்து  பிழைக்க  வழியில்லாமல்  தனியார்  நிலங்களில்  கூலிவேலை  செய்து  நிலத்தைக்  குத்தகைக்கு  உழுதுகொண்டிருக்கிறார்கள் .பண்ணையாளர்களிடம்  பரம்பரையாக  அடிமைகளைப்போல  இருந்து  பணியாற்றிக்க  கொண்டிருக்கிறார்கள் , வேலை  செய்து  கொண்டிருக்கிறார்கள்  என்பதைத்  தெரிவித்துக்  கொள்ள  நான்  கடமைப்பட்டிருக்கிறேன் . எனவே  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கு  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  அழைக்கப்படுகிற  சலுகைகள் ,மருத்துவக்  கல்லூரியில்  இடங்கள்  ஒதுக்குவது  போன்ற  பிற  சலுகைகளை ,தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  அழைக்கப்படுகின்ற   எல்லாச்  சலுகைகளையும்  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கு  அளிக்க   வேண்டுமென்று  கேட்டுக்  கொள்ள  நான்  கடமைப்பட்டு  இருக்கின்றேன் .

அடுத்து  மாண்புமிகு   உறுப்பினர்கள்  எடுத்துக்  காட்டியதைப்போல  IAS,IPS போன்ற  தேர்வுகளில்  பின்தங்கிய  வகுப்பைச்  சார்ந்த  மக்களுக்கு  வெற்றி  கிடைப்பது  முடியாத  காரியமாக  இருக்கிறது . ஜில்லாக் கலக்டர் , மற்ற  IAS போன்ற  பதவிகளுக்கு  அவர்களின்  பிள்ளைகள்  என்று  பாரம்பரியமாக   வருகிறதே  தவிர  பின்  தங்கிய  வகுப்பினருக்கு  கிடப்பது  இல்லை . கடந்த  ஆண்டு  பிற்பட்ட  நல ஆணைக்குழு  பரிசீலனை  செய்து  ஒரு  பட்டியலை  வெளியிட்டிருக்கிறது . ஒரு  கோடி   மக்கள்  தொகைக்கொண்ட  இந்த  முத்துராஜா  குல  மக்களில்  மொத்தம்  இதுவரை  படித்துப்  பட்டம்  பெற்றுள்ள  பட்டதாரிகள்  50 பேர்கள்  தாம்  இருக்கிறார்கள்  என்று   எடுத்துக்  கூறி  இருக்கிறார்கள் . என்ஜினீயர்கள்  ஒரு  லட்சம்  பேரில்  இந்தச்  சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள்  10 பேர்கள்  தாம்  இருக்கிறார்கள்  என்று  சுட்டிக்காட்டி  இருக்கிறார்கள் .டாக்டர்கள்  5 பேர்கள்தாம்  இருக்கிறார்கள்   என்று  காட்டி  இருக்கிறார்கள் ,கால்நடை  மருத்துவர்  ஒருவர்தான்  இருக்கிறார் . இப்படி  மொத்தமாக  66 பேர்கள்  தாம்  பல்வேறு  துறைகளில்   இருக்கிறார்கள் . இதை  அமைச்சர்  பெருமக்கள்  எண்ணிப்பார்க்க  வேண்டும் . ஒரு  கோடி  மக்கள்  தொகையைக்  கொண்ட   ஒரு  சமுதாயத்தில்  இருந்து   இவ்வளவு
பேர்கள்  தாம்  பல்வேறு   துறைகளில்  பணியாற்றி  கொண்டு  இருக்கின்றார்கள் . ஆகவே  எந்த  அளவிற்குப்  பிற்போக்கான  தன்மையில்  இந்த  மக்கள்  இருக்கிறார்கள்  என்பதை   எண்ணிப்பார்க்கவேண்டும் . கல்வித்துறையில்  ,பொருளாதாரத்துறையில்   ,தொழில்துறையில்   மற்றச்  சமுதாயத்தினரோடு  வாழத்தக்க  முறையில்   அவர்களின்  நிலைக்கு  உயரத்தக்க  முறையில்  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கு , அத்தனை  சலுகைகளையும்  வழங்க  வேண்டும்  என்று  கேட்டுக்  கொள்கிறேன் .மிக  மிகப்  பின்தங்கிய  தாழ்த்தப்பட்ட   வகுப்பு  மக்களுக்கு  என்னென்ன  சலுகைகள்  அளிக்கப்படுகின்றனவோ  அத்தகைய  சலுகைகள்  எல்லாம்  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கும்  ஒதுக்கித் தரப்பட  வேண்டுமென்று  கேட்டுக்கொண்டு  என்  உரையை  முடிக்கிறேன் .
இந்த  கட்டுரையை  வெளியிட்டது : சென்னை  மாவட்ட  முத்துராஜா  கலைக்கழகம் . கழகத்திற்கு நன்றி .

Thanks to : பழனிவேலு சங்கிலிதேவன்

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

எங்கே தோற்றோம், எப்படி தோற்றோம்..? முத்தரையர் சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை

எங்கே தோற்றோம், எப்படி தோற்றோம்..? முத்தரையர் சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை

_____ _____ _______ _______ ______

நேற்றைய (15.9.2016)மாநாட்டில் பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றும் போது தொடக்கத்தில்  விஜயாலய சோழனை பற்றியும் திருப்புறம்பியம் போரைப் பற்றியும் வீரம் சொறிந்த வரலாற்றை கூறினார்.

மாநாடு முடிந்து திரும்பி வரும்போது அதை அசைப்போட்ட படியே வந்தேன். திருப்புறம்பியம் எனது ஊர் கும்பகோணத்துக்கு மிக அருகில் உள்ள ஊர். அங்கே நடந்தது எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வு. இது சரித்திரத்தில் அபூர்வமாக நடக்க கூடிய நிகழ்வு. காரணம் இதை நிகழ்த்தியது தொண்ணுறு வயதை கடந்த கிழவன் #விஜயாலயன். தமிழக வரலாற்றில் சோழ தேசத்தில் நடந்த இரண்டு போர்கள் முக்கியமானது. ஒன்று இப்பொழுது கோவில்வெண்ணி என்று அழைக்கப்படும் ஊரில் நடந்த வெண்ணிபரந்தலை போர். அடுத்து திருப்புறம்பிய போர். அதுவும் சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த போர், திருப்புறம்பயம் போர். இந்த போரே பிற்கால சோழ சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது . திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ளதோர் ஊர். அங்கு நடைபெற்ற போரே திருப்புறம்பியப் போர்.

இந்த ஊர் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க ஊர். தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிவிட்ட போர் தான் இங்கு நடைபெற்றது. மூன்று பேரரசுகளின் விதி, அந்தப் போரில் நிர்ணயிக்கப்பட்டு சோழப்பேரரசுக்கும் விதை வித்திடப்பட்டது.   திருப்புறம்பயம் போர் பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில்  நடைபெற்றது.

இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர். அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.

இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக (தளபதி) போரிட்டான். அந்த நேரத்தில் தொண்ணுற்றாறு விழுப்புண்களை தன் மேனியெங்கும் பெற்றிருந்த விஜயாலயச் சோழன் இரு கால்களும் நடக்க முடியாத நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.

அப்பொழுது அங்கே போரில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து  பாண்டியர்களிடம் சரணடையும் முடிவுக்கு வந்ததை அறிந்து கோபமடைந்த மாபெரும் வீரர் விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90)  இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார். ஒரு கிழவன் தள்ளாத வயதில் வாள் வீசும் வேகம் கண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி எதிரிகளை துவம்சம் செய்து வெற்றிபெற்றது. கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில் வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.
வரலாறு காணாத போர் ஒன்று நடந்து முடிகிறது. இந்தப் போரில் இரண்டரை நாழிகை நேரத்தில்(ஒரு மணி நேரம்) கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள். ஊரே ரத்தகாடாகி போகிறது. எண்ணற்ற உடல்கள் மலைபோல குவிந்து கிடந்தன. அபரிதமான வெற்றி பல்லவர்க்காயினும் அதன் பலன் அதிகமாக சோழர்களையே அடைந்தது. உலகமே வியக்கும் ஒரு சோழ பரம்பரையின் தொடக்கம் அங்குதான் இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஆதித்தனோ விஜயாலயனோ உணர்ந்திருக்க மாட்டார்கள்.

போர் நடைபெற்ற பகுதியை  "உதிரம் வடிந்த தோப்பு" என்பதை இன்று குதிரைத் தோப்பாக மறுவி அழைக்கிறார்கள்.

திரு. கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனில் இச்சம்பவத்தினை மிக அழகாக சொல்லியிருப்பார்.

தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழ மன்னனை திருப்புறம்பயம் போரில்  இறக்கியது, "எவ்வளவு பெரிய தவறு என்று பல்லவ மன்னன் அப்பொழுது  சிறிதும் சிந்திக்கவில்லை. இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.  விஜயாலயனும், போரின் இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவு கூடக் காணவில்லை.  இப்போருக்கு பின் பல்லவ மன்னனை ஆதித்த சோழன் போரில் வென்று சோழ அரசை தனியரசாக நிறுவினான். தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தவர் விசயலாய சோழரே ஆவார். அரசியல் எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வே உதாரணமாகும். இங்கு வெல்பவர் தோற்கலாம் தோற்பவர் வெல்லலாம் முடிவு காலத்தின் கையில்.

இன்றும் நாம் திருப்புறம்பியம் சென்றால் கங்கமன்னனின் பிரிதிவிபதியின் பள்ளிப்படை கோவிலை காணலாம்
போர் நடந்த இடம் இப்பொழுது பரந்து விரிந்து தோப்புகளும் வயல்களுமாக காட்சியளிக்கிறது. தமிழக வரலாற்றினை மாற்றி எழுதிய போர் நடந்ததற்கு ஒரே சாட்சியாக உள்ள இந்த பள்ளிப்படை கோவில் அய்யனார் கோவிலாக மாறி சிதிலமடைந்து  இருக்கிறது. இதுவும் கொஞ்சம் காலத்திற்கு பிறகு இருக்காது.

தமிழனின் வரலாறு அழிந்து கொண்டிருக்கிறது.

Source : Saravanan Gunasekaran