1977 ல் சட்டமன்றத்தில் அய்யா எம்.ஆர்.கோவேந்தன் பல கோரிக்கைகளை முன் வைத்து பேசியிருக்கிறார், கிட்டதட்ட 40 ஆண்டுகளை நெருங்கிவிட்டபோதும், இதில் ஒன்றிரெண்டை தவிர ஏனையபெரும்பாலான கோரிக்கைகள் அப்படியேதான் இருக்கிறது
என் சாதிசனமோ டாஸ்மார்க் போதைக்கு அடிமையாகி கிடக்கிறது :(
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் இதெல்லாம் நிறைவேற....??
---------------------------------------
அன்பு முத்தரைய சொந்தங்களுக்கு வணக்கம் ,
நம் முத்தரையர் இனத்தில் முதன் முதலாக அமைச்சர் பதவியை அலங்கரித்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் எம் .ஆர் .கோவேந்தன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 06.08.1977 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையை அப்படியே தருகின்றோம் .
பேரவைத் தலைவர் அவர்களே ,
பிற்பட்டோர் நல கோரிக்கை நாளான இன்று தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் சிறப்பானதொரு இடத்தைப்பெற்ற ஒர் இனம் கவனிப்பாரற்று சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு மிகத் தாழ்ந்த நிலையில் வாழ்ந்துவரும் அவலநிலையை இந்த மாமன்றத்தில் எடுத்துக் கூற கடமைப்பட்டுளேன் .
முத்தரையர் எனும் பொதுவான பெயரில் வாழும் இவர்கள் பல்வேறு வழக்கு பெயர்களில் இன்று தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர் . அவைகளாவன
முத்தரையர் ,முத்திரியர் ,முத்துராஜா ,முத்துராச்சி ,முதிராஜ் ,அம்பலம் ,அம்பலகாரர் ,வலையர் ,கண்ணப்பக்குள வலையர் ,பூசாரி ,தலையாரி ,நாயுடு ,காவற்காரர் ,முத்திரையை மூப்பனார் ,முத்திரையை ராவ் ,முத்திரா வன்னியர் ,முத்திரையை நாயக்கர் , முத்திரையை நாய்டு , பாளையக்காரர் ,பாளையக்கார நாய்க்கர் ,பாளையக்கார நாய்டு ,முத்திரையை ஊராளிக்கவுண்டர் ,கம்பளத்தார் ,சேர்வை ,சேர்வைக்காரர் ,தேவர் ,வழுவாடியார் ,பிள்ளை முதலியவைகளாகும்
.
“முத்தரையர் கோவை ” என்ற தனிஇலக்கிய நூலையும் ” பெரிது வந்தீயும் பெரு முத்தரையர் ” என நாலடியாரில் சிறப்பித்துப் பாடப்பெற்ற இந்த இனம் சமுதாயத்தின் கடை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது . இவர்கள் தமிழகம் முழுவதும் 85 லட்சத்திற்கு மேல் ஒரு கோடி அளவில் வாழ்ந்து வருகிறார்கள் . இவர்களுடைய இன்றைய நிலையை ஒரு அரசு தொல்பொருள் ஆய்வாளர் பிறருக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல்களாகத் திகழ்ந்தவர்கள் இன்று பரிதாபத்திற்குரியவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்களே என்ற பச்சாதாபம் ஏற்படுகிறது என்று கூறுகிறார் .
தமிழகத்தில் ஐந்தில் ஒரு பகுதியினராக வாழும் இவர்களுக்கென்று இதுவரையிலும் எந்த அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது இல்லை . முத்தரைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைக்குழு (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் )குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவுகளில் யாரும் தேர்ந்து எடுக்கப்படவில்லை .
சர்வீஸ் கமிஷன் இதுவரை இச்சமூகத்தை சேர்ந்த எவரும் உறுப்பினர் பதவி கொடுக்கப்படவில்லை IAS ,IPS போன்ற பதவிகளில் இச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை .
பொறியியல் கல்லூரி , மருத்துவக்கல்லூரி போன்றவற்றில் இச்சமூக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கூட இடம் கிடைப்பதில்லை .அரசுத்துறை ,அரசு நிறுவனங்கள் ,அரசு சார்புத்துறை ,அரசு நிறுவனம் ,நீதித்துறை போன்ற எவற்றிலும் இதுவரையிலும் பதவி ஏதும் அளிக்கப்படவில்லை .
தமிழக்கத்தில் சில ஊர்களில் இம்மக்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களைப்போல் நடத்தப்படுகிறார்கள் . இவ்வினத்தைச் சார்ந்த வலையர் ,அம்பலகாரர் ,அம்பலம் முதலான பட்டப் பெயர்களைக் கொண்டவர்க்கு தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் மூலம் ஆதி திராவிட சகோதரர்களை போன்று சட்டப்பாதுகாப்பு தரப்படுவதில்லை .
பின்தங்கிய மாணவர்கள் விடுதிகளில் முத்தரைய சமூக மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை .தேர்தல் அறிக்கையின் போதுகூட எந்த அரசியல் கட்சியும் இம்முத்தரைய மக்களை பற்றி குறிப்பிடுவதில்லை . குறிப்பாக சென்ற சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்த இன நலன் பற்றி எந்த கட்சியினரும் குறிப்பிடவில்லை .இது மிகவும் வருந்தர்க்குரியது
இவற்றிற்கெல்லாம் காரணம் முத்தரைய சமூக மக்களைப்பற்றி அரசுக்கு சரியான புள்ளி விபரம் இல்லாததுதான் என்பதை வழியுறுத்திக் கூற கடமைப்பட்டுள்ளேயன் . எனவே பல்வேறு பெயர்களில் உள்ள இவர்களை முத்தரையர் என்ற தலைப்பின் கீழ் ஒரே இனமாக அரசு அறிவிக்க வேண்டும்
சர்வீஸ் கமிஷனில் முத்தரைய சமூகத்தை சேர்ந்த ஒருவரை உறுப்பினராக்கவேண்டும் . முத்தரைய சமூகத்தைப்பற்றி உண்மை நிலையை அறிய விரைவில் ஒர் ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் .
1972-ஆம் ஆண்டு பிற்பட்டோர் நலக்குழு பரிந்துரைத்த ”கள்ளர் புனரமைப்பு ” போன்று “வலையர் புனரமைப்பு ” அமைக்க வேண்டும் என்ற பரிந்துரை இதுவரை செயலாக்கப்படவில்லை . இது மக்களுக்கு செய்யும் அநீதியாகும் ஆகவே உடனடியாக முத்தரையர் புனரமைப்பு ஏற்படுத்த வேண்டும் .
முத்தரைய மக்கள் மற்றைய பின் தங்கிய மக்களோடு போட்டி போட்டு தேர்வுகளில் வெற்றி பெற இயலவில்லை . ஆகவேய பிற்பட்ட வகுப்பிற்க்கும்தாழ்த்தப்பட்ட வகுப்பிற்கும் இடையே ஒரு வகுப்பை ஏற்படுத்தி ,கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் பெரும் சலுகைகள் அனைத்தையும் வழங்க வேண்டும் அல்லது தாழ்த்தப்பட்ட சமூக வகுப்போடு இவ்வினத்தையும் சேர்க்க வேண்டும் .
இந்த ஆண்டு தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் பிற்பட்ட மக்களுக்கென ஒதுக்கும் பதவிகளில் பெரும்பாலானவற்றை இச்சமூக மக்களுக்கேய ஒதுக்கவேண்டும் .பின்தங்கிய மாணவ விடுதிகளில் முத்தரையர் சமூக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் .வீட்டுமனைப்பட்ட ,நில பட்டா கொடுப்பதில் இம்மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் .
முத்தரைய மக்களுக்கு பிற்பட்டோர் நலக்குழு வேலை வாய்ப்புக்குழு அறங்காவலர் குழு போன்றவற்றில் இடமளிக்கப்பட்டு சமுதாயத்தில் சம அந்தஸ்து அளிக்கப்படவேண்டும் .
எனவே , தமிழகத்தில் ஏறக்குறைய ஒரு கோடிபேர் வாழும் இம்மக்களை தேர்தல் கால வோட்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தாது ,சமூக பொருளாதார ,கல்வி முன்னேற்றத்திற்கு இம்மக்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் ,உயர்வடைவதற்கும் வழி வகுக்கும் என நம்புகிறேன் .
ஆதாரம் :முத்தரையர் முழக்கம் -18-08-1977-மாதப்பத்திரிக்கை .
தொகுப்பு : பழனிவேல் சங்கிலிதேவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக