துறையூர் அருகே முத்தரையர் சிலை அவமதிப்பு 3 இடங்களில் சாலை மறியல்
துறையூர் : திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமம் உள்ளது. இங்கு பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். நேற்று காலை அந்த வழியாக வந்த ஒரு தரப்பினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால், முத்தரையர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கீரம்பூர்-வேங்கடத்தானூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், துறையூர்-பெரம்பலூர் சாலை பெருமாள்மலை அடிவாரத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் முசிறி டிஎஸ்பி அரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் சிலோன் ஆபீஸ் அருகில் உள்ள சாலையின் குறுக்கே மரங்களை போட்டு சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று எஸ்.பி. செந்தில்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
News Source : http://m.dinakaran.com/Detail.asp?Nid=244248
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக