முத்தரையர் சிலை அவமதிப்பு : துறையூர் அருகே சாலை மறிய
திருச்சி: துறையூர் அருகே, முத்தரையர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து, சாலை மறியல் நடந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கீரம்பூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது. சிலைக்கு நேற்று முன்தினம் இரவு, மர்ம ஆசாமிகள் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இது, நேற்று காலை முத்தரையர் சமுதாய மக்களிடையே வேகமாக பரவியது. ஏராளமானோர், சிலைக்கு அருகே குவிந்தனர். பின், கீரம்பூர், பெருமாள் அடிவாரம், சிலோன் ஆபீஸ் ஆகிய இடங்களில், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி., செந்தில்குமார், முசிறி ஆர்.டி.ஓ., ஜானகி உள்ளிட்ட அதிகாரி கள் வந்து, பேச்சு நடத்தினர். 'சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர்' என, எஸ்.பி., உறுதி அளித்தார். அதன்பின்னரே சாலை மறியல் கைவிடப்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
News Source : http://m.dinamalar.com/detail.php?id=1601854
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக