நவம்பர் - 05
ஒரு வருடத்தை இன்று நிறைவு செய்திருக்கிறோம், நினைக்கவே சந்தோசத்தில் துள்ளிக்குதிக்க செய்யும் நாள் அது என்றால் மிகையாகாது, கடந்த இருபது வருடங்களில் அரசை எதிர்த்து அவ்வளவு பெரிய போராட்டம் நடத்திய ஒரே ஒரு சமூகம் "முத்தரையர்" சமூகம் என்று நடுநிலைவாதிகள், அரசியல் விமர்சகர்கள், அறிஞர்கள் ஆச்சர்யமோடு சொல்ல வைத்த நாள் இன்று...
காவல்துறை கைது செய்யும் என்ற எச்சரிக்கையை எள்ளிநகையாடி அணி அணியாய் ஆர்பரித்து வந்த என் இனமான இளைஞன் ஒவ்வொருவனின் முகத்திலும் கைதுக்கு பிறகும் புன்சிரிப்பையே காண முடிந்தது,
அச்சம் என்பது துளியுமின்றி, ஆர்பாட்டம்தானே என்ற அலட்சியமுமின்றி ஆர்வமோடு, உணர்வோடு ஓங்கி ஒலித்த குரலோடு புதுக்கோட்டையை புரட்டி போட்டார்கள் என்றால் அது மிகையாகாது, அந்த அதிர்வுகள் இன்றும் புதுகை மண்ணில் மறைந்து கிடக்கிறது. இன்றும் முத்தரையர் சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் காவல்துறை உள்ளிட்ட அரச துறைகள் உண்ணிப்பாக கவனிக்க வைத்த ஒரு பொன்னான தினம் நவம்பர் -05
வரும் எல்லோரையும் கைது செய்துகொண்டே இருக்கிறார்கள், ஒரு கட்டத்தில் அதுகூட முடியாமல் காவல்துறை திணறி நின்றதை காணும்போது நமக்கே பரிதாபம் வந்தது. அவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி முடித்த முத்தரையர் பேரினம், பின்வந்த ஒரு வருட காலத்தில் எந்த சலனமும் இல்லாமல் புயலுக்கு பிந்ததைய அமைதியோடு இருக்கிறது, காட்டாராய் சீறிவந்த காளைகள் ஏனோ அமைதி என்னும் பெரும் கடலில் கலந்து நிற்கிறது.
இடையில் வந்த தேர்தல் காலத்தில் புற்றீசல்கள் முளைத்து தேவைகள் (!?) முடிந்து ஓய்ந்துவிட்டது, போராட்டத்தில் கலந்துகொள்ளாத, கைதுக்கு பயந்து ஓடியதுகள் எல்லாம் தேர்தலில் நின்ற கொடுமைகளும் நமக்கு தெரியும், சரி அந்த கோழைகளை விட்டுவிடுவோம்.
போராட்டம் என்பது போராளிகளை உருவாக்குமிடம் என்பதுதான் போராட்டத்தின் இலக்கணம், போராளிகளாய் ஆர்பரித்து வந்த என் உறவுகளின் உணர்வுகளுக்கு சரியான வடிகால் இன்றுவரை கானல்நீராகவே இருக்கிறது, புயலுக்கு யார் சலங்கை கட்ட போகிறார்கள்..??
"புதுகை போராட்ட போராளிகளுக்கும்" "புதுகை புரட்சியின் நாயகன் அண்ணன் சொக்கலிங்கத்திற்க்கும்" என்னோடு போராட்ட களத்தில் நின்ற அத்தனை போராளிகளுக்கும் இந்த சஞ்சய்காந்தி அம்பலக்காரனின் சிரம்தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீர வம்சத்தின் வாரிசுகளே...! புதுகை போராட்டம் நமக்கான தொடக்கம் என்றுதான் அன்றும் நான் சொன்னேன், இன்றும் அதையேதான் சொல்கிறேன். ஓய்ந்து கிடக்கும் சாதியில் நாம் பிறக்கவில்லை, ஓய்ந்துகிடப்பதனால் எதுவும் நமக்கு கிடைக்கப் போவதுமில்லை....! அன்று போர்களமே கதியென கிடந்த சாதிக்கு இனி போராடினால்தான் நீதி கிடைக்கும், போர்களமோ, போராட்டமோ நாம் "களத்தில்" நின்றுதான் தீர வேண்டும்.
இன்னும் வலிமையான போராட்டங்கள் என் சமூகம் முன்னெடுக்கும்போதுதான், நேற்று நாம் இழந்த நம்முடைய உரிமைகளை, நாளை நமது சந்ததிக்காவது பெற்றுத்தந்திட முடியும், ஆட்சியும், அதிகாரமும் அடங்கி கிடப்பவனுக்கு கிடையாது, முடங்கி கிடப்பவன் கொம்புதேனுக்கு ஆசையும் பட முடியாது.
அடுத்த போராட்டத்துக்கு நாள் குறியுங்கள்.....! அங்கே புரட்சிகொடியேந்தி சந்திப்போம்...!!
புரட்சி வணக்கங்களோடு
உங்கள் சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
நிறுவன தலைவர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக