முத்தரையர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆவணங்கள
் .....முத்தரையர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணங்கள்.
1) இந்திய அரமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 12 ,14 ,15 ,16 ,29 ,38 .46 ,141 ,309 ,335 ,338 ,338 ஏ,340 ,341 ,342 ,343 ,344 .
2) இந்திய அரசின் (முதலாவது) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் காகா காலேல்கர் குழு அறிக்கை (1985 ).
3) தமிழக அரசின் (முதலாவதாக) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் ஏ .என்.சட்டநாதன் குழு அறிக்கை (1970 )
4)இந்திய அரசின் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் மண்டல் குழு அறிக்கை (1980 )
5)தமிழக அரசின் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் அம்பா சங்கர் குழு அறிக்கை (1985 )
6) மண்டல் குழுவின் பரிந்துரைப்படி பிரதமர் வி.பி.சிங் 1990 இல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உயர் சாத்தினார் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 9 நீதிபதிகள் பேராயம் விசாரித்து 16 .11 .1992 இல் வழங்கிய தீர்ப்பும் அதன் பிறகு கூறப்பட்ட தீர்ப்புகளும் .
7) மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த முக்கியமான அரசாணைகள் .
8) ஐ ஐ டி, ஐ ஐ எம் , முதலான மைய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இயற்றப்பட்ட மையக் கல்வி நிறுவனங்கள் ( சேர்க்கையில் இட ஒதுக்கீடு ) சட்டம் 2007 .
9) மைய்ய அரசின் கல்வியில் அளிக்கப்பட இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பேராயம் 10 .04 .2008 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு.
10) சட்டநாதன் குழு அறிக்கையிலும் அம்பாசங்கர் குழு அறிக்கையிலும் பல வகுப்புகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புரைகளும் புள்ளி விவரங்களும் .
11) பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதிகள் .
12) வே.ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதி
பெரியார் ஈ.வெ.ரா ..டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு..
(தகவல் உதவி : கலத்தம்பட்டு சதாசிவம் ராமலிங்கம் )
முத்தரையர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து இருக்கவேண்டிய ஒன்று. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நம் சமுதாயம் எவ்வளவு உரிமையை இழந்திருக்கிறோம் என்று அறிய வேண்டும். நாம் இழந்த உரிமையை பெற வேண்டும் என்றால் நம் சமுதாயம் அறிந்து இருக்க வேண்டியவைகளை நம் சமுதாய அமைப்புகள் கொண்டு வந்து மக்களிடம் சேர்த்து அதற்கான நடவடிக்கைளை எடுத்தார்களா என்று தெரியாது. சில சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தியிருக்கிறார்கள் ஆனால் இட ஒதுக்கீடு, அதன் அவசியம், தேவை, போன்றவற்றை மக்களிடம் அவர்கள் விளங்கி கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறி மக்களை திரட்டி கவன ஈர்ப்பு,கண்டன பேரணி,பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை சென்னையில் நடத்தினால் மட்டுமே இந்த இனத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.
பழ .சங்கிலிதேவன் பழுவேட்டரையர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக