முத்தரைய சொந்தங்களே !!! சமூக நீதி கணக்கீட்டைப் பாரீர்!!!!!
தந்தை பெரியாரிடம் சமூக நீதியை கரைத்து டம்ளரிலும்,அண்டாவிலும்,குண்டாவிலும்,குழாய் (straw ) வைத்து உறிஞ்சியும் ,மடக்கு மடக்குன்னு குடித்தவர்களும், அப்படியே நீந்தி குளித்து குடித்தவர்களும் .
சமூக நீதி குளத்தில் தொபுக்கடீர்னு குதித்தும், குட்டிக்கரணம் அடித்து குதித்தும் ,நீச்சல் அடித்தும் ,அடிக்காமழும் ,தென்னை நார் வைத்து அழுக்கு தேய்த்தது குளித்தவர்களும்,களிமண் தேய்த்து குளித்தவர்களும், dove , pears இன்னும் பிற சோப்பு கட்டிகளை வைத்து குளித்தவர்களும் பின்பற்றிய சம தர்ம அரசியல் கொள்கைகளை பாருங்கள்.
திராவிட கழகங்கள் இரண்டுக்கும் இது பொருந்தும். உள்ளாட்சி தேர்தலில் பட்டியலில் உள்ளவர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அண்ணன் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை வாங்கினார்கள் . எங்கள் சமுதாயம் எல்லாம் சமூக நீதிக்கு உட்படாதா???இல்லை உட்படுத்தும் அளவுக்கு தகுதி இல்லையா????
பாராளுமன்றம் 1952 ஆம் வருடம் அமைக்கப்பட்டதிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 15 முறை தேர்தல்கள் நடை பெற்று உள்ளது . மொத்தம் 599 உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்ய பட்டுள்ளனர் இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் கணக்கில் எடுத்துக்கொள்ள படவில்லை .
இதில் ஒவ்வொரு சமுதாயமும் எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்களாக எண்ணிக்கையை கொண்டுள்ளனர் என்று பாருங்கள்.
தலித் -102
முக்குலத்தோர் -81
வன்னியர் -73
கொங்கு வெள்ளாளர் -71
நாடார் -49
முதலியார் -52
முஸ்லிம்கள் -18
பிள்ளைமார்-16
நாட்டு கோட்டை செட்டியார் -13
ஐயர்-22
இசை வேளாளர் -9
உடையார் -7
கோனார்-2
முத்தரையர் -2
நாய்டு ,செட்டி,தெலுங்கு /கன்னடம் /மலையாளம் -82
இப்போ சொல்லுங்கள் முத்தரையர்களே ...யார் இதில் இளிச்ச வாயர்கள் ??? நமது தொகுதியை நாம்தான் கைப்பற்ற வேண்டும். நமக்கான உரிமையை நாம் தான் கேட்டு பெற வேண்டும். வரும் நாடாளு மன்ற தேர்தலில் 5 ( திருச்சி, சிவகங்கை,பெரம்பலூர் ,தஞ்சாவூர் ,கரூர் )பாராளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க கட்சிகளை வலியுறுத்த வேண்டும்.
முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் அதிக பஞ்சாயத்துகளை நாம் கைப்பற்றி யாக வேண்டும்.
பழ .சங்கிலிதேவன் பழுவேட்டரையர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக