திருப்பதி சுவாமிகள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் திருப்பதி சுவாமிகள் திரு .மு.சுப்ரமணிய முத்தரையருக்கும் ,வெள்ளையம்மாளுக்கும் மகனாய் 1873 ஆம் ஆண்டு அவதரித்தார்.திருப்பதி சுவாமிகளை பெற்றதால் அரவக்குறிச்சி ,ஆன்மீக வரலாற்றில் புகழ் பெற்றது.
சுவாமிகள் தொடக்கக் கல்வி முடிந்ததும் அரவக்குறிச்சி அருகில் உள்ள நல்லமாகாளிபட்டியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.குருக்கள் பரம்பரையில் உதித்த தெய்வசிகாமணி குருக்கள் என்பார் இவரது நல்லாசிரியராக திகழ்ந்தார் .தமிழ் ,வடமொழி இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
துறவு வாழ்க்கையில் நாட்டம் கொண்ட சுவாமிகள் தந்தையாரின் தோட்டத்திலுள்ள விநாயகர் கோவிலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.தமது குருவைத் தேடிப் பல இடங்களுக்கும் சென்ற சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பிரம்மாஸ்ரீ சுயம்பிரகாச சிவானந்த சுவாமிகளை நேரில் கண்டு அவரது சீடரானார்
அரவக்குறிச்சி கோவில் மடத்தில் தங்கி கணேசருக்கு ஆராதனை செய்துவரும் காலத்தில் தம்மை வந்தடைந்தவர்களுக்கு நல்லுபஹ்தேசம் செய்யும் வழக்கத்தை கொண்டார்.சில சமயங்களில் அண்மையிலுள்ள திருவெஞ்சமாக்கூடல் ,கரூர் முதலான தலங்களுக்குச் சென்று வருவதுண்டு.
வெஞ்சமாக்கூடல் விகிர்தீசர் மீதும் அம்மை பண்ணோர் மொழியாள் மீதும் சுவாமிகள் பக்திப் பரவசத்துடன் பாடிய பாடல்கள் நெஞ்சை நெக்குருக வைக்கும்.சுவாமிகள் தமது " பக்தி நெறி " எனும் நூலில் நான்கு பாடல்கள் விகிர்தீசர் மீதும், பண்ணோர் மொழியாள் மீதும் பாடியுள்ளார்.
"வாட லின்றி மகிழன்பர் நெஞ்சினுளும்
வாச மாய விகிர் தீசனே"
என்றும்
"விண்ணினேர் மேனி விகிர்தனார் மகிழ
வெஞ்சமாக் கூடலில் அமர்ந்த
பண்ணினேர் மொழியாய் வெண்மதிக் கொழுந்தின்"
என்றும்
சுவாமிகள் வெஞ்சமாக்கூடல் ஈசனையும் அம்பிகையையும் புகழ்ந்து பாடியுள்ளார்.
சுவாமிகளின் நூல்கள் .
திருப்பதி சுவாமிகள் பல அறிய நூல்களை இயற்றி அருளினார். அவற்றுள் கீழ்காண்பதை மட்டுமே இது கானும் நமக்குக் கிடைத்துள்ளன.
அவைகள்.
1 . ஸ்ரீ வித்தியா கீதை
2 . பக்தி நெறி
3 .பழமொழிப்போதம் (1932 )
4 .தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
5 .திருநாம மாலை (1942 )
6 .ஞானலோகம் என்னும் யுக்தி சாகரம் (1950 )
7 .முக்தி நெறி
8 .சதாசிவப்பிரும்ம ஸ்தோத்திரம்
9 .தேவிஸ்தோத்திரம்
10 .விவேக சித்திரம்
11 .தத்தாத்ரேயர் ஸ்தோத்திரம்
12 .மாரியம்மன் தாலாட்டு
13 .சிவசூத்திர விமர்சனி (உரைநடைநூல்)
14 .வில்மாதர் விஷம்
15 .சகுந்தலா அல்லது காதல் வெற்றி
சுவாமிகளின் மறைவு
சுவாமிகள் குளித்தலை கடம்பர் கோவிலில் தமது 64 ஆம் அகவையில் 1937 ஆம் ஆண்டு நீர் விகற்ப சமாதியில் அமர்ந்தார்.ஆண்டு தோறும் கடம்பர் கோவிலில் சுவாமிகளுக்கு குருபூசை நடைபெறுகிறது.
நூல் ஆதாரம்: கொங்கு வேந்தர் வெஞ்சமன் & வெஞ்சமாக்கூடல் வரலாறு.
-Palanivel Sankili Thevan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக