வெள்ளி, 29 டிசம்பர், 2017
செவ்வாய், 12 டிசம்பர், 2017
நியமம் சப்தகன்னிமார் மேடு
வரலாறு அறிந்த பின்பு நிச்சயம் "முத்தரையர்கள்" ஒருமுறையேனும் பயணப்பட வேண்டிய இடம், நியமம் சப்தகன்னிமார் மேடு, அங்கே என்னவெல்லாம் இருக்கிறது ? எதையெல்லாம் காணமுடியும் என்பதனை இங்கே அறியலாம்.
தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி சென்று அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் இருக்கிறது நியமம்..
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
https://www.google.co.in/ maps/place/ 10°50'50.4%22N+78°55'49.9%2 2E/ @10.8473414,78.9286882,604m / data=!3m2!1e3!4b1!4m14!1m7! 3m6!1s0x3baaf267da965baf:0 x71e72d9095e4ccc9!2sKallan ai,+Tamil+Nadu+620013!3b1! 8m2!3d10.8321013!4d78.8176 763!3m5!1s0x0:0x0!7e2!8m2! 3d10.8473368!4d78.9305289? hl=en
தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி சென்று அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் இருக்கிறது நியமம்..
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
https://www.google.co.in/
வெள்ளி, 8 டிசம்பர், 2017
குற்றப் பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஓலக்குரல்
குற்றப் பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஓலக்குரல்
தமிழக உயர்நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா ?: கொளத்தூர் மணி கண்டனம்
// சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ் நாட்டில் இன்றும் கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரிவினர்களான பிரன்மலைக் கள்ளர்கள், வண்ணார், அருந்ததியர், ஆசாரி, கோனார், முத்தரையர், நாவிதர், போயர், மற்றும் ஏராளமான சமூக பிரிவினரும் ////
தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் பட்டியலில் கேரளாவைச் சார்ந்த டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சுப்ரமணிய பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஒருபோதும் பணியாற்றியவர் அல்லர். எங்கோ டெல்லியில் வழக்கறிஞராக உள்ள ஒருவரை தமிழ் நாட்டிற்கும் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லாத ஒருவரை நியமிப்பது சரியா?
சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ் நாட்டில் இன்றும் கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரிவினர்களான பிரன்மலைக் கள்ளர்கள், வண்ணார், அருந்ததியர், ஆசாரி, கோனார், முத்தரையர், நாவிதர், போயர், மற்றும் ஏராளமான சமூக பிரிவினரும் மற்றும் பெயரளவில் ஒருவர் மட்டுமே இருக்கும் மீனவர், வன்னியர் போன்ற சமூகப் பிரிவுகளில் ஏராளமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எங்கோ டெல்லியில் இருக்கும் அதிலும் கேரளாவைச் சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல் ஆகும். அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே தமிழ் நாட்டின் தலைமை வழக்கறிஞராக கேரளாவைச் சார்ந்த விஜய நாராயணன் என்பவரை நியமித்து இருப்பதோடு அரசு கூடுதல் வழக்கறிஞராக இன்னொரு கேரளாவைச் சார்ந்த பெண் வழக்கறிஞரை நியமிப்பது என்ன நியாயம்? இது அநீதி அல்லவா?
தமிழ் நாட்டு வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா?
தமிழ் நாட்டு வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா?
கேரளா பாலக்காட்டைப் பூர்வீகமாக கொண்ட டெல்லி வழக்கறிஞர் சுப்பிரமணியம் பிரசாத்தை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமனம் செய்வதைத் தமிழகம் ஒருபோதும் ஏற்காது.
ஆகவே சென்னை உயர் நீதிமன்றமே! மத்திய பிஜேபி அரசே!
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கேரளாவைச் சார்ந்த சுப்ரமணிய பிரசாத்தை நீதிபதியாக நியமிக்கும் உத்தரவைத் திரும்பப் பெறு !
தமிழ் நாட்டு மக்களை போராட்டத்திற்குத் தள்ளாதே !” என்று தெரிவித்துள்ளார்.
News Source : FX16
வெள்ளி, 1 டிசம்பர், 2017
மலையடிப்பட்டி சிவன் கோயில்
1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர்.
செல்லும் வழி மற்றும் வரைபடம்....
தஞ்சையிலிருந்தும், திருச்சியில் இருந்தும் பயணப்படலாம்...
கோயிலின் பெயர் | - | மலையடிப்பட்டி சிவன் கோயில் |
வேறு பெயர்கள் | - | ஆலத்தூர் குடைவரைக் கோயில் |
அமைவிடம் | - | சிவன் குடைவரைக்கோயில், மலையடிப்பட்டி-621 307, கீரனூர், புதுக்கோட்டை. |
ஊர் | - | மலையடிப்பட்டி |
வட்டம் | - | கீரனூர் |
மாவட்டம் | - | புதுக்கோட்டை |
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை) | - | சைவம் |
மூலவர் பெயர் | - | ஸ்ரீவாசீஸ்வரமுடையார் |
காலம் / ஆட்சியாளர் | - | கி.பி. 9ஆம் நூற்றாண்டு / தந்தி வர்மன், விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் |
கல்வெட்டு / செப்பேடு | - | பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள், பாண்டியர், சோழர் தமிழ்க் கல்வெட்டுகள், விஜயநகரர் கல்வெட்டுகள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. |
சுவரோவியங்கள் | - | இல்லை |
சிற்பங்கள் | - | கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவரில் கருவறைக்கு நேராக சங்கரநாராயணர், துர்க்கை சிற்பத் தொகுதிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஏழுகன்னிகளின் சிற்பத் தொகுதியும் அமைந்துள்ளது. |
தலத்தின் சிறப்பு | - | 1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர். |
சுருக்கம் | - | சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், சங்கரநாராயணர், கொற்றவை, சப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. |
News Source : தமிழிணையம்
வியாழன், 30 நவம்பர், 2017
முரண்பாடுகளின் மொத்த உருவமா தமிழக அரசு நிர்வாகம் ?
முரண்பாடுகளின் மொத்த உருவமா தமிழக அரசு நிர்வாகம் ?
நேற்று தஞ்சாவூரில் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி குறிப்பிடுகிறார்
// எட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே தன் பெயராக கொண்டு உருவானது தஞ்சை என்றும், தனஞ்சயன் ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என மாறியது என்றும் கூறப்படுகிறது.//
இதே கருத்துதான் செல்வி.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தஞ்சையில் கூட்டிய "எட்டாவது உலக தமிழ் மாநாட்டு மலரிலும்" இடம் பெற்று இருக்கிறது.
ஆனால் தஞ்சை மாவட்ட அரசின் அதிகாரபூர்வ இணையதளம் (http://www.thanjavur.tn.nic.in/history.html) மட்டும் கற்பனையான அரக்கன் கதையை அளந்துக்கொண்டு இருக்கிறது, இது தொடர்பாக பலமுறை நேரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இன்றைய தேதிவரை எந்த மாற்றமும் அந்த இணையதளத்தில் செய்யப்படவில்லை....
ஆக தமிழக அரசின் தலைமைப்பொருப்பில் இருப்பவர்கள் சொல்வது ஒன்றாகவும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மாவட்ட நிர்வாகம் சொல்லும் வரலாறு ஒன்றாகவும் இஒருக்கிறது இதுதான் தமிழக அரசின் லட்சணம் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
வெள்ளி, 24 நவம்பர், 2017
குழ.செல்லையா
குழ.செல்லையா அவர்களை பற்றி இன்றைய செய்திதாள்கள், இணையதளங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு :
தினமணி
தமிழ் ஹிந்து
தினமணி
தமிழ் ஹிந்து
சொல்லரசு குழ.செல்லையா...
சொல்லரசு குழ.செல்லையா...
24.11.2017 05:57
ஒரு மனிதனின் மரணத்தில் தெரியும் என்பார்கள் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம், ஆயிரமாயிரமாய் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியவர்களை காணும்போது அப்படி ஒரு நல்வாழ்க்கையை சொல்லரசுவும் வாழ்ந்திருப்பதை உறுதிபடுத்தியது.
1971 இன்றுபோல எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டம், பொது போக்குவரத்தும் பெரிய அளவில் இல்லாத காலம், அந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையில் துவங்கி தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை மற்றும் உள்பகுதி முழுவதும் பரவி இருந்த பெரிய தொகுதியான பேராவூரணி தொகுதி உட்பட தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல்.
35 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவன் திமுகவின் தீவிர தொண்டன், ஆர்வத்தோடு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறான் கட்சியில், கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூடாரத்தில் இள வயதுகாரனுக்கு, அதுவும் ஒரு அறியப்படாத, அரசியல் அரிசுவடி அறியாத சாதியில் பிறந்தவனுக்கு சீட்டா...? என்று எள்ளிநகையாடி வாய்ப்பு மறுத்து அரசியலில் கரைகண்ட கிருஷ்ணமூர்த்தி தேவரை வேட்பாளராக அறிவிக்கிறது திமுக. வெகுண்டெழுந்த அந்த இளைஞன் அப்போதே தீர்மானிக்கிறான் "தான் தான் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" என்று.
சுயேட்சையாக களம் காண தீர்மானித்தாகிவிட்டது, அதிர்ஷ்டமான "சிங்கம்" சின்னமும் கிடைக்கிறது.(இதுதான் சிங்கம் சின்னம் முத்தரையர் சின்னமாக மாறிய தருணம்) ஓய்வில்லாமல் ஒவ்வொரு கிராமமாக சுற்றி அவ்வளவு பெரிய தொகுதி முழுவதும் சுற்றி எல்லா மக்களையும் நேரில் சந்தித்து ( வேறு வழியே இல்லை நேரில் மட்டுமே சந்திக்க முடியும்) தன்னுடைய கணீர் குரலெடுத்து பேசி வாக்கு கேட்க, அறியாமையும், படிப்பறிவும் இல்லாத மக்களுக்குள் அந்த பேச்சுக்கள் ஏதோ தீப்பொறியை பற்றவைக்க 2020 வாக்குகள் வித்தியாசத்தில் "பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" ஆக தேர்வாகிறார் திருமிகு. சொல்லரசு குழ.செல்லையா...!
இருந்தாலும் தனக்கு வாய்ப்பு மறுத்த கட்சிக்கு பாடம் புகட்ட மறக்கவில்லை இந்த மாணிக்கம், திமுகவுக்குள் உட்கட்சி குழப்பம் ஒன்று வருகிறது திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர் கட்சியின் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துகணக்கை காட்ட சொல்கிறார், சொத்துக்கணக்கை காட்டுவதென்றாலே அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு அலர்சியாகிறது, பூசல் முற்றி எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.
புதிதாக அண்ணாவின் நாமம் தாங்கி "அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை" தோற்றுவிக்கிறார் எம்.ஜி.ஆர் அவரோடு (அவரையும் சேர்த்து) 4 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து வெளியேறுகிறார்கள், எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவையும் கட்சிக்கு அழைக்கிறார் நேராக கட்சிக்குள் சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு காரியம் செய்கிறார், திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார் "உங்கள் கட்சிக்கு திருப்பி வருகிறேன் என்று" உட்கட்சி குழப்பம் மிகுந்த அந்த நேரத்தில் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கட்சிக்கு வருவது நல்லதுதான் என்று அரசியல் சாணக்கியர் கலைஞர் கருதுகிறார், சரியென சம்மதிக்கிறார், இவரும் கட்சியில் இணைகிறார். அடுத்த நாளே "திமுக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் இணைந்தார்" என நாளேடுகள் செய்தி வெளியிட அரசியல் சாணக்கியர் முகத்தில் ஈ ஆடவில்லை, அதனால்தான் எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவை "எல்லாருக்கும் தலையில மூளை, செல்லையாவுக்கு மட்டும் உடம்பெல்லாம் மூளை" என்று. அப்படி மூளையோடு இருப்பவனை யார்தான் சீராட்டி பாராட்டி வைத்துக்கொள்வார்கள் ? அதனால்தான் அரசியல் அரங்கில் அவரால் கோலச்ச முடியவில்லை...
அவரோடு அதிமுகவின் முதல் படிவத்தில் கையெழுத்து போட்ட 12 பேரில் எம்.ஜி.ஆருக்கும் குழ.செல்லையாவுக்கும்தான் கல்வி நிறுவனங்கள் கிடையாது என்பதுதான் குழ.செல்லையாவின் சம்பாத்தியம்.
1906 ஆம் ஆண்டு முத்துராஜா மஹாசன சங்கம் தொடங்கி இருந்தாலும், சில மாநாடுகள் பல இடங்களிலும் நடத்தி இருந்தாலும், தமிழகமே அதிரும் வண்ணம் ஒரு பிரமாண்டமான முத்தரையர் மாநாட்டை நடத்தி அதில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரை மேடையில் ஏற்றி "முத்தரையர்களுக்கு" இன்றுவரை தொடரும் அமைச்சரவை பங்களிப்பை உறுதி செய்த பெருமையும் திரு.குழ.செல்லையாவையே சேரும்.
எம்.ஜி.ஆர் அதிமுக தொண்டர்களை முட்டாள்களாக வைத்திருக்க எண்ணி தனது கட்சி தொண்டர்கள் அனைவரும் கட்சியின் சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கிறார், இயல்பிலேயே சுயமரியாதை கொண்டவர் இதனை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தில்" தலைவராக சிறிதுகாலம் பணியாற்றுகிறார்.
2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அன்றைய ஆளும்கட்சியான திமுக ஒரு கூட்டணி அமைக்கிறது, தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சாதிசங்கம் கூட்டணியில் இடம்பெருகிறது, அதற்கு முன்புவரை தேர்தல் கூட்டணி என்றாலே அது அரசியல் கட்சிகளுக்குள் மட்டுமே தொகுதி பங்கீடாக இருக்கும் அன்றைக்கு திமுக அமைத்த கூட்டணியில் முத்தரையர்களின் அரசியல் கட்சியாக இருந்த கு.ப.கிருஷ்ணனின் "தமிழர்பூமியும்" குழ.செல்லையாவின் "தமிழ்நாடு முத்தரையர் சங்கமும்" அங்கம் வகிக்கிறது.
அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தமாகாவின் திருஞானசம்பத்தம் (முத்தரையர்) எதிர் வேட்பாளர் அவரிடம் 28659 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார்.
தொடர்ச்சியாக அரசியலில் பயணப்பட்டாலும் பெரிதாக எதையும் அவருக்காகவோ ,அவர் சார்ந்த சாதிக்காகவோ சாதித்துவிட முடியவில்லை அதே நேரம் அவரை தவிர்த்துவிட்டு முத்தரையர் வரலாற்றை எழுதிவிடவும் முடியாது.
நினைவுகளுடன்...
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

புதன், 22 நவம்பர், 2017
செவ்வாய், 21 நவம்பர், 2017
தமிழக அரசின் புதிய பாடத்திட்ட வரைவு
தமிழக அரசின் புதிய பாடத்திட்ட வரைவு இந்த இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள், இதில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் கலை மற்றும் கட்டிட கலை (Art and architecture TamilNadu) என்ற தலைப்பில் "பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர மற்றும் நாயக்கர்கள்" அதனோடு சேர்த்து "குடைவரை கோவில்கள்" என்று பாடதிட்டத்தில் இணைக்க இருக்கிறார்கள், இதில் பல்லவர், சோழர், பாண்டியர், இவர்களுக்கு சற்றும் குறைவில்லாத பேரரசாக வீற்றிருந்த "முத்தரையர்கள்தான்" இந்த குடைவரை கோவில்களை எடுப்பித்தவர்கள், மேற்சொன்ன அரச மரபினரை பெயரோடு குறிப்பிடும்போது "முத்தரையர்" மட்டும் , குடவரையாக சுருங்கி போனதுதான் மர்மம் புரியவில்லை....
அதேபோல வட இந்தியாவில் அத்தனை இராஜ வம்சங்களையும் இந்த பாடபுத்தகத்தில் இடம்பெற செய்யும்வண்ணம் இந்த வரைவு இருக்கிறது, ஆனால் மருத்துக்காககூட "முத்தரையர்" பற்றி இல்லை...
இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை (நாகரீகமான முறையில் வலியுறுத்தலாக)http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx
இந்த இணையதளத்தில் இருக்கும் "கருத்து கேட்பு படிவத்தில்" பூர்த்தி செய்யுங்கள்.
இந்த இணையதளத்தில் இருக்கும் "கருத்து கேட்பு படிவத்தில்" பூர்த்தி செய்யுங்கள்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

திங்கள், 6 நவம்பர், 2017
விமான நிலையம்
விமான நிலையம்
வசதி படைத்தவன் முதல் வசதி படைத்துவிட வேண்டும் என்று பாலைவன நாடுகளுக்கு பறப்பவன்வரை கண்களில் கனவுகளோடு ஏறி இறங்கும் விமானங்களையே ஆச்சர்யமோடு பார்க்கும் அழகிய இடம் "விமான நிலையம்" ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் பின்னால் சில கண்ணீர் கதைகள் இருக்கும், ஆசையாசையாய் கட்டிய வீடுகள் இருந்த இடங்களில் விமான சக்கரங்கள் சுகமாய் ஓடிக்கொண்டு இருக்கும்.
விமான நிலையம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளம், ஏறி இறங்கும் விமானங்களின் எண்ணிக்கையே அந்நாட்டின் செல்வசெழிப்பை பறைசாற்றும். விமான நிலையம் என்பது ஏதோ ஒரு ஊரின் சந்தைமடமோ, பேருந்து நிலையமோ அல்ல....
அப்படியான விமான நிலையத்துக்கு ஒரு பெயரை சூட்டினால் அது உலகளவில் கவனத்தை பெரும், அப்படி ஒரு விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" என்று பெயர் சூட்டினால் அது வரலாற்றில் இரட்டிப்பு செய்யப்பட்ட ஒரு மாமன்னருக்கு, அவரின் வழிதோன்றலாய் மாபெரும் ஜனசமுத்திரமாய் இருக்கும் "முத்தரையர்" மக்களுக்கு உலகளவில் மிகப்பெரிய அங்கிகாரம் கிடைத்துவிடும்.
இருக்கும் எல்லா விமான நிலையங்களுக்கும் ஒரே பெயரை சூட்டிவிட முடியுமா ? அது நடைமுறை சாத்தியமா ? கோரிக்கை ஒன்றை / விருப்பம் ஒன்றை தெரிவிக்கும் முன்பு அறிவு சார்ந்த மக்களிடம் கருத்துரு பெறாமல் தான் தோன்றிதனமான கோரிக்கைகளுக்கு எவ்வளவு பலம் கிடைத்துவிடும் ?
திருச்சி விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை சூட்ட வேண்டும். இது ஒரு கோரிக்கை இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்க பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ஒரு அறிக்கைவிட்டார், அத்தோடு முடிந்துவிட்டது, இதற்காக அடுத்தகட்ட திட்டமென்ன ? இந்த கோரிக்கைக்காக மக்கள் ஆதரவு திரட்டுதல், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துதல், ஒத்த கருத்தினை உருவாக்குதல் எதுவுமே எனக்கு தெரிந்து இதுவரை கிடையாது, திருச்சி விமான நிலையத்துக்கு வேறு எந்த பெயரையும் சூட்டகோரி இதுவரை எந்த கோரிக்கையும் எழுந்ததாக தெரியவில்லை, ஆக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆட்சிபரப்புக்கு உட்பட்ட, அருகாமை விமான நிலையமான திருச்சி விமான நிலையத்துக்கு பெயர் சூட்டகோருவது ஒரு நியாயமான கோரிக்கை..
அதேபோல மதுரை விமான நிலையத்துக்கும் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன் வைக்கிறார்கள், அது எவ்வளவு தூரம் சரியான கோரிக்கை, விமான நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் "முத்தரையர்கள்" என்பதனால் இந்த கோரிக்கைக்கு ஒரு வலு சேர்கிறது, ஆனால் "பெரும்பிடுகு முத்தரையர் பெயரை விடுத்து" "கண்ணப்பநாயனார் விமான நிலையம்" என்று பெயர் சூட்ட கோரினால் இரு விமான நிலையங்களுக்குமான கோரிக்கையில் ஒரு வித்தியாசம் இருக்கும், அதேபோல ஹிந்துத்துவா பாஜகவின் கவனத்தையும் எளிதில் பெற முடியும்.
இதே மதுரை விமான நிலையத்துக்கு "முத்துராமலிங்க தேவர்" பெயரினை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை "முக்குலத்து மக்கள் / அமைப்புகளையும் தாண்டி" இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் சுப்பிரமணியசுவாமி, தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோரும் முன்வைக்கிறார்கள், ஒருவேளை நாளை திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் இந்த கோரிக்கையை ஒட்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி "முத்துராமலிங்க தேவர்" பெயரினை சூட்டிவிடுவார்கள்.
அதேபோல மதுரை விமான நிலையத்துக்கு பள்ளர் சமூகமும் "தியாகி இம்மானுவேல் சேகரனார்" பெயரினை வைக்க கோரிக்கை வைத்திருக்கிறது, அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை..
ஆனால்...
கடந்தகால வரலாற்றை பார்த்தால் பள்ளர் சமூகத்தை குறைத்து மதிப்பிட முடியாது 1997 ஆம் ஆண்டு வீரர் சுந்தரலிங்கனார் பெயரை போக்குவரத்து கழகத்துக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களும் / கலவரங்களும் நடந்து தென் தமிழகமே பற்றி எறிந்தது, இந்த போராட்டத்தின் விளைவாகவே அன்று மாவட்ட தலைநகரங்கள் (திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் உட்பட), போக்குவரத்து கழகங்களின் பெயர்களை அதிரடியாக நீக்கியது அன்றைய திமுக அரசு... ஆக பள்ளர் சமூகத்தின் கோரிக்கை ஏற்க்கப்படாத பட்சத்தில் அது வேறுவிதமான போராட்டத்தை அந்த சமூகம் முன்னெடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.
ஆக போட்டியே இல்லாத திருச்சி விமான நிலையமா ? போட்டிகளோடு கலவரம் சூழ்ந்த மதுரை விமான நிலையமா ? எதற்கான போராட்டத்திற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும், கோரிக்கையினை வலுப்படுத்த வேண்டும் ?
விவாதியுங்கள்

சனி, 21 அக்டோபர், 2017
தமிழனின் கட்டிடக்கலை அறிவியல்......
பண்பாட்டியல் வளர்ச்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உச்சத்தைத் தொட்ட தொல்குடி தமிழினம் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அந்த வகையிலே கலை, அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களில் இன்றளவும் வியப்போடு உலகே நிமிர்ந்து பார்க்கும் சாதனைகளோடு நுண்ணிய கூறுகளை உள்ளடக்கிய கட்டிடக்கலை பற்றியதே இந்தக் கட்டுரை.
இங்கு கட்டிடக்கலை என்றாலே அதனுடன் சிற்பக்கலையும் , ஓவியக்கலையும் பிரிக்க முடியாதவையாகிப் போகின்றன. கட்டிடக்கலை என்றால் கோயில்களின் கட்டிடக்கலையைத்தான் கூறமுடிகிறது.
ஏனெனில் அரசர்கள் வாழ்ந்த மாளிகைகளைப் பற்றியோ பொதுமக்களின் வீடுகளைப் பற்றியோ நமக்கு நேரிடைச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. கற்களை ஒன்றோடு ஒன்றாக அடுக்கி அமைக்கும் கோயிற்பணி பல்லவர், பாண்டியர் காலந்தொட்டு இந்நாள் வரை தொடர்ந்து நிலவி வருகிறது.
கோயிற் கட்டிடக்கலை என்றால் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து நம்மால் கூறமுடியும்.
குடைவரை கோயில்கள்:
தமிழகத்தின் தென்பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி என்னும் ஊரின் குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானதாகும். இது பாண்டியர்களது படைப்பாகும். இதனை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றைப் பல்லவர்கள், பாண்டியர்கள், முத்தரையர் ஆகியோர் அமைத்திருக்கின்றனர். கி.பி. 9ஆம் நூற்றாண்டோடு குடைவரைக் கோயில்கள் அமைக்கும் பணி நின்று விட்டது.
தனித்தனி குன்றுகளைச் செதுக்கிக் கோயிலாக்கும் முறை பல்லவர், பாண்டியர் காலத்தில் இருந்திருக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதங்களும் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயிலும் முறையே அவர்களது படைப்புகளாகும். இம்முறை கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலேயே நின்றுவிட்டது.
அங்கோர்வாட் கோவில்:
உலகின் மிகப்பெரிய கோவிலை இரண்டாம் சூரியவர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் கட்டியுள்ளான். 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே மிகப்பெரியது.
இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள் மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும் பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது.
மூன்று சதுர கூடங்கள் மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது.
மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடு கூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது.
இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த படைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம் உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது.
மண்டபங்களின் கூரைகள் பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன.
கல்லணை:
தமிழ்நாட்டில் உள்ள உலகப் பழமை வாய்ந்த அணை இதுவாகும். காவிரி மீது கட்டப்பட்டுள்ள இந்த அணை திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது.
அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆகப் பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும் வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும்.
அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறது. இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிகப் பழமையானது.
தற்போதும் புழக்கத்தில் உள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. இப்படிப்பட்ட கல்லணை நீளம் 1080 அடியும், அகலம் 66 அடியும், உயரம் 18 அடியும் உடையது. இது நெளிந்து, வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.
கல்லும், களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு ஆகும். சுமார் 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது மாபெரும் அதிசயமாகவே உள்ளது. இவ்வாறு ஈராயிரம் ஆண்டுகள் முடியப்போகும் நிலையிலும் நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி நீர் செல்லும் காவேரியை கரைபுரண்டோடும் காற்றாற்றைத் தடுத்து கரிகாலன் என்ற தமிழன் அணை கட்டிய தொழில்நுட்பத்தை இன்றைய கட்டிடத் தொழில்நுட்ப வல்லுனர்களாலும் கண்டறிய இயலவில்லை.
தஞ்சை பெரிய கோவில்:
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தஞ்சை பெரிய கோயிலை முதலாம் இராஜராஜ சோழன் 11 ஆம் நூற்றாண்டில் கட்டுவித்தான்.
1003–1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 ஆண்டு நிறைவடைந்தது. கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம் 15 தளங்கள் கொண்ட இக்கற்கோவிலை ராஜ ராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது இன்றுவரை புரியாத புதிரே. கோவிலின் கடைக்கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.
சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தத்தைக் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாக்கியுள்ளனர்.
இத்தகையதோர் பிரம்மாண்டமான கோயிலை வெறும் 7 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளனர். கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கமாகும். இக்கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்குகிறது.
எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும், தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோயில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும், கோர்த்தும் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.
இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுகள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல சோழ கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை லிங்கங்கள் தொடர்ந்து கதிர்வீச்சுகளின் குவி மையமாகச் சிறந்து விளங்குகின்றன.
இதை யுனெஸ்கோ இந்திய வழித்தோன்றல் சின்னமாக அறிவித்துள்ளது.
ஐராவதீசுவரர் கோவில்:
ஐராவதீசுவரர் கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது.
இக்கோவில் இரண்டாம் ராஜ ராஜனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்களில் இதுவும் ஒன்று. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலை அழகிய கலைக்கூடம் எனலாம்.
நூறு கோயில்களுக்குச் சென்று அதன் சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோயில் நமக்குத் தருகிறது. இக்கோயிலில் எங்கும் சிற்பமயம். ஓவ்வொரு சிற்பத்திலும் ஒரு கதையோ, காவியமோ பொதிந்திருக்கிறது. முப்புறம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம், யானையை வதம் செய்து அதன் தோலைத் தன் மீது உடுத்திக் கொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர் (கஜசம்கார மூர்த்தி) கதை இன்னொரு சிற்பம், அடிமுடி தேட வைக்கும் அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம். இப்படிப் பல சிற்பங்கள் உள்ளன.
இக்கோயிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகள் “சரிகமபதநி” எனும் ஏழு நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன. தக்கையாகப் பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழீசுவரம் கோயில் ஆகிய இரண்டையும் விட அளவில் சிறியதாய் இருப்பினும் சிற்பிகளின் கனவு என்றழைக்கப்படும் அளவிற்கு இதில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுதியாய் உள்ளது. தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாக் கார்ல்சேகன் என்ற வானவியல் அறிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்:
இக்கோயில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்னும் ஊரில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இவர் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் இராஜ ராஜ சோழனின் மகன் ஆவார்.
கி.பி. 1035 ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 250 ஆண்டுகளுக்கும் மேலாக கங்கை கொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. மூவர் உலா, தக்கையாகப் பரணி போன்ற நூல்களின் பல சமகால இலக்கியங்களில் கங்கைகொண்ட சோழபுர நகரம் மற்றும் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
11 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவரான கம்பர் இயற்றிய கம்ப இராமாயணத்தில் அவரது அயோத்தி நகர வருணனைகளுக்கு கங்கைகொண்ட சோழபுர நகரமைப்புதான் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டுமென சில அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் நூலிலும் இத்தகைய ஒற்றுமையைக் காண முடிகிறது. சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விவரங்களைக் காணலாம். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலும், இக்கோயிலும் திராவிடக் கட்டிடக்கலையின் உச்சநிலையின் வெளிப்பாடாக விளங்குவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இக்கோயிலில் ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் அமைந்துள்ளது.
இராமேஸ்வரம் கோவில்:
கடல் நடுவே இராமேஸ்வரம் தீவில் மலைகளோ, பாறைகளோ கிடையாது. இராமேஸ்வரம் கோவில் 1500 ஆண்டு பழமையானது.
1212 மிகப் பெரிய தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம் மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாக்கியிருக்க முடியும்? பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற்கடந்து எவ்வாறு இராமேஸ்வரம் கொண்டு சென்றிருக்க முடியும்? உலகிலேயே மிக நீளமான பிரகாரங்களை கொண்டது இக்கோயில்.
இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி இக்கோயிலின் உலகப் புகழ் பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத்தை 1740-1770 இடைப்பட்ட காலத்தில் கட்டி முடித்தார்.
முடிவுரை:
நாம் மேற்கண்ட அனைத்தும் கதையோ, கற்பனையோ அல்ல. பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்களின் அறிவியல் திறத்தையும், அவர்களின் கலை அறிவையும் பறைசாற்றுவதே
இன்று எத்தனை அவதார்களை வேண்டுமானாலும் நம்மால் எடுக்க முடியும். ஆனால் மேற்கூறியவற்றுள் ஒன்றன் மாதிரியையாவது நம்மால் உருவாக்க முடியுமா? பண்பாட்டியல் கூறுகளின் மீட்டுருவாக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
அதுவே தொடர்ந்து சிந்தனை சார்ந்த அத்தகைய ஆற்றலை மேலும் வளர்த்தெடுக்கும். அப்போதுதான் பழம்பெருமை பேசுவதன் சரியான பயனை அடைய முடியும்.
News Source : தேடிபார் இணையதளம்
கரூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் - போலீஸார் குவிப்பு
கரூர்; அருகே மேட்டுமகாதானபுரம் என்ற கிராமத்தில் இருசமூகத்தினரிடையே (முத்தரையர், தேவேந்திரகுல வேளாளர்) மோதலில் 3 பேர் சிறுகாயங்களுடன் 8 பேர் கைது - போலிசார் குவிப்பு – பதற்றம் நீடிப்பு !!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டுமகாதானபுரத்தில் நேற்று முன்தினம் இரவு தேவேந்திர வேளாளர் சமூகத்தினர் பசுபதிபாண்டியன் பேனரை வைத்திருந்ததை முத்தரையர் சமூகத்தினர் கிளித்ததாகவும், பட்டாசு வெடித்தபோது தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் இருசமூகத்தினரிடையே அடிதடி மோதலில் 3 பேருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 8 பேரை லாலாப்பேட்டை போலிசார் கைதுசெய்து திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதனால் அந்தபகுதியில் பதற்றத்துடன் பல கடைகள் மூடப்பட்டு காணப்படுகிறது. குளித்தலை டி.எஸ்.பி. தலைமையில் போலிசார்கள் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் கிராமமே வெறிச்சோடியும், பதற்றம் மற்றும் பரபரப்புடன் காணப்பட்டு வருகின்றன.
News Source : Karur Boomi

திங்கள், 16 அக்டோபர், 2017
பல்லவர்களும் பாண்டியர்களும் கொடூரமாக மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள்
1914ம்
ஆண்டு நேசநாடுகளுக்கும், மைய
நாடுகளுக்கும் இடையே உலகம் முழுவதும் நடைபெற்ற உலகப் போர் இல்லை இது.. அதற்கு பல
வருடங்கள் முன்பாகவே, கிபி870 களில் உலகின் முக்கால்வாசி பகுதிகளை
ஆண்ட தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற மிகப்பிரம்மாண்ட போர். திருப்புறம்பியம் போர் பற்றியும், போர் நடைபெற்ற இடங்களின் தற்போதைய
நிலைபற்றியும் இந்த பதிவில் காண்போம்.
உலகப்போர்
உலகமுழுவதும் நடைபெற்ற போர்கள்தான் உலகப்போர் என்று அழைக்கப்படுகிறது. உலகத்துக்கே
தெரியாமல், ஏன்
தமிழர்களில் இன்னும் பலருக்கு தெரியாமல் தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற பிரம்மாண்ட
போரா உலகப்போர் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பல்லவர்களின் அழிவு பல்லவ
சாம்ராஜ்யத்தின் அழிவு என்பது இந்த போரில்தான் முற்றுபெற்றது. அதற்குபின்
பல்லவ மன்னர் என்று யாரும் வரலாற்றில் இல்லை என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.
திருப்புறம்பயம்
போர் திருப்புறம்பயம் போர் கிபி 800 களில்
சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.
இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை
மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தியிருந்தனர்.
தஞ்சாவூர்
முத்தரைய குறுநில மன்னர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக்
கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மாறி மாறி
கூட்டணி தமிழகத்தின் தற்போதைய அரசியல் கட்சிகளைப் போல முத்தரையர்களும் பல்லவர்களுடனும்
பாண்டியர்களுடனும் மாறி மாறி சேர்ந்துகொண்டனர் என்பது கல்வெட்டுகள் மூலமாக
தெரியவருகிறது. தங்கள் நாட்டுக்கு எது நல்லது என்று மக்களுடன் கலந்து
முடிவெடுப்பார்கள் என்றும் தெரிகிறது. தஞ்சையை இழந்த முத்திரையர்கள்
பாண்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால்,
முத்தரையர்கள் தஞ்சையை இழந்தனர். பல்லவர்களின்
விசுவாசவர்களாக இருந்த சோழர்களுக்கு தஞ்சை கிடைத்தது. மீண்டும் துளிர்த்தெழுந்த
பிரம்மாண்ட சோழ வம்சம் இதன்பின்னர் நடந்த நிகழ்வுகளில்தான் சோழர்கள்
எதிர்பார்த்திராத அளவு பிரம்மாண்டமாக முன்னேறினர்.
விஜயாலசோழன்
இந்திய வரலாற்றின் மிக முக்கிய மன்னரானார். முத்தரையர்களுக்காக போரிட்ட
பாண்டியர்படை முத்தரையர்களுக்கு ஆதரவாக பாண்டியர்கள் விஜயாலனுக்கு எதிராக போரிட
சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றனர். திருப்புறம்பியத்தில் திரண்ட பிரம்மாண்ட
போர்ப்படை பாண்டியர்கள் சோழநாட்டின் வடகரையிலுள்ள இடவை (காவிரிக்கு வடகரையிலுள்ள
பகுதிகள்) அணிகள் இரண்டு அணிகளாக போரிட்ட இந்த நிகழ்வில், பல்லவமன்னர்கள் நிருபதுங்கவர்மன், அபராஜித வர்மன், கங்க மன்னன் பிருத்விபதி 1, சோழ மன்னர்கள் விஜயால சோழன், ஆதித்த சோழன் ஆகியோரும் ஒரே அணியில்
இருந்தனர். பாண்டியர்களின் அணியில் முத்தரையர்கள் இருந்தனர். இப்போரில் முதலாம்
பிருத்விபதி உயிரிழந்தார். ஆனாலும் பல்லவர்களின் அணியே வெற்றி பெற்றது. பல்லவப்
பேரரசின் கடைசி மன்னன் அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு
ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம்
பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 862-63
ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன்
வரகுண வர்மனை தோற்கடித்தான்.
இருப்பினும்
அதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது
அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது. சோழர்கள் எழுச்சிக்கு காரணம் சோழமன்னன்
ஆதித்த சோழன் பல்லவமன்னன் அபராஜித வர்மனை கொன்று மொத்த ஆட்சியையும் கைப்பற்றினார்.
இதன்பின்னர் சோழ ராஜ்யம் அபதிவிதமான எழுச்சியை கண்டது. பெரும்போர் நடந்த இடம் இந்த
பெரும்போர் நடந்த இடம் காவிரியின் வடகரை. திருப்புறம்பியம் என்று
அழைக்கப்பட்டாலும், இன்னும்பல
இடங்கள் அங்குள்ளன. அவற்றில் இப்போது சுற்றுலாத் தளமாக உள்ள இடங்களைப் பற்றி
பார்க்கலாம் கொள்ளிடம் காவிரியிலிருந்து பிரிந்து ஸ்ரீரங்கத்தை தீவாக்கி, மேற்கு நோக்கி பாய்ந்து
வங்கக்கடலில் கலக்கிறது கொள்ளிடம் ஆறு. இதுவே ஒரு சுற்றுலாத் தளமாகும். சுற்றுலாத்
தளங்கள் கொள்ளிடத்தைச் சுற்றி இரண்டு மணி நேரத்தொலைவில் பல்வேறு சுற்றுலாத்
தளங்கள் அமைந்துள்ளன. சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகியன
பெரும்பாலும் அறிந்த சுற்றுலாத் தளங்கள்.
திருப்புறம்பியம்
போர் நடைபெற்ற இடங்கள் கும்பகோணத்திலிருந்து அரைமணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது
இந்த இடம். இங்குதான் போர் நடைபெற்றதற்கான நினைவுச் சின்னங்கள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல் பல்லவ ஆட்சியின் கடைசி அரசனான அபராஜித வரமன் இங்குதான்
கொல்லப்பட்டான்.
News Source : NATIVE PLANET

வெள்ளி, 13 அக்டோபர், 2017
கவனியுங்கள்...!
கவனியுங்கள்...!
"முத்தரையர் சமுதாயத்தில்" தொடர்ச்சியாக பத்தாண்டுகள் சமுதாய பணி செய்த ஒருவரை அணுகி ஒரு கேள்வியை முன்வையுங்கள்.
"உங்கள் சமூகப்பணி எப்படி இருக்கிறது ?" என்று
அவரின் பதில் பெரும்பாலும் ஏதோ ஒரு கசப்பான அனுபவம் கொண்டதாகவும், தன்னால் எதையும் சாதித்துவிட முடியாத ஆதங்கத்தையும், தான் தொடர்ச்சியாக அப்பணிகளை மேற்கொள்ள விரும்பாததையும், வார்த்தைகளில் சற்று வருத்தம் மேலிடவே பேசுவார்கள்.
அதற்கு காரணங்கள் பல இருக்கலாம் அது புரிதலற்ற மக்கள், அரசியல் ஏமாளிதனம், நயவஞ்சக தோழமைகள், உழைப்பிற்கான மரியாதையின்மை, ஈகோ,புறக்கணிப்பு, இவரைவிட அவர் சரி என்று காலத்துக்கு காலம் மாறும் மக்களின் மனநிலை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
எடுத்த நிலைப்பாடுகள் எல்லோருக்கும் சரியானதாக இருந்துவிடுவதில்லை, சொல்லப்போனால் நிலைப்பாடு எடுக்கும்போது அது என்ன பின்விளைவுகளை தரும் என்றுகூட ஒருவரும் அறிந்திருப்பதில்லை.
ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களை காட்டி உண்மையான சமுதாய பற்றாளர்களை புறக்கணிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறது "முத்தரையர்" சமூகம்.
இன்று யாரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்களோ "அவர்களையே அவர்களே அவர்களின்" கால்களில் போட்டு மிதித்துவிட்டு அடுத்ததை தேடி ஓடிக்கொண்டே "உழைப்புகளை" உதாசினப்படுத்துகிறார்கள்.
யார் நல்லவர், எப்படி அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்பதற்கான எந்த அளவீடும் இல்லாமலே ஒவ்வொரு மனிதருக்கும் அவமரியாதைகளை தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
உணர்வோடு சமுதாய பணி செய்ய வருபவர்களை புறக்கணித்து, அவர்களின் உழைப்பினை உதாசினப்படுத்திவிட்டு அடுத்து அடுத்து என்று பயணிப்பதனாலாவது எதாவது பலன் பெற்றிருக்கிறதா ? முத்தரையர் சமுதாயம் என்றால் அது நிச்சயமாக கிடையாது.
உணர்வோடு சமுதாயப்பணி செய்தவர்கள் மீது சொல்லப்படும் எந்த குற்றசாட்டினையும் முழுமையாக ஆய்வு செய்யுங்கள், அவர்களின் கடந்தகால செயல்பாடுகளை அலசிபாருங்கள், குற்றசாட்டுகளை தொகுத்து அவர்களிடமே விளக்கமும் கேளுங்கள்.
எதிர்காலத்தில் உங்களையும் இப்படி புதிதாக வந்தவர்கள் உதாசினப்படுத்திவிடாமல் காத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு : இது உண்மையான சமுதாய பற்றாளர்களுக்காக, உழைப்பவர்களுக்காக எழுதியது, இதே பத்தாண்டு காலத்துக்குள் சிலர் பெரும் வளர்ச்சியை பெற்றிருப்பார்கள், அவர்களிடம் மேற்சொன்ன எந்த கசப்பும் வார்த்தைளில் கூட இருக்காது, காரணம் அவர்கள் "அப்படியான பற்றாளர்கள் அல்ல" அவர்களின் நோக்கமும் "சமுதாய பணி அல்ல்து தொண்டு அல்ல" நேரம் கிடைக்கும்போதெல்லாம் விலைக்கு விற்பவர்கள். வாட்ஸ் ஆப்பில் கும்பல் சேர்த்து வசூல் வேட்டை நடத்தி பிழைப்பவர்கள், எதேதோ ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ச்சியாக மக்களை சிந்திக்கவிடாதவர்கள்.
இறுதியாக ::
உண்மையான உணர்வாளர்களை "எவனோ" சொன்னான் என்று உதாசினப்படுத்திவிடாமல் காத்துக்கொள்ளுங்கள், சமுதாயத்துக்கு எதாவது நன்மைகள் கிடைத்திட செய்யுங்கள்.
நன்றி.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்