வியாழன், 27 டிசம்பர், 2012

கொங்காளு முத்தரசர்

சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே. 
 
(க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை ஆதரிப்பவர்களும் வீரத் தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.

வரலாறு: முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும் ஆண்டிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக் கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக் கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன் மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின் சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம். திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.

இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங் காணலாம்.

(மேற்)
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச் சோறார்வர் கயவர் கருணையைப்
பேரூ மறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரு மரிதாய் விடும்.

மல்லன்மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாஞ்
செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.
(நாலடி)

இம்முத்தரையர் கொங்குநாடும் ஆண்டிருக்கிறார்கள் என்பதைத் “தமிழறியும் பெருமாள் கதை” என்னும் புத்தகத்தில் –

“அங்காடி கொள்ளப்போ யானை கண்டேனணி நகரமன்றியிலே சேனை கண்டேன். கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்”

எனக் கூறப்பட்டுள்ளது காண்க. கொங்கு நாட்டுள் அங்குமிங்குமாக அருகி வாழ்கின்ற வலையர் என்னும் ஒரு வகுப்பினர் முத்தரசர் கூட்டத்தாரெனத் தங்களைப் புகழ்ந்து கொள்கிறார்கள்.

ஒரு விடுகதை
-
அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்தலுற்றேன் —–நான் யார்?

-
விடை: சதுரங்கம்

Read more: http://noozly.com/topic/MUTHURAJA#ixzz2GIBn3dGk

முத்தரையர்கள் பற்றிய முதல் செப்பேடு கண்டெடுப்பு

 ஈரோடு: கோவை மாவட்டம் கணியூரில் கிடைத்த செப்பேடு முத்தரையர்கள் பற்றிய அரிய தகவல்களை கொண்டுள்ளது. கோவை மாவட்டம் கணியூரில் உள்ள பழனி முத்தரையர் மடத்தில் உள்ள செப்பேடு இதுவரை படித்து ஆய்வு செய்யப்படாமல் இருந்தது. முத்தரையர் தோற்றம், சமூக பெருக்கம், சோழர், பாண்டியர் தொடர்பு, தமிழகம் முழுவதும் அவர்கள் பரவியது,

அனைவரும் ஒன்று கூடி பழனியில் ஒரு மடம் ஏற்படுத்தி, அதற்கு கொடையளித்த விபரம் ஆகியவை அந்த செப்பேட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது. செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு மையத்தலைவர் புலவர் ராசு ஆய்வு செய்தார். செப்பேட்டில் கூறியிருப்பதாவது:

தேவேந்திரன் முதலான தேர்வர்களும், தெய்வ ரிஷிகளும், முனிவர்களும், கின்னரர், கிம்புருடர், அஷ்ட பைரவர், சித்தி வித்யாதரர், ஆயிரத்தொரு சக்திகள், கருட கந்தருவர், அட்ட திக்குப் பாலகர்கள் ஆகியோர் கூடி சிவபெருமானுக்கு தேரோட்டினர். அப்போது பேரண்டப்பறவை ஒன்று தேரை தடுத்து நிறுத்திவிட்டது.

சிவபெருமான் வலது தோளில் ஒரு வியர்வை முத்து தோன்றியது. அந்த முத்தை பார்வதி பூமியில் விட, அது இரண்டு கூறாகப்பிரிந்து, அதில் இரண்டு வன்னிமுத்தரசர் தோன்றினர். அவர்கள் தேரை நிறுத்திய கண்டப்பேரண்டப் பறவையை கொன்றனர். பெரிய வன்னி முத்தரசன் தெய்வலோகக்

காவலுக்கும், சின்ன முத்தரசன் ஸ்ரீரங்கம் காவலுக்கும் நியமிக்கப்பட்டனர்.

கோப்புலிங்க ராஜாவின் மகளை திருமணம் செய்து கொண்ட சின்னமுத்தரசனுக்கு நல்ல நாச்சி என்ற மகளும், சென்னிய வளநாடன், சேமன், அகளங்கன், ராசாக்கள், நயினார் என்ற மகன்களும் பிறந்தனர். சகோதரி நல்ல நாச்சியைப் பாண்டியனுக்கு மணம் முடித்தனர்.

சோழரிடம் பணியாற்றிய இவர்கள் வீரத்தை மதித்த பாண்டியர், ஆட்சிப் பொறுப்பு கொடுத்தனர். வன்னி முத்தரசர்கள் பல்கிப் பெருகி தமிழகம் எங்கும் பரவி வாழ்ந்தனர். சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு நாட்டை சேர்ந்த 300 ஊர்களை சேர்ந்த வன்னிமுத்தரசர்கள் அனைவரும் கி.பி., 1674ம் ஆண்டு தைப்பூசம் அன்று பழனியில் கூடினர்.

திருஆவினன்குடிக்கும் கீழ்புறம், சரவணப் பொய்கையின் தென்மேல்புறம் முத்தரையர் மடம் ஒன்றை நிறுவி, குழந்தைவேலு உடையான் என்பவரை மடத்து நிர்வாகியாக நியமித்தனர். பெரிய ஊருக்கு பத்து பணமும், சின்ன ஊருக்கு ஐந்து பணமும், பண்ணையத்துக்கு இரண்டு பணமும், ஆள்காரர் ஒரு பணமும், திருமணத்தில் மாப்பிள்ளை, பெண் வீட்டார் இரண்டிரண்டு பணமும், தேருக்கு ஒரு பணம் என மடத்துக்கு கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

குற்றத்துக்கு விதிக்கப்படும் அபராதப் பணத்தில், மூன்றில் ஒரு பங்கு மடத்துக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

மடத்துக்கு வருவோருக்கு உப்பு, ஊறுகாய், நீராகாரம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

புலவர் ராசு கூறுகையில், செப்பேட்டை ராமசாமி கவிராயர் என்பவர் எழுதிய விபரமும், முத்தரையர்கள் வாழ்ந்த ஊர்கள், முக்கியமான தலைவர்கள் பற்றிய விபரமும் அதில் கூறப்பட்டுள்ளது. முத்தரையர் சிறப்புகளை பற்றி கூறும், இந்த செப்பேடு முத்தரையர் சமூகம் பற்றிய முதல் செப்பேடு,” என்றார்.

Regards,
ப.அனந்தகுமார்.
 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

முத்தரையர் வேட்பாளரை அறிவிக்கணும் : : "சங்கம்' கோரிக்கை

திருச்சி: "லோக்சபா தேர்தலில் திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் முத்தரையர் வேட்பாளர்களையே, அனைத்து கட்சியினரும் அறிவிக்க வேண்டும்' என, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. நிர்வாகி தங்கவேல் தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் பெரியகோபால் வரவேற்றார். பொதுச்செயலாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்."சங்க நிர்வாகி தேர்தல் நடத்திட ஏதுவாக, 12 பேர் கொண்ட அமைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஃபிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தேர்தல் நடத்துவது. தமிழகத்தில் வேறு பெயர்களில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு நுழைவதை தடுத்து நிறுத்த, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். திருச்சி லோக்சபா தொகுதியில் பல்வேறு பட்ட பெயர்களில், 2.80 லட்சம் முத்தரையர் வாக்காளர்களும், பெரம்பலூர் லோக்சபா தொகுதியில், 3.60 லட்சம் முத்தரையர் வாக்காளர்களும் உள்ளனர். திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் தனி பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முத்தரையர் வேட்பாளர்களை அனைத்து கட்சியினரும் அறிவிக்க வேண்டும்' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, விஸ்வநாதன், சங்கர், இன்ஜினியர் பெருமாள், வக்கீல் உலகநாதன், கவிஞர் லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

NEWS FROM : DINAMALAR

திங்கள், 24 டிசம்பர், 2012

தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் சில்லறை வணிகர்களைக் காக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் மாவட்ட அமைப்புக் குழுத் தலைவர் மு. தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
டெங்கு மற்றும் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். மின்வெட்டை முறையாக முன்னறிவிப்பு செய்து மேற்கொள்ள வேண்டும். உறையூர் காவல் நிலையம் அருகிலுள்ள பூங்காவைச் சீர்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் உணவின் அளவு, தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
 
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கல்லணைக் கிளிக்கூடு பகுதியில் அரசு நிலங்கள் உள்ளதால் நீச்சல் குளத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா அமைக்க வேண்டும். லால்குடி - கிளிக்கூடு இடையே கொள்ளிடத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
சங்க மாநிலப் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
NEWS FROM : DINAMANI

வெள்ளி, 21 டிசம்பர், 2012

சிறைப் பறவை

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று சிறையிலிருந்து வெளியே வந்த திரு.ஆர்.வி அவார்களின் புதல்வர் திரு. ராம்பிரபு அவர்களின் படம்




 
 
படங்கள் உதவி : SK பிரகதிஸ்

வியாழன், 20 டிசம்பர், 2012

மதுரை: அனைத்து சமுதாயங்கள் சார்பில் தொடர் முழக்க போராட்டம்-ராமதாஸ் பேட்டி

மதுரை, டிச. 20-

தலித் அல்லாத அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று மதுரை சின்னசொக்கிகுளம் ஜே.சி. ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் பி.டி.அரசக்குமார் முன்னிலை வகித்தார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் என்.ஆர்.தனபாலன் (தமிழ்நாடு நாடார் பேரவை), நாகராஜன் (கொங்குநாடு முன்னேற்றக்கழகம்), எஸ்.ஆர்.தேவர் (தேசிய பார்வர்டு பிளாக்), கிருஷ்ணமூர்த்தி (பார்க்கவ குல முன்னேற்ற சங்கம்), செல்வராஜ் (மூவேந்தர் முன்னேற்றக்கழகம்), காமராஜ் (ரெட்டி நலச்சங்கம்), பொற்கை நடராஜன் (அகில பாரத விஸ்வ ஜன சக்தி), பாரூக் (முஸ்லிம் லீக்), ராஜமாணிக்கம் (முத்தரையர் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சமுத்துவ சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஜாதியின் பெயராலோ, மதத்தில் பெயராலோ, பாகுபாடு காட்டப்படுவதை எவரும் விரும்பவில்லை. தற்போது பல்வேறு தரப்புகளில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு இருக்கிறது. மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்கக்கூடாது என்பது தான் அனைத்து சமுதாய தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் விருப்பம் ஆகும். ஆனால் சில தலைவர்கள், தங்கள் சுயலாபத்திற்காகவும், பழி வாங்குவதற்காகவும், எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்த தூண்டுகிறார்கள்.

வன்கொடுமைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதை பல்வேறு சம்பவங்கள் நிரூபித்து உள்ளன. நீதி மன்றங்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளன. எனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்யவேண்டும். இந்த சட்டம், தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ, கலப்பு திருமணங்களுக்கோ தடைபோடுவது சரியாக இருக்காது.

இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் நாடகங்களைத்தான் கண்டிக்கிறோம். காதல் நாடகங்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள், உற்சாகபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை தவறாக நடத்துபவர்கள் ஒரே கட்சியினர் தான். திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் கிடையாது. இந்த காதல் திருமணங்களால் ஏமாற்றப்படும் இளம்பெண்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே இதனை தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். காதல் நாடகங்கள் பற்றி இளம்பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம்பெண்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வலியுறுத்தி அனைத்து சமுதாயங்கள் சார்பில் ஜனவரி 24-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

THANKS TO : MALAIMALAR

அரசு தரப்பில் ஒரு சாட்சி இல்லை :கலவர வழக்கில் ஆர்.வி., விடுதலை

திருச்சி:
 
                     அரசு தரப்பில் ஒரு சாட்சி கூட ஆஜர்படுத்தப்படாததால், முத்தரையர் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் விடுதலை செய்யப்பட்டார்.கடந்த மே, 23ம் தேதி, பெரும்பிடுகு முத்தரையரின், 1,337வது சதயவிழாவையொட்டி, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அன்று மாலை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கத்தினர் சார்பில் மாலை, மரியாதை செலுத்த, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக, வேன், கார் போன்ற வாகனங்களில் வந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, கோட்டை, காந்திமார்க்கெட், கண்டோண்மெண்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் (ஆர்.வி.,), அவரது மகன்கள் ராம்குமார், பிரபு, மருமகன்கள் உள்ளிட்ட, 65 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். ராம்குமார் மீது குண்டர் தடுப்புச்சட்டமும் பாய்ந்தது.கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கின் தீர்ப்பு, திருச்சி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி ரகுமான், அரசு தரப்பில் ஒரு சாட்சி கூட ஆஜர்படுத்தாததாலும், குற்றம் நிருபிக்கப்படாததாலும், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.அதையடுத்து, விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். காந்தி மார்க்கெட், கண்டோண்மெண்ட் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகள்,இன்று வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, அவ்வழக்குகளின் நிலை குறித்து தெரியவரும்.
 
News From : DINAMALAR

திங்கள், 17 டிசம்பர், 2012

ஸ்டாலின் வரவேற்பு பேனர்கள்:நேரு உட்பட 8 பேர் மீது வழக்கு

திருச்சி: ஸ்டாலினை வரவேற்று ஃப்ளக்ஸ் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் அமைத்த, முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட, எட்டுபேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் லோக்சபா தொகுதி தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நேற்று முன்தினம் காஜாமலையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை வரவேற்று, மாநகரத்தில் பல்வேறு இடங்களில், சாலைகளை டிரில்லர் மூலம் பறித்து, கட்சிக்கொடிக்கம்பங்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகள், வரவேற்பு ஃப்ளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்கே.கே.,நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில், ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்திருந்த, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேரு, மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச்செயலாளர் குடமுருட்டி சேகர், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், வெங்கடேஷ், குமார் ஆகிய ஆறு பேர் மீது, 10 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.இதேபோல, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய, திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே வரவேற்பு வளைவு அமைத்த, பகுதிச்செயலாளர் காஜாமலை விஜய் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே, முத்தரையர் சிலையை மறைத்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்த, பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
 


வெள்ளி, 14 டிசம்பர், 2012

முத்தரையர்களை அவமதிக்கும் தி.மு.க

முத்தரையர்களை அவமதிக்கும் தி.மு.க
முத்தரையர் மக்களை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க, இன்று எமது பேரரசரையும் அவமதித்து இருக்கிறது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் பரந்துபட்டு வாழும் முத்தரையர்களுக்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவிக் கூட தராமல் அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வரும் தி.மு.க, இதுவரை ஆட்சியில் இருந்த போதும் / இல்லாதபோதும் :முத்தரையர்" சமூகத்திர்க்கு எதுவுமே செய்யாத தி.மு.க, எங்கெல்லாம் வெற்றிப் பெற முடியாதோ அங்கெல்லாம் எமது இன வேட்பாளர்களை நிறுத்தி "பலிகடா" ஆக்கும் தி.மு.க, இன்று இவ்வளவு துணிச்சலாக எமது மன்னரை அவமதிக்க துணிந்திருக்கிறது இதனை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது,இந்த செயலை இவர்கள் "முத்தரையர்" சமுகத்தின் மீது மட்டும்தான் செயல்படுத்த துணிவார்கள், இதே செயலை வேறு சமூகங்கள் மதிக்கும் தலைவர்களின் சிலைக்கருகே கூட செய்ய மாட்டார்கள், இந்த செயலை செய்த நபரின் மீது மட்டுமல்ல, இந்த செயலை செய்ய தூண்டியவர்கள் மீதும் தமிழக அரசு சட்டப் பூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும், இந்த செயலை கண்டித்ததோடு மட்டுமலாமல் சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுத்த "வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்திற்கு" இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், உடனடியாக "திராவிட முன்னேற்றக் கழகம்" வருத்தம் தெரிவிக்க வேண்டும்,இதே போன்ற அவமதிப்பை இனியும் செய்தால் "முத்தரையர்" சமுதாயம் பார்த்துக் கொண்டு இருக்காது என்று எச்சரிக்கிறோம்.
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

திருச்சி: முத்தரையர் சிலையை மறைத்து, ஸ்டாலினை வரவேற்று பேனர்

 
திருச்சி: முத்தரையர் சிலையை மறைத்து, ஸ்டாலினை வரவேற்று பேனர் வைத்த, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


திருச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், அண்ணா விளையாட்டரங்கு அருகே, நாளை திருச்சியில் நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரை வரவேற்று திருச்சி முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.வழக்கம்போல, சாலையில் டிரில்லர் மூலம் துளைபோட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டுள்ளது. ஒத்தக்கடை முத்தரையர் சிலையை சுற்றி கட்சிகொடிகளும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநில துணை செயலாளர் சம்பத்குமார், 27, என்பவர் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரில், "ஒத்தக்கடை முத்தரையர் சிலையை சுற்றிலும் தி.மு.க., கொடி நடப்பட்டுள்ளது. தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி, ஸ்டாலினை வரவேற்று பெரிய அளவில் "கட்-அவுட்' வைத்துள்ளார். இதனால் சிலை மறைக்கப்படுவதோடு, அவமதிக்கும் வகையில் உள்ளது' என கூறியுள்ளார்.இதையடுத்து, கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் சிகாமணி சம்பவ இடத்துக்கு சென்று பேனரை அகற்றினார். தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
News From (Thanks To) -DINAMALAR

வியாழன், 13 டிசம்பர், 2012

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை ஒன்றியம் வாரப்பூர் ஊராட்சி நெரிஞ்சிப்பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
மாநில பேச்சாளர் மூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் வீரையா, மாநில பொதுச் செயலாளர் சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில முன்னாள் பொருளாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர், மாணவரணி செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
.

NEWS FROM : DINAKARAN

செவ்வாய், 11 டிசம்பர், 2012

உறவுகளுக்கு வணக்கம்,

உறவுகளுக்கு வணக்கம்,

வருகிற 2013 ஜனவரி மாதம் 19 ந் தேதி பட்டுக்கோட்டையில் நடைப்பெறும் "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு" நிகழ்விற்க்கு தாங்களோ, தங்களின் பிரதி நிதிகளோ (உறவினர்கள் / நண்பர்கள்) கலந்துக் கொள்ள விரும்பினால் தங்களை தொடர்பு கொள்ள வசதியாக இந்த படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டுகிறோம்.



மேலும் விவரங்களுக்கு...



படிவம் :



Dear Relatives,

We are organized a “MUTHTHARAIYAR FRIENDS MEET” in PATTUKKOTTAI, on 19th January 2013, if you (or) your Representatives will attain this Meet, can you Please fill this form, it will help to co-ordinate this meet very well.

Thanks for your support..

Will meet in Pattukkottai on 19/01/2013

For More Information..

Form :

வியாழன், 6 டிசம்பர், 2012

சாதிவெறியோடு அரசியல் கட்சிகள்..

இது நாள் வரை தமிழ் சமுகத்தினை ஒருவித மயக்கத்தில் வைத்து ஆதாயம் பெற்று வந்த அரசியல் கட்சிகளுக்கு இன்று வயிற்றில் புளி கரைத்துவிட்டது போன்று இருக்கிறது, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுகங்களும் இணைந்து இருப்பது அதற்க்கு காரணமாகிவிட்டது. இந்த சமூகங்களிடையே ஆயிரம் பிளவுகளும், கருத்து வேறுபாடுகளும் / மோதல்களும் இருக்கலாம், ஆனாலும் அவற்றை எல்லாம் மறந்து அவர்களின் பறிபோன உரிமைக்காக இன்று அனைவரும் சேரும்போது இவ்வளவு காலமும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்தியவர்களுக்கு வருத்தம் இருக்கதானே செய்யும் ?

இன்று பிழைப்புவாத அரசியல் நடத்தும் கம்யூனுச, திராவிட, தேசிய, திரைப்பட கட்சிகள், தமிழ் சமூகங்கள் கூடியது கண்டு அதிர்ந்துபோனது உண்மை..!! 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித்களுக்கான இட ஒதுக்கீடு அளித்தும் இன்னும் அவர்கள் முன்னேறவில்லையே ஏன் ? இன்னும் 500 ஆண்டுகள் இந்த சலுகைகளை அளித்தாலும் அவர்களை இந்த அரசியல் கட்சியினரும், இந்த சலுகைகளை / ஒதுக்கீடுகளை தாங்கள் மட்டுமே அனுபவித்து வரும் சில தலித்துக்களும் முழுமையாக அந்த சமூகத்திற்க்கு அந்த பலன்கள் கிடைக்க விட மாட்டார்கள்

இன்னும் சிந்தனையாளர்களாக / மேதைகளாக தங்களை கற்பனை செய்துக் கொள்ளும் சிலர் இன்றைய சாதி கலவரங்களுக்கு காரணம் "பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் தலித்துக்கள் முன்னேறியது கண்டு, பிற சமூகங்களின் இயலாமையின் வெளிப்பாடுதான் என்கின்றனர் " கலவரங்களை / வன்முறைகளை நாங்களும் கண்டிக்கிறோம், அவ்வாறான செயல்களை செய்பவர்களை தண்டிக்கநாங்களும் வலியுறுத்துகிறோம், ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டின் ஒரு பாகத்தை தங்களின் சமூக சிந்தனையாளர் முகமூடிக் கொண்டு மறைத்து விடுகிறார்கள், அது "இயலாமை"

ஏன் இந்த இயலாமை வந்தது ?

திறமையில்லாமலா ? அல்லது உஙகளின் வாக்கு வங்கி அரசியல் காரணமாகவா ? இயலாமை என்பது எங்கள் மீது திணிக்கப்படும் அரச பயங்கரவாதம்தானே..? தலித்துக்களுக்கானசலுகைகளை வழங்க வேண்டும்..!!! அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, சொல்லப் போனால் அதை அவசியம் நாங்கள் வலியுறுத்துகிறோம், அதே போல எண்ணிக்கை அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும், எங்களின் வாழ்வுரிமையை நாங்கள் வலியுறுத்தும் போது அது " சாதிவெறியாக" உங்களால் சித்தரிக்கப் படுகிறது எங்களின் நியாயமான கோரிக்கையை மறுக்கின்ற உங்களின் அரசியலில் "தலித்" எனும் போது சாதி வருவதில்லை, "தேவர், வன்னியர், முத்தரையர்" என்றால் சாதி வெறியாகி விடுகிற மர்மம் என்ன ? எது சொன்னாலும் ஆட்டுமந்தைபோல தலையாட்டும் என் தமிழ் சமூகம்தானே.. ? இன்று தமிழ் தேசியம்பேசும் சிலரும் இந்த தேசிய, திராவிட, கம்யூனிச, திரைப்பட கட்சிகளைப் போன்று எங்களின் உணர்வினை வெறி என்று சித்தரிக்க முயல்கிறார்கள், "தமிழ் சமூகம்" என்பதில் தமிழ் பேசும் கேரளத்து நாயரோ, கன்னடத்து ஒக்காலிக்கரோ, குஜராத்தில் சேட்டுக்களையோ சேர்பீர்களா ? தமிழ் பேசாவிட்டாலும் வன்னியரும், முத்தரையரும், முக்குலத்தவரும், பள்ளரும், பறையரும் தானே " தமிழ் சமூகம்" ? சாதிகள் தொடர்ந்து ஒவ்வொருவர் மனதிலும் இருப்பதற்க்கான புற / சமுக காரணிகளை தொடர்ந்து அரசாங்கமேவளர்த்து வருகிறது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு, எங்களுக்கான எந்த சலுகைகளும் நீங்களாக தருவதுமில்லை.. !! நாங்கள் கேட்டாலும் "சாதிவெறியர்கள்" என்ற பட்டம் வேறு தருகிறீர்கள், சலுகைகள் வழங்கும் போது எது உங்களின் அளவுகோலாக இருக்கிறது, வார்த்தைகளா ? வாழ்க்கை முறைகளா ?

அரசியல் கட்சிகளை கேட்கிறேன் தன் எழுச்சியாக சாதி, மதங்களை கடந்து உரிமைக்கு போராடினோமே "முல்லைப் பெரியாறுக்காகவும்" ஈழ தமிழர்களுக்காகவும்" காவேரிநதிக்காகவும்" அப்போது எங்கே போனீர்கள், காவேரிப் பிரச்சனையை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டாம், கவனத்திற்க்காவது கொண்டு சென்றீர்களா ? இதில் "வன் கொடுமை தடுப்பு சட்டத்தின்" பலனாக தலித் சமூகத்தை மற்ற சமூகங்களுக்கு எதிரியாக சித்தரித்ததே உங்களின் அரசியல் தந்திரம் அல்லவா ? "கலப்பு மணம்" என்பது போலி திராவிடர்களின் பிதற்றல் வாதம், கலப்பு மணத்தால் சாதிகள் ஒழிந்துவிடும் என்பது வெற்றுப் பிதற்றல் மாத்திரமே, வன்முறைக்கு வழிவகுத்து அதிலும் அரசியல் லாபம் அடையும் உங்களின் தந்திரம் மாத்திரமே.. !! சமூக காரணிகள் மாற வேண்டும் என்றால் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள், அது சாதி அடிப்படையாக இருந்தால் அனைத்து சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீட்டினை கொடுத்துவிடுங்கள், பொருளாதார அடிப்படையில் என்றால் ஏழைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்..

கலப்பு திருமணம் என்பதை இரு தரப்பு குடும்பங்களும், ஏற்றுக் கொண்டு அப்படியான திருமணங்கள் நடக்குமானால் அதனை முழுமையாக வரவேற்கிறோம், இதில் ஏற்பு இல்லாதவர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது, என்பதை எப்படி ஏற்க முடியும் ? "திட்டமிட்ட காதல் திருமணங்கள்" இந்த சமூகத்திற்க்கு விடுக்கப் பட்ட ஒரு சவாலாகவே கருத முடியும். "வன் கொடுமை தடுப்பு சட்டம்" எந்த தனி மனிதனின் சுதந்திரத்தையும் பறிக்காத வகையில்,பிற மக்கள் தலித் மக்களோடு பழக தடையாக இருக்கும் சரத்துக்களை நீக்கி, திருத்தி பிற சமூக மக்கள் அவர்களோடு அச்சம் இல்லாமல் பழகிட வழிவகை காண வேண்டும்.

இந்த நியாயமான கோரிக்கைகளோடு களம் கானும் சமூக போராளி "மருத்துவர் ராமதாஸ்" அவர்களுக்கு முத்தரையர் சமுகம் தனது முழுமையான ஆதரவினை தருவது காலத்தின் கட்டாயம் என்பதை இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வலியுறுத்துகிறது.

- சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்