காடக முத்தரையர்
நம்மில் பலரும் வரலாற்றைப்பற்றிய அக்கறையற்றவர்களாவே இருக்கிறோம், அதுதான் நம்முடைய “வளர்ச்சிக்கு தடையோ” என்று சில நேரங்களில் என்னத்தோன்றும், ஆக ஒவ்வொரு முத்தரையரும் வரலாற்றை தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், வரலாற்றை பல்வேறு புத்தகங்களின் வாயிலாக தெரிந்துகொண்டிருந்தாலும், காட்சியாக அதனை காணும்பொழுது நிச்சயம் மனதில் பதிந்துவிடும் திரைத்துறையில் நம்மவர்களின் பங்களிப்பு என்பது மிகமிக சொற்பமே, ஆகவே அங்கே நம்முடைய வரலாற்றை காட்சிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு, இன்றைய நிலையில் வரலாற்றை காட்சியாக கண்டுகளிக்க ஒரு வாய்ப்பினை வளப்பக்குடி வீரசங்கர் அவர்களின் "காடக முத்தரையர்" நாடகம் நிறைவு செய்யும் என்று கருதுகிறேன்,
பிரபலமான நடிகராக வீற்றிருந்த திரு. ஆர்.எஸ்.மனோகர் அவர்கள் 40 வருடங்களுக்கு முன்பு அரங்கேற்றிய நாடகம்தான் "காடக முத்தரையர்" ஆனாலும் இன்றைய தலைமுறைக்கு காடக முத்தரையர் யார் ? என்றே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, தொடர்ந்து அந்த நாடகங்கள் வேறு எங்கும் அரங்கேற்றமும் செய்யப்படவில்லை, ஆர்.எஸ்.மனோகர் அவர்கள் நாடகம் நடத்தியபொழுது பிரபல குணசித்திர நடிகரும், துக்ளக் இதழின் ஆசிரியரும், ஜெயலலிதா, நரேந்திரமோடி போன்ற அரசியல் பிம்பங்களின் அரசியல் ஆலோசகருமான திரு. சோ அவர்கள் பல்வேறு நாடகங்கள் இயக்கி நடித்திருந்தாலும் அவர் நான்கு அல்லது ஐந்து முறை பார்த்து ரசித்த ஒரே நாடகம் "காடக முத்தரையர்" நாடகம், அவ்வளவு அற்புதமான காட்சி அமைப்புகள் அன்று இருந்திருக்கிறது,
அதே போன்ற ஒரு முயற்சியைதான் இன்று முத்தரையர் சமூகத்திற்க்கு பல எழுச்சி பாடல்களை தந்த வளப்பக்குடி வீரசங்கர் எடுத்திருக்கிறார், மிகப்பெரிய பொருட்செலவில் வருகின்ற 19/09/2015 அன்று தஞ்சை மாநகரில் இருக்கும் "அண்ணா நினைவு கலையரங்கில்" நாடகம் அரகேற்றப்படுகிறது, தனஞ்செய முத்தரையன் உருவாக்கிய தஞ்சையின் இந்த நாடகம் அரங்கேற்றுவது இன்னும் சிறப்பு, வரலாற்றை தெரிந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேரில் வந்து ரசியுங்கள், வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்,
முற்காலத்தில் சாணக்கியனின் அரசியல் தந்திரமும், தீர்வுகளும்தான் இன்றும் "சாணக்கிய தந்திரம்" என்று புகழப்படுகிறது, அதற்க்கு சற்றும் சளைத்தல்ல பல்லவ வம்சத்தின் ஏற்பட்ட பிரச்சனைகளும் அதனை "காடக முத்தரையர்" தீர்த்து வைப்பதும்...
நேரில் வாருங்கள், ரசித்திடுவோம்....
-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
குறிப்பு : குறைந்தபட்ச நுழைவு கட்டணமாக ரூபாய் 100/- நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது, நீங்களே நேரடியாக அவரை தொடர்புகொண்டு நுழைவுசீட்டை பெற்றுக்கொள்ளுங்கள், நுழைவுசீட்டு வேண்டும் என்பவர்கள் இதில் தங்கள் கைப்பேசி எண்ணை பதிவிட்டால் அவர்களே நேரடியாக தொடர்புகொள்வர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக