சமீபத்தில் தஞ்சாவூர் மாவாட்டம் சேதுபாவாசத்திரத்தில் நடந்த "சோழ மண்டல ஹிந்து எழுச்சி மாநாட்டில்" நான் கலந்து கொண்டு பேசியதன் எழுத்து வடிவம்..
நான் சஞ்சய்காந்தி அம்பலக்காரர், நான் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவன், இந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்டிருக்கக் கூடிய எமது சக சமூகங்களின் உறவுகளுக்கும், ஹிந்து அமைப்பின் முன்னோடிகளுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மாநாடு எந்த நோக்கத்திற்க்காக கூட்டப்பட்டிருந்தாலும் என்னுடைய கருத்தை இங்கு பதித்து செல்ல விளைகிறேன்.
உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன், பதில் சொல்லுங்கள், சிவலிங்கத்தின் மீது ஒருவன் காலை வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்...?
காலை வெட்டுவீர்கள்
நான் ஒன்றை சொல்லட்டுமா..? சிவலிங்கத்தின் மீது கால்வைத்த பரம்பரையில் இருந்துதான் இன்று இந்த ஹிந்து மாநாட்டிற்க்கு நான் வந்திருக்கிறேன் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் அது உண்மை. இப்போது நீங்கள் கூட நினைக்கலாம், நம்முடைய கூட்டத்திற்க்கு வந்துவிட்டு நம்முடைய கடவுள் மீது கால் வைத்த பரம்பரை என்று ஒருவன் சொல்கிறானே அவனுக்கு என்ன துணிச்சல் என்று. உண்மை உறவுகளே... சிவலிங்கத்தின் மீது கால்வைத்த பரம்பரைதான் நான்.
சிவலிங்கத்தின் மீது வேறு எவன் கால்வைத்தாலும், காலை எடுக்கும் பரம்பரையும் நானே..! என்ன குழப்பமாக இருக்கிறதா..?
வேறு ஒன்றும் இல்லை நான் 63 நாயன்மார்களில் ஒருவராய், சிவனுக்கு மாமிசம் படைத்த "கண்ணப்ப நாயனாரின்" வம்சத்தை சேர்ந்தவன், எங்களை தவிர யாருக்கும் சிவபெருமான் அந்த உரிமையை தந்துவிடவில்லை, சிவன் என்றாலே "சைவன்" என்றுதான் பொருள் கொள்வார்கள், அந்த அவனுக்கே மாமிசம் படைத்தவர் "கண்ணப்பர்" நான் அந்த வம்சத்தை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன், கடவுளுக்கு என்ன படையலிட வேண்டும் ? எப்போது படையலிட வேண்டும் ? என்ன ஆச்சாரங்களை பின்பற்ற வேண்டும் ? என்று உங்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் இருக்கலாம் அது எங்களுக்கு இல்லை, நாங்கள் நினைத்ததை படையலிடுவோம், நினைத்த நேரத்தில் வணங்கிடுவோம், அது எங்களுக்கும் சிவபெருமானுக்குமானது இதில் எவனும் தலையிடமுடியாது, இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று எந்த கோவிலுக்கு சென்றாலும் கடவுளை பார்க்க அரசாங்கம் காசு கேட்கிறது, கட்டணம் செலுத்தினால்தான் கடவுளை காட்டுவேன் என்று மல்லுகட்டுகிறது, அந்த நிலையை மாற்ற வேண்டுமானால் நீங்கள் ஒவ்வொருவரும் கண்ணப்பரின் வழியில் உங்களையே முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்து வழிப்பட வேண்டும். கண்ணப்பரைப்பற்றி, அவருடைய பக்தி பற்றி முடிந்த அளவு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும், இந்த மாநாட்டின் தீர்மானித்தில் "கண்ணப்ப நாயனாரின்" வரலாற்றை, பக்தியை தமிழக அரசு பாடதிட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைக்க வேண்டும்.
இது நாங்கள் சைவத்திற்க்கு செய்தது, வைணவத்துக்கு செய்ததையும் சொல்ல வேண்டுமல்லவா..?
"ஓம் நமோ நாராயணா" என்ற எட்டெழுத்து மத்திரம் அறியாதவர் யாரேனும் இங்கு உண்டா..? இந்த மந்திரம் எப்போது உபதேசிக்கப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா..? தெரிந்துகொள்ளுங்கள் " நீலன்" என்னும் குறு நில மன்னன் குமுதவல்லியை காதல் கொண்டான், அந்த அம்மையாரோ காதலை ஏற்க வேண்டுமானால் 1008 வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்கிறாள், அமுது படைப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லை, அதற்க்கு பணம் வேண்டுமே, இவனோ இன்னொரு அரசனுக்கு வரி செலுத்துபவன், இவனிடம் அவ்வளவு பணம் இல்லை ஆனாலும் அமுது படைத்தான், அதிலேயே அவனின் சொத்து முழுவதும் கரைந்தது. ஆனாலும் அடியாருக்கு அமுது படைத்திட நினைத்தான், பெருமானுக்கு கோவில் எடுப்பித்தான், கோவில் பணி நிறைவு பெற இன்னும் இன்னும் பணம் தேவையாக இருக்கிறது. அதற்காக கொள்ளை அடிக்கவும் தயங்காமல் அதையும் செய்தான், அதில் வேடிக்கை என்னவென்றால் "மணக்கோலத்தில் வந்த பெருமானிடமே" கொள்ளையடித்தான், மணமகனாய் இருந்த பெருமாளின் காலில் இருந்த நகையை மட்டும் அவனால் கழற்ற முடியவில்லை, அதற்க்கு சளைத்தானா..? இல்லை பல்லால் கடித்து கழற்றியேவிட்டான், கழற்றிய நகையை எடுத்து செல்ல முடியவில்லை, எப்படி எடுக்க முடியும் ? அது என்ன சாதாரணமானவனின் நகையா..? பெருமானின் நகையல்லவா..? அப்போது அந்தனர் வடிவில் வந்த பெருமானிடமே காரணத்தை கேட்கிறான், அப்போதுதான் பெருமாள் உபதேசிக்கிறார் "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தை சொன்னால் பலம் பெருவாய், நகையை எடுத்து செல்லலாம் என்று, அப்படி பெருமாளிடமே திருடியதைதான் ஆண்டுதோறும் சீரங்கத்திலே வேடுபறி நிகழ்வாக கொண்டாடி வருகிறார்கள், அந்த நீலன் வேறு யாரும் அல்ல... "திருமங்கை ஆழ்வார்தான்" இப்படி சிவபெருமானோடும், பெருமாளோடும் நேரடியாக அன்பை, பக்தியை பறிமாறிய எங்களைதான் கடவுளை காணவே காசு கேட்கிறது அரசாங்கம்.
திருமங்கை ஆழ்வாரின் வரலாறும், கண்ணப்ப நாயனாரின் வரலாறும் இன்றைய இளைய தலைமுறை ஹிந்து மக்களுக்கு சொல்லப்பட வேண்டும், பள்ளிகளில் பாடமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தோடு எனது உரையை நிறைவு செய்கிறேன், நன்றி வணக்கம்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக