அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு ரோடு மறியல் செய்த பெண்கள், ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்தது முத்தரையர் நகர். இங்கு குடிநீர் வந்து 20 நாட்கள் ஆகி விட்டது. இப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். எந்தவித நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பெண்கள் குடத்துடன் மதுரை ரோட்டில் குடிநீர் கேட்டு மறியல் செய்தனர். தாசில்தார் ரெங்கசாமி மற்றும் டவுன் போலீசார் சமாதானம் செய்தனர். மீண்டும் பெண்கள் காலி குடத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று அங்கும் முற்றுகையிட்டனர். தாசில்தார், பிடி.ஒ. ஜான்சிராணி, ஊராட்சி தலைவர் பழனி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்." வைகை ஆறு வறண்டு உள்ளதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. கிராம பகுதிகளுக்கு என உள்ள தாமிரபரணி குடிநீர் திட்டம் தற்போது சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. முழுமை அடைந்தவுடன் அனைத்து பகுதிகளுக்கும் சீராக கிடைக்கும்' என கூறியதின் படி கலைந்து சென்றனர்.
News source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1342860
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக