மண்மேடு மாளிகையாக போகிறது...!!!
பேரரசுகள்களுக்கெல்லாம் காவல் தெய்வமாய் விளங்கிய சப்தகன்னியரும், பேரரசர்பெரும்பிடுகு முத்தரையரின் இஷ்ட தெய்வமாய் நின்ற நியமம் அன்னை காளப்பிடாரியும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் மண்மேடாய் நின்று நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்...!!
அந்த மணல்மேடு மாளிகையாக போகிறது...!!!!
ஆம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1342 -வது பிறந்தநாளில் திருச்சி மாநகருக்கு வருகைதந்த இந்திய நாட்டின் மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணனை தான் இருக்கும் இடத்திற்க்கே அழைத்து அன்னை காளப்பிடாரி உத்தரவிட்டிருக்கிறாள் தனக்கு ஒரு மாளிகை (கோவில்) வேண்டுமென்று...
அவரும் அதை ஏற்று, ஊர் மக்களும் முழு ஒத்துழைப்பு தருவதாக சொல்லி, பாதையமைக்க இடம் தருவதாக ஒப்புக்கொண்டு அனைத்து மக்களுக்குமான கோவில் அங்கே எழப்போகிறது.
மாணமிகு பெரும்பிடுகுவின் வாரிசுகள், அந்த புண்ணிய பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், அந்த புண்ணிய பூமிக்கு ஒருமுறையேனும் பயணப்படுங்கள். ஆயிரம் ஆண்டுகள் செய்த பிழையை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.
அன்னை உங்களை ஆசிர்வதிப்பாள், நாடு செழிக்கும், மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தகவல் : டாக்டர் சந்திரசேகரன்