மே- 23
திருச்சி, கரூர் மாவட்டங்களில் நேற்றிரவு குறிப்பாக தொட்டியம், முசிறி பகுதிகளில் மே-23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளுக்காக வரையப்பட்ட சுவர் விளம்பரங்களை சுமார் ஐந்து ஆறு இடங்களில் (வேறு வேறு இடங்களில்..) கயவர்கள் கூட்டம் ஒன்று அழித்தும், அசிங்கப்படுத்தியும் இருக்கிறது, இது திட்டமிட்ட சதி, இதன் பின்னணி குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும், உரிய தண்டனையை பெற்றுதரவும் வேண்டும் இந்த செயலின் மூலம் ஆண்ட பேரினத்தின் சமீபத்திய அரசியல் எழுச்சியை "எதிரிகள்" அச்சமோடு காண்பதாகவே நான் நினைக்கிறேன், நூற்றாண்டுகளாய் உறங்கிகிடந்த "முத்தரையர்" மக்கள் இதுவரை இல்லாத நிகழ்வாக தங்கள் பேரரசருக்கு மிக சமீபகாலமாக எழுச்சியோடு விழா எடுப்பதை இதுநாள் வரை எங்கள் உரிமைகளை தடுத்து, எங்கள் உரிமைகளை பறித்து அரசியல்,பொருளாதார, கல்வி என்று எல்லா நிலைகளிலும் பின் தங்கிய இனமாக வைத்திருந்த, தொடர்ந்தும் அவ்வாரே வைத்திருக்க எண்ணும் கயவர்களே இனியும் உங்கள் கயமையை எங்களிடம் காட்ட வேண்டாம், எங்களுக்குள் ஆயிரம் சகோதரயுத்தங்கள் உண்டு அது எமது இனத்திற்க்கு எழுச்சி ஏற்படுத்துவதற்க்காக மட்டுமாகதான் இருக்கும் அதனை முதலாக்க நினைப்பவர்களுக்கும் வீழ்ச்சி நிச்சயம்.
இந்த நிகழ்வின் மூலம் எங்கள் சமூகத்தினருக்கு சினத்தினை ஏற்படுத்தி அதனை வன்முறையாக மாற்றி எங்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கவும் வழக்கம்போலவே அதனை காரணம்காட்டி பேரரசர் பிறந்தநாளுக்கு தடையோ, கெடுபிடிகளையோ செய்துவிட முடியும் என்று கருதியே செய்திருக்கிறார்கள் அந்த எல்லா முயற்சிகளுக்கும் எங்கள் பதில் "அமைதியாகவே" இருக்கும். எங்கள் எழுச்சி உங்களை நிச்சயம் பாதிக்கும் என்று தெரியும், அன்றும் சரி இன்றும் சரி எதிரிகளை நேரில் மட்டுமே சந்திப்பதும், எதிர்கொள்வதும் எங்கள் முத்தரையர்ப் பரம்பரையின் வழக்கம் இரவு நேரத்தில் ஊர் உறங்கிய நேரத்தில் எங்களுக்கு எதிராக ஆயுதம் எடுப்பதும், புறமுதுகில் தாக்குவதுமாக எத்தனை நாட்கள்தான் இருக்க போகின்றீர்கள்..?
எனதருமை உறவுகளே, முடிந்த இடங்களில் எல்லாம் இந்த செயலை கண்டித்து அமைதியான முறையில் ஆர்பாட்டங்களை முன்னெடுங்கள், இதிலிருந்து நாம் கற்ற பாடம் எதிரிக்கு வலிக்க வேண்டுமானால் தமிழகத்தில் சுவர்களில் எல்லாம் பேரரசர் பெரும்பிடுகு பிறந்த நாள் குறித்த அறிவிப்புகளாய் இருக்க வேண்டும் என்பதுதான். அதுதான் நம்மை சீண்டியவர்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இருக்க முடியும்.
இனமாய் திரளுவோம்..!!
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
2 கருத்துகள்:
முத்திரையர் ராவ்-பெயர்காரணம்
வணக்கம் நண்பரே,
நான் திருவிடைமருதூர் வட்டத்தை சேர்ந்தவன், எங்கள் பகுதியில் உள்ள முத்திரையர் இன மக்கள் தங்களை முத்திரையர் ராவ் என்று கூறிக்கொள்கின்றனர் நானும் அப்படித்தான் நீங்கள் தயவு செய்து (முத்திரையர் ராவ்) என்பது எப்படி வந்தது, இந்த பிரிவில் எவரேனும் மன்னர்களோ,அல்லது புலவர்களோ இருந்திருக்கிறார்களா என்பதைனை விளக்கி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
madhavan.S
91-9787349662
முத்திரையர் ராவ்-பெயர்காரணம்
வணக்கம் நண்பரே,
நான் திருவிடைமருதூர் வட்டத்தை சேர்ந்தவன், எங்கள் பகுதியில் உள்ள முத்திரையர் இன மக்கள் தங்களை முத்திரையர் ராவ் என்று கூறிக்கொள்கின்றனர் நானும் அப்படித்தான் நீங்கள் தயவு செய்து (முத்திரையர் ராவ்) என்பது எப்படி வந்தது, இந்த பிரிவில் எவரேனும் மன்னர்களோ,அல்லது புலவர்களோ இருந்திருக்கிறார்களா என்பதைனை விளக்கி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துரையிடுக