கடந்த வாரம் ஒரு பதிவு "பொய்வழக்கு" என்ற தலைப்பில் எழுதி இருந்தேன், அதற்க்கு முன்பாக சகோதரர் "பட்டுக்கோட்டை கராத்தே செந்திலை" விசாரணைக்காக என்று காவல்துறை அழைத்து சென்று பொய்யான வழக்கினை பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. இத்தகைய பொய்யான வழக்குகளை குறிப்பாக "முத்தரையர்" சமுதாய இளைஞர்கள் மீது தொடர்ந்து பதிவு செய்யும் காவல்துறையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் மனு அளிக்க பெரும்திரளான இளைஞர்களை திரட்டிகொண்டு நாளை (27.04.2015) தஞ்சைக்கு புறப்படுவது என்று முடிவு செய்து அதற்க்கான ஒருங்கிணைப்பை முத்துப்பேட்டை ரோடு பாலு செய்து வருகிறார், இது நமது உரிமை பிரச்சனை, இதில் "செந்திலுக்கு மட்டும்தானே" என்று நாம் விலகி இருந்தால் நாளை உங்களுக்கு, எனக்கு என்று பட்டியல் நீளும் இந்த நிலை தொடராமல் இருக்க தஞ்சை மாவட்டத்தின் அனைத்து முத்தரையர்களும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் நாளை (27.04.2015) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் காலை 10:00 மணிக்கு மனு கொடுக்க முடிந்த அனைவரும் வருகைதர வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்
திரு.பாலுவை தொடர்புகொள்ள : 0091-8012389576
குறிப்பு : காலை 08:30 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து வாகன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது
- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக