கடந்த வாரத்தில் திருச்சி, கரூர் மாவட்டங்களில் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பிறந்த நாள் விழாவிற்க்காக வரையப்பட்ட சுவர் விளம்பரங்களை சில கயவர் கூட்டம் அழித்தும், அசிங்கப்படுத்தியும் இருந்த தகவலை பகிர்ந்து இருந்தது நினைவிருக்கும், இந்த கீழ்தரமான செயலை செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி "மாபெரும் கண்டன ஆர்பாட்டம்" நாளையதினம் (27.04.2015) காலை 10:00 மணிக்கு தொட்டியம் தாலுகா அலுவலகம் முன்பு "சோழநாடு முத்தரையர் சங்க நிறுவனர்" திரு. முசிறி சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது
இந்த போராட்டம் நமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், நமது உணர்வினை, ஒற்றுமையினை வெளிப்படுத்துவதாகவும் நிச்சயம் இருக்கும், இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்க்கும் "பின்னடைவாகவே" இருக்கும். இந்த போராட்டத்தில் எண்ணிக்கையே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் பெருமளவிளான முத்தரையர் உறவுகள் கலந்து கொண்டு போராட்டத்தின் மூலம் வலுவாக நமது குரலை பதித்திட வேண்டுமாய் வேண்டுகிறேன். வேறு சங்கத்தவர் பிரச்சனைதானே என்று ஒதுங்காமல், முத்தரையர் சமூகத்திற்க்கு பாதிப்பு என்றவுடன் போராட களத்திற்க்கு வந்த திரு. முசிறி சரவணன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முசிறி சரவணன் அவர்களை தொடர்புகொள்ள : 0091- 9965276222
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக