// எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கிய பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குறிய திரு. மருதராஜா அவர்களும் அவரது மகனும் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்போம். //
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி. மருதராஜா (வயது 50). இவர் பெரம்பலூரில், துறையூர் சாலையில், மூங்கில் கடை பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருகிறார். தினமும் காலையில் அவர் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
நேற்று காலை 6 மணிக்கு எம்.பி. மருதராஜா தனது மகன் பிரசன்னா (17) வுடன் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு புறப்பட்டார். அவர்கள் இருவரும் நீலி அம்மன் கோவில் அருகில் நடந்து சென்ற போது பின்னால் வந்த ஷேர் ஆட்டோ ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி மருதராஜா மீது மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் வலது தோள், வலது கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மருத ராஜாவின் மகன் பிரசன்னாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் செஞ்சேரியை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் ஆட்டோவை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருதராஜா எம்.பி.யை அமைச்சர்கள் தங்கமணி, டி.பி. பூனாட்சி, அரசு கொறடா மனோகரன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் சிவபதி, பரஞ்சோதி, வளர்மதி ஆகியோர் பார்த்து ஆறுதல் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக