அய்யோ..என் ஆண்ட பேரினமே...!
நேற்றைய தினம் புதுக்கோட்டை மாநகருக்கு வருகைதந்த தமிழக அமைச்சர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன், அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட ஆளும்கட்சியினர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் அமைச்சரை காண்பதற்க்காக காத்திருந்தனர் பெரும்பாலானவர்களின் உடை என்னவோ வேட்டி சட்டையாகவும் மிகசிலருடைய உடை "பேண்ட்சர்ட்" ஆகவும் இருந்தது. அதில் ஒரே ஒருவரின் ஆடை மட்டும் கண்ணை உறுத்தியது, அவர் அணிந்திருந்த ஆடை "கைலி" அவர் யாராக இருக்கக்கூடும் ? என்று நான் ஒருவாறு கணித்துக்கொண்டேன், இருந்தாலும் எனது கணிப்பு தவறாக இருக்கக்கூடாதா..? என்றும் மனதை சமாதானப்படுத்த முயன்றேன், அந்த நபர் சிலரோடு இணைந்து அமைச்சர் இருக்கும் அறைக்குள் சென்று திரும்பினார், திரும்பியவர்கள் வாகனத்தில் ஏற வரும்போது கவனித்தேன் அந்த வாகனம் பொன்னமராவதி பகுதியின் அதிமுக பிரபலமான ஒரு "முத்தரையரின்" வாகனம், எனது கணிப்பில் பாதி ஊர்சிதம் ஆகிற்று, இருந்தும் சந்தேகப்படுவதைவிட விசாரித்துவிடுவது என்று தீர்மானித்து அருகில் சென்று "யார் ? என்ன ?" என்று விசாரித்தபோது, நான் கணித்தது முழுமையாக சரிதான் என்று தெரிந்தது.
கைலி என்பது தவறான ஆடையில்லை, அதே நேரம் அது ஒரு இரவு உடை மட்டும்தான், அதன் எல்லை அதிகபட்சம் வீட்டின் வாசலாகவும், மிக அதிகபட்சம் தெருவின் முனையாகவும் மட்டும்தான் இருக்க முடியும், நிச்சயமாக அந்த நபரிடம் "கைலி" மட்டுமே உடையாக இருக்க வாய்ப்பே இல்லை, பார்வைக்கு சற்று வசதியானவராகதான் தெரிந்தார். ஒரு அமைச்சர் இவரை தேடி இவர் இருக்கும் இடத்திற்க்கு வந்திருந்தால்கூட அந்த உடை ஒரு பெரிய விசயமாக எனக்கு தோன்றி இருக்காது, அமைச்சரை தேடி அவர் வரும்போது எப்படியான ஆடை அணிய வேண்டும் என்பது தெரியாமல் இருப்பதை என்னவென்று சொல்வது..? இது என்னவோ அந்த தனி நபரை மட்டும் சாடுவதற்க்காக எழுதியதல்ல, இதையேதான் நம்மவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பெரும்பாலும் செய்கின்றார்கள், ஒரு நகரப்பகுதிக்கு வரும்போது எப்படியான உடையை அணியவேண்டும் ? என்ற குறைந்தபட்ச Dress code இல்லையென்றால் நாம் "ஆண்ட பேரினம்" என்று பெருமை கொள்வதால் மட்டும் என்ன பெரிய நன்மை கிடைத்துவிடப்போகிறது..?
நகரப்பகுதிகளில் நான் சந்திக்கும் கைலி அணிந்து வரும் முத்தரையர் இளைஞர்களிடம் எப்போதுமே அந்த உடைக்கான நியாயமான ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் சமூகத்தின் பார்வைக்கு அந்த காரணங்கள் அவசியமற்றதே...!
இதுவெல்லாம் நமக்கான பாடமாக கொள்ள வேண்டும், முதல்கட்டமாக கைலி போன்ற உடைகளை தவிர்த்து நாகரீகமான ஆடைகளை (வேட்டி, பேண்ட் உள்ளிட்ட) அணிந்து மட்டும்தான் நகரப்பகுதிகளுக்கு வர வேண்டும், அது எவ்வளவு அவசரமான, அவசியமான பயணமாக இருந்தாலும், இரண்டாவது கைலி போன்ற ஆடையோடு வருபவர்கள் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் அவரை சபையில் மதிக்காமல் விட்டுவிடுவது... இதை நாம் செய்யாவிட்டால் வேட்டிசட்டையை "வாடகைக்கு எடுத்து" அணிந்து வருபவர்கள் ஆண்ட இனமாகவும் :), ஆண்ட பேரினம் அடிமை இனமாகவும், சமூகம் தவறாக கணிப்பதை தடுக்க முடியாது.
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
1 கருத்து:
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நன்றே.(எனது உடை)இருப்பினும் தூய்மையை கைலி அணிந்தால் ,(பொருளாதாரம் இருந்து) யாவரும் வரவேற்பர்.வடகாடு மற்றும் அருகில் வேட்டிடன் வரும் நான் ஏனோ புதுக்கோட்டை நகரின் உள்ளே கைலியுடன் வளம் வருவேன் . அதை எளிமை என்று நான் நினைத்தாலும்.இந்த மண்ணின் மைந்தன் உரிமையை தருவது கிளி மட்டுமே. மணி 00973 33055579
கருத்துரையிடுக