இன்று ஒரு வன்னிய நண்பர் எழுதிய பதிவில் பிராமண தோழர் கிஷோர் கே சாமி ஒரு விசயத்தை குறிப்பிட்டு இருந்தார்.அது
// கள்ளர்கள் எங்கள் குலத்தை காத்தவர்கள் ... அவர்களில் தலை சிறந்தவர் தான் எங்கள் கடையாழ்வாரான திருமங்கையாழ்வார் ... இன்று நீங்கள் பார்க்கும் திருவரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரை கட்டியவர் , கோவில் விமானத்திற்கு தங்கக் கவசம் அணிவித்து அழகு படுத்தியவர் ... திருமங்கையாழ்வார் திருவடிகளே சரண //
அதற்க்கு நான் அளித்த பதில்
அய்யா கிஷோர் கள்ளர்கள் உங்கள் குலம் காத்திருக்கலாம், :) அது உங்களுக்கும் அவர்களுக்குமான பிரச்சனை ஆனால் போகிற போக்கில் திருமங்கை ஆழ்வாரை கள்ளர் என்றீரே.. அது எப்படி ?
இப்படிதானைய்யா எங்கள் முத்தரைய வரலாறுகள் பல "பலராலும்" பறிக்கப்படுகிறது. உமக்கு கொஞ்சம் வரலாறுகள் தெரியும் என்றே கருதினேன், திருவரங்கப்பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது "வேடுபரி" நிகழ்வை நீங்கள் அறிந்திருந்தால், அந்த வைபவத்தில் கழல் திருடுவது திருமங்கை ஆழ்வார் வழிதோன்றலான "திரு.பெரியண்ணன் முத்துராஜா" குடும்பத்தார் என்பதையும், அந்த நாள், அந்த நிகழ்வில் எங்கள் "முத்தரையர்" தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதியில்லை என்பதையும் அறிந்திருப்பீர்கள், ஒருவேளை வரலாறுகள் தெரிந்தும் பொய்யுரைக்கிறீர்களோ..?
- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
# ்இது அவருடைய தவறு கிடையாது, அவரை குறை சொல்லும்முன் இதே விசயம் நம்மில் எத்தனைப்பேருக்கு தெரியும் ? அறிந்துகொள்ள என்ன முயற்சி செய்தோம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக