கேள்விகள்....???
மிக சமீபத்திய அரசியல் செயல்பாடுகள், நிலைப்பாடுகள், போராட்டங்கள், தலைவர்கள் பற்றிய சந்தேகங்கள், நீண்ட நாள் மனதில் இருக்கும் சந்தேகங்கள், என்று ஒவ்வொரு முத்தரையர் மனதிலும் நிறைய கேள்விகள் தினமும் உதித்துக்கொண்டு இருப்பதை சமீபத்திய சமூக வலைத்தளப் பதிவுகளை காணும்போது தெரிகிறது. அத்தகைய கேள்விகள் பெரும்பாலும் பிரிவினைக்கும், தவறான புரிதலுக்கும் வழிவகுக்கிறது அதனை தவிர்க்க ஒரு முத்தரையனாக எனக்கும் கடமை இருக்கிறது.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் தொடர்பற்றவர்கள் பதிலளிப்பதனால் சண்டை சச்சரவுகள் வருவதும் வாடிக்கையாகிவிட்டது, இதனை தவிர்க்க ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள நினைக்கிறேன்.
யாரை நோக்கி கேள்விகள் பிறக்கின்றனவோ, அவர்களிடமே தெளிவு பெற்றால் என்ன..? யாரைக்குறித்து கேள்வி எழுப்பப்படுகிறதோ அவர்களே விளக்கம் சொன்னால் தவறான புரிதல்கள், விஷம பிரச்சாரங்கள், புரளிகளை களைந்து ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க முடியும்.
இதில் அய்யா ஆர்.வி, திரு. கே.கே.செல்வகுமார், திரு. அருணாசலம், திரு. சரவணன், திரு. எஸ்.எம்.மூர்த்தி, திரு. வெள்ளைத்துரை, திரு.மாறன் உட்பட அனைத்து தலைவர்களிடமும் (என்னிடம் எதுவும் கேட்க விரும்பினால் அதையும் கேளுங்கள் :p ) நீங்கள் கேள்விகளை கேளுங்கள் அவற்றை தொகுத்து அவர்களிடம் கொடுத்து பதிலினை பெற முயற்சிப்போம்.
தெளிவு பெற முயற்சிப்போம்.
கீழ்கண்ட விதிகளை பின்பற்றி கேள்விகளை கேளுங்கள்:
• எந்த தலைவரிடம் / அமைப்பிடம் கேள்வி கேட்க விரும்புகிறீர்கள்..?
• கேள்வி என்ன..?
• அதிகபட்சமாக ஒருவர் 5 கேள்விகளை முன் வையுங்கள்
• அதிகமாக ஆக்கப்பூர்வமான கேள்விகளை முன் வையுங்கள்
• நாகரீகமான / தனி நபர் விமர்சனமற்ற கேள்விகளை முன் வையுங்கள்
• தெளிவு பெற விரும்பும் கேள்விகளை மட்டும்முன் வையுங்கள்
ஆரோக்கியமான சமூகத்தை கட்டியமைக்க உதவுங்கள்
அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்