இன்று 12.11.2015 அன்று புதுக்கோட்டை திருவரங்குளம் முத்தரையர் திருமண மண்டபத்தில் நடந்த "அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு" அவசர ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. மரு.பாஸ்கரன், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர், முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திரு. புஷ்பராஜ், சிங்கராஜாக்கள் கட்சியின் செயலாளர் திரு. அன்பழகன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திரு.பாண்டி, முத்தரையர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜெயக்குமார், திருக்கட்டளை பாலா, மற்றும் முத்தரையர் முன்னேற்ற சங்கம், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம், முத்தரையர் மறுமலர்ச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
1. கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் 5 லட்சம் பேரின் உறுப்பினர் அட்டையை தலைமைக்கு அனுப்ப பிரச்சார இயக்கம் நடத்துவது / அனுப்புவது.
2. சாதி, மத, இன, மொழி துவேசத்தில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் "சாதி துவேசத்தில்" ஈடுவடுவதை கண்டிக்காத / நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இழந்து ஆளுனரிடம் புகார் கொடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோருவது, தவறும் பட்சத்தில் சென்னையில் 50 ஆயிரம் முத்தரையரை திரட்டி ஆளுனர் மாளிகையை முற்றுகையிடுவது.
3. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் சிலை அமைத்துக்கொடுத்து 20 ஆண்டுகளாக முத்தரையர் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வரும் அதிமுக உடனடியாக பேரரசர் சிலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், சிலையை எங்கள் சமூகமே அமைத்துக்கொள்ளும்.
4. மேலும் விரிவான ஒரு ஆலோசனை கூட்டம் அனைத்து தொகுதி முத்தரையர் அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து கொத்தமங்கலத்தில் 15/11/2015 அன்று நடத்துவது
5. பேராட்டத்தின் கோரிக்கையில் நீண்டகாலமாக வஞ்சிக்கப்படும் முத்தரையர் சமூகத்த்தின் 29 உட்பிரிவுகளையும் இணைத்து 15% தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரபடுத்துவது
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக