இன்று 15.11.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் காவல்துறை மற்றும் ஆளும்கட்சியின் நெருக்கடி காரணமாக மறமடக்கியில் நடந்தது, "அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு" நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. மரு.பாஸ்கரன், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர், முத்தரையர் முன்னேற்ற சங்கம் அம்பலக்காரர் பேரவை திரு. ராசிராம், திரு. அண்ணா.பரமசிவம், அரசன் சின்டிகேட் டிரஸ்ட் இளமான் செந்தில், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க மாநில துணைச்செயலாளர்கள் திரு. இளவழகன், திரு. ராஜ்குமார், திரு. கண்ணன் நாதன், முத்தரையர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜெயக்குமார், திருக்கட்டளை பாலா, மற்றும் முத்தரையர் முன்னேற்ற சங்கம், முத்தரையர் மறுமலர்ச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறமடக்கி கிராமத்தினரும், திரு, துரை அவர்களும் செய்திருந்தனர்
1. கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் 5 லட்சம் பேரின் உறுப்பினர் அட்டையை தலைமைக்கு அனுப்ப பிரச்சார இயக்கம் நடத்துவது / அனுப்புவது.
2. சாதி, மத, இன, மொழி துவேசத்தில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் "சாதி துவேசத்தில்" ஈடுவடுவதை கண்டிக்காத / நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இழந்து ஆளுனரிடம் புகார் கொடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோருவது, தவறும் பட்சத்தில் சென்னையில் 50 ஆயிரம் முத்தரையரை திரட்டி ஆளுனர் மாளிகையை முற்றுகையிடுவது.
3. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் சிலை அமைத்துக்கொடுத்து 20 ஆண்டுகளாக முத்தரையர் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வரும் அதிமுக உடனடியாக பேரரசர் சிலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், சிலையை எங்கள் சமூகமே அமைத்துக்கொள்ளும்.
4. பேராட்டத்தின் கோரிக்கையில் நீண்டகாலமாக வஞ்சிக்கப்படும் முத்தரையர் சமூகத்த்தின் 29 உட்பிரிவுகளையும் இணைத்து 15% தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரபடுத்துவது
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையின் அச்சுறுத்தலையும் மீறி ஆலோசனைகூட்டம் சிறப்பாக நடந்தேறியது
இடம் : மறமடக்கி, புதுக்கோட்டை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக