புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினராக திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க கு.ப.கிருஷ்ணன் இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ளது. அலுவலக பணிகளை ராஜா என்பவர் கவணித்து வந்தார்.
மாலை 3 மணி அளவில் பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த குணா, பிரபாகரன் ஆகிய அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து அலுவலக கதவுகளை அடித்து இழுத்து ரகலை செய்ததுடன் அலுவலகத்திற்குள் இருந்த அலுவலக பணியாளர் ராஜாவையும் சட்டமன்ற உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன் மற்றம் அவர் சார்ந்துள்ள சமூகத்தையும் இழிவாக பேசி தொடர்ந்து ரகலையில் ஈடுபட்டுள்ளனர்.
கூப்பிடும் தூரத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாளர் ராஜா புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரகலை செய்ய இருவரும் அங்கிருந்து ரகலையுடனேயே சென்றனர்.
இதே நபர்கள் சுமார் 2 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புஜ்பராசுக்கு சொந்தமான புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் தில்லைநாயகி என்ற தனியார் பேருந்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்தும் நாளை நடக்க உள்ள அமைச்சருக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை கிழ்த்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை 5-ந் தேதி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அ.தி.மு.க மா.செ. அமைச்சர் விஜயபாஸ்கர் முத்தரையர் இனத்தின் அ.தி.மு.க கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை தரக்குறைவாகவும், சமூகத்தை இழிவுபடுத்தியும் பேசினார் என்று அந்த சமூக மக்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியதுடன் கண்டன ஆர்பாட்டம் நடத்தவும் அழைப்பு கொடுத்துள்ளனர்.தொடரும் இந்தப் பிரச்சணைகளால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
- செம்பருத்தி.
News Source :நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக