எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே திருச்சி மாவட்டத்தில் அதிமுகவில் முத்திரையர்களுக்கு என்று பெரிய செல்வாக்குடன் அதிக பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஜெ. ஆட்சிக்கு பிறகு முத்திரையர்களின் முக்கியம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்து கொண்டு வந்தது. தற்போது திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க.,வில் கட்சிப்பதவி வழங்கிய விஷயத்தில் அதிருப்தியாக உள்ள முத்தரையர்களை, தி.மு.க., பக்கம் திருப்ப கட்சித்தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்கான பொறுப்பு, அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட இரு முன்னாள் அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் , பெரம்பலூர். கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயத்தினராக முத்தரையர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவே இருப்பர் என்பதால், மேற்கண்ட 5 மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக அந்த சமுதாயத்தினர் உள்ளனர்.
இதனால் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அ.தி.மு.க.,வில் அமைப்புச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான பொறுப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக கு.பா. கிருஷ்ணன், பரஞ்சோதி, ஆலங்குடி வெங்கடாசலம், கே.கே.பாலசுப்ரமணியன், என்.ஆர்.சிவபதி, அமைச்சர் பூனாட்சி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வளர்மதி, பெரம்பலூர் மருதை ராஜ். இப்படி பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது.
அதே போல திமுகவில் முன்னால் அமைச்சர் செல்வராஜ், காடுவெட்டி தியாகராஜன் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, இளைஞர் அணி ஆனந்த, சீமானூர் பிரபு, இப்படி தற்போதும் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது.
பிரதிநிதித்துவம் இல்லை:
இந்நிலையில் அண்மையில், அ.தி.மு.க.,வில் வெளியிடப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. மேலும் மேற்கண்ட மாவட்டங்களில், நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் பொறுப்புகளிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் முத்திரையர் சமுதாயத்தினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தஞ்சாவூர்,
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், பல்வேறு முத்தரையர் சங்கங்களின் சார்பில் பகிரங்க கண்டன கூட்டம் நடத்தப்பட்டு, அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலாளரை திட்டியது தொடர்பாகவும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்காக இந்த மாவட்டங்களில் உள்ள முத்திரையர் சங்கத்தை சேர்ந்த ஆர்.விஸ்வநாதன், மற்றும் செல்வகுமார் தலைமையில் சமுதாயத்தினர் ஒருங்கிணைந்து புதுக்கோட்டையில் நவம்பர் 5ம் தேதி பெரிய கண்ட ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முத்திரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் திரண்டு அதிமுகவிற்கு எதிராக தங்களின் பலத்தை காட்டுவதற்கும் அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டுத்து மாபெரும் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.
இந்த கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டுயிருக்கிறார். இது பிரச்சனையில் தனக்கு மேலிடத்தில் செல்வாக்கு குறைந்துவிடுமோ என்கிற பயமும் அமைச்சருக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவும் இல்லாமால் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இந்த பிரச்சனை தனக்கும் கட்சிக்கும் பின்னடைவு ஏற்படுமோ என்கிற பயமும் அவர்கள் மனதில் இருக்கிறது.
மாஜிக்களிடம் பொறுப்பு:
இப்படி, அ.தி.மு.க., மீது முத்தரையர் சமுதாயத்தினருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தன்பக்கம் ஈர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்தப் பொறுப்பு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ், உள்ளிட்ட, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சீமானூர் பிரபு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களும், சில முத்தரையர் சமுதாய அமைப்புகளுடனும், அந்த சமுதாயத்தில் சில முக்கிய பிரமுகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு இடையில் முத்திரையர் சங்கத்தை சேர்ந்த செல்வகுமார் சமீபத்தில் திமுகவின் கனிமொழியை சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தலில் முத்திரையர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ள நேரத்தில், அ.தி.மு.க.,வின் மீது அதிருப்தியோடு இருக்கும் முத்தரையர்களின் ஆதரவைப் பெற, தி.மு.க., முயற்சி மேற்கொண்டுள்ளது, தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு மேற்கண்ட மாவட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். இது பற்றி தமிழக உளவுத்துறை, விவரிவான அறிக்கையை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் முத்திரையர் சங்கத்தின் இந்த ஒருங்கிணைப்பும் செயல்பாடுகளுக்கும் திராவிட கட்சிகள் பெரிய குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. முத்திரையர்கள் இதில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் கடுமையாக உழைத்துக்கொண்டுயிருக்கிறார்கள்.
ஜெகன்முகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக