ஓயாத
அலைகள்..!!
விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகப்பெரிய போர் நடவடிக்கைக்கு "ஓயாத
அலைகள்" என்று பெயர், நேற்று
புதுக்கோட்டையை முத்தரையர் படை அதேவிதமாக தாக்குதல்
நடத்தியது, அங்கு ஆயுதப்போராட்டம் இங்கு
அகிம்சை போராட்டம் அவ்வளவுதான் வேறுபாடு.
காலை 8 மணிக்கு தொடங்கியது
புதுக்கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் ஒவ்வொரு மணி நேரமும்
ஒவ்வொரு பகுதியில் இருந்து வெவ்வேறு அணிகள்
புதுக்கோட்டையின் எல்லையை முட்டி நின்றது,
காவல்துறை பாவம் எந்த பகுதியில்
இருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள்
என்று கணிக்கமுடியாமல் திணறியது, இந்த நிலை மாலைவரை
நீடித்தது.
ஒருபக்கம் வீரமுத்தரையர் முன்னேற்ற
சங்கம், ஒரு பக்கம் சிங்கராஜாக்கள்
கட்சி, ஒரு பக்கம் இளம்
சிங்கங்களின் எழுச்சி இயக்கம், ஒரு
பக்கம் சோழநாடு முத்தரையர் முன்னேற்ற
சங்கம் இன்னும் இன்னும் ஏராளமான
அமைப்புகள், அதன் உறுப்பினர்கள், தன்னெழுச்சியாய்
புதுக்கோட்டையை நோக்கி திரண்ட ஆயிரமாயிரம்
மக்கள் என்று திணறியது புதுக்கோட்டை
இவ்வளவு சமூக அக்கறையுள்ள ஒரு இளைஞர் படை இருப்பதை நேற்று புதுக்கோட்டை வந்தவர்கள்
நேரில் கண்டிருப்பார்கள், காணாதவர்கள் இனி தொடர்ந்து கானுவார்கள்.
ஒட்டுமொத்தமாய் ஒரே முழக்கம் "அமைச்சர்
பதவியில் இருந்து விஜயபாஸ்கரை" உடனே
நீக்கு என்று, இதில் நேற்றிலிருந்து என்னுடைய ஒரே
ஆச்சர்யம் / பெருமை எமது இளைஞர்படை எங்கே சங்கமாய் பிரிந்து சண்டையிட்டுக்கொள்வார்களோ,
மது அருந்தி வந்து நோக்கத்தை சிதைத்துவிடுவார்களோ என்று அச்சப்பட்டவர்களின் முகத்தில்
கரியை பூசி ஆக்ரோசத்தோடு அணி திரண்டார்கள்.
காவல்துறை
கைதுசெய்ய முயன்றபோது எங்கே இவர்கள் பின்வாங்குகிறார்களா..
என்று திரும்பி பார்க்கும்முன்பே புன்னகையோடு காவல்துறை வாகனங்களை நிறைத்து நிற்கிறார்கள் (ஏம்பா காவல்துறை கைது
பன்னா கொஞ்சமாவது பயப்புடவேண்டாம்..? என்னவோ சொந்தகாரங்க வீட்டுக்கு
விருந்துக்கு போறமாதிரி போறிங்க.. :p )
இனி
எல்லாமே எனது இனத்தின் இளைஞர்களே
தீர்மானிப்பார்கள், அங்கு எவனும் சங்கம்
பார்க்கவில்லை, சங்கடம் பார்க்கவில்லை, பசியை
பார்க்கவில்லை ஆக்ரோசம், ஆக்ரோசம் அது மட்டுமே காண
கிடைத்தது.
ஊடக விபசாரம்
என்பது என்னவென்று இன்றைய செய்திதாள்களையும், நேற்றைய
செய்தி சேனல்களையும் கண்டு தெரிந்துக்கொள்ளலாம், இனி எவனாவது
மீடியாவில் இருந்து நீதி, நியாயம்,
நேர்மையைப்பற்றி நம்மிடம் பேசவந்தால் செருப்பால் அடித்து விரட்டுவோம்அல்லது போனால்போகட்டும் என்று விட்டுவிடுவோம்,
நம்மிடம்தான் ,மக்கள் ஊடகமாக சமூக
வலைத்தளம் இருக்கிறதே..
காவல்துறையை பாவம் என்பதா..? திட்டுவதா..?
என்று தெரியவில்லை, கைதானவர்களை மூன்று நான்கு காவலர்கள்
பெயர்களை வெவ்வேறு ஆவணங்களில் பதிவு செய்தார்கள், பதிவு செய்யும்போதே
வரிசை எண்களை குறிப்பிடவில்லை, அதனை
நான் கடுமையாக ஆட்சோபித்தபோது எழுதி முடித்தபிறகு வரிசை
எண்களை எழுதுகிறோம் என்று சொல்லி கடைசிவரை
அதனை செய்யவே இல்லை, காரணம்
கைதானவர்களின் எண்ணிக்கையை குறைத்துகாண்பிக்கும் நோக்கம். (இன்றைய செய்திதாள்களை பார்த்தால்
தெரியும் அந்த சங்கதி, ஒரு
நாளிதழ் 1800 என்கிறது, மற்றொன்று 2000 க்கும் மேல் என்கிறது,
ஒன்று 3000 என்கிறது ஆனால் உண்மை இருப்பத்தைந்தாயிரத்தை
தாண்டும்)
மதியத்திற்க்கு பிறகு நான் என்னை
அடைத்துவைத்திருந்த மெர்லின் மஹாலில் இருந்து வெளியேறி
மற்ற இடங்களின் நிலவரங்களை கான சென்றேன், புதுக்கோட்டையில்
இருந்த அனைத்து மண்டபங்களிலும் 500 முதல்
1000 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர், ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டு
இருந்த சிங்கராஜாக்கள் கட்சி நிறுவனர் திரு.அருணாச்சலம் அவர்களை நேரில் சந்தித்து
வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துவிட்டு, திருவப்பூர் மாரியம்மன் கோவில் அருகில் வேறு
ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் திரு.
கே.கே.செல்வகுமாரை சந்தித்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துவிட்டு, சோழநாடு முத்தரையர்
முன்னேற்ற சங்க தலைவர் திரு. முசிறி சரவணனை சந்திக்க முயற்சி செய்து முடியாமல் பல்வேறு
மண்டபங்களையும் சென்று மக்களை கண்டுவந்தேன். (வேறு அமைப்பின் தலைவர்கள் யாரும் கைதானதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை, ஒருவேளை கலந்துகொண்டு இருந்தால் தகவல் தாருங்கள் திருத்திக்கொள்வோம், கலந்துகொள்ளாதிருந்தால் காரணங்களை அறிக்கையாக மக்களுக்கு அளித்துவிடுங்கள்)
புதுக்கோட்டை நகரெங்கும் காவல்துறை 150க்கும்
மேற்பட்ட காவல் வாகனங்கள், வஜ்ரா போன்ற கலவரதடுப்பு வாகனங்கள் அதிமுக மாவட்ட அலுவலக
வாசலில் 100க்கும் மேற்பட்ட ரெளடிகள் இதையெல்லாம் தாண்டி புதுக்கோட்டை மாநகரை கைது
செய்யப்பட்ட 25 ஆயிரம் இளைஞர்களை தாண்டி சுமார் 30 முதல் 40 ஆயிரம் முத்தரையர்கள் நின்று
கொண்டே இருந்தார்கள் மண்டபங்களில் அடைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு உணவு வழங்க காவல்துறையால்
முடியவில்லை காரணம் எண்ணிக்கை, கைது செய்ய கைது செய்ய வந்துகொண்டே இருந்ததினால் அவர்களால்
உணவு தயாரித்து வழங்க முடியவில்லை, கடைசியில் கைது செய்பவர்களை பத்து இருபது கிலோமீட்டர்
தாண்டி கொண்டு சென்று இறக்கிவிட்டது காவல்துறை ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை,
அதிமுக அலுவலகத்தில் கல் எறிந்த சம்பவம் அதை தொடர்ந்து நடந்த சிறிய அளவிலான தடியடி
தாண்டி இத்தனை ஆயிரம் பேர் கூடியும் வேறு ஒரு வன்முறையும் பதிவாகவில்லை. ஆண்ட இனம்
என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த நிகழ்வு அது.
எங்கே குடித்து சொதப்பிவிடுவார்களோ என்ற அச்சத்திற்க்கு
அவசியமே இல்லாமல் போய்விட்டது 40 வயதுக்கு குறைவானவர்களில் 99% குடிக்கவில்லை, அதற்க்கு
மேற்பட்ட வயதினர் பழக்கதோசத்தில் 20% அளவிற்க்கு மது அருந்தி இருந்ததையும் காண முடிந்தது.
மாலை 5:30 மணி தொடங்கி அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர்.
இது ஒட்டுமொத்தமாக நேற்று நடந்த நிகழ்வுகளின்
தொகுப்பு, இதில் பதிவு செய்யப்படாத தகவல்களை யாரும் அறிந்திருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்,
அதேபோல விபச்சார ஊடகங்கள் நம்முடைய செய்திகளை புறக்கணிக்கிறது என்று கவலையை விட்டுவிடுவோம்
நமக்கான செய்திகளை நாமே பரிமாறிக்கொள்வோம். http://illamsingam.blogspot.in/ இந்த
வலைத்தளத்தில் செய்திகளை தொகுத்துவழங்க நான் தயாராகவே உள்ளேன் உங்களிடம் போராட்டம்
தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இருந்தால் 9159168228 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்க்கோ,
sanjai28582@gmail.com என்ற இமெயில் முகவரிக்கோ
அனுப்பி தாருங்கள் நாமே வெளியிடுவோம்.
இந்த போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக விரைவில்
அனைத்து மாவட்ட தலைநகரங்கள், வட்டார தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து
அமைப்புகள் ஆலோசனை நடத்திவருவதாக தகவல், அதிமுக சார்பில் சில அமைப்பின் தலைவர்களை அழைத்து
சமாதானப்படுத்தவும் முயற்சி நடக்கிறது.
எது எப்படி ஆனாலும் இதற்க்கு ஒரே தீர்வுதான்
அது "விஜயபாஸ்கரை" பதவி நீக்குவது, அது இல்லாத எந்த தீர்வாக இருந்தாலும்
நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே முத்தரையர் இளைஞர்களின் ஒரே முடிவு, எங்கள்
முடிவும் அதுதான்
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அமைப்புகள்,
அதன் தலைவர்கள், பொதுமக்கள், மறைமுகமாக உதவிய அனைத்து முத்தரையர் அரசியல் பிரபலங்கள்,
தொழிலதிபர்கள், வெளிநாட்டு நண்பர்கள், சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம் போன்ற நெடுந்தொலைவில்
இருந்து கலந்துகொண்ட உறவுகள், திருச்சி மாவட்டத்தில் இருந்து திரண்டுவந்து திணரடித்த
உறவுகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து எதிரிக்கு குலைநடுங்கும் கோசத்தோடு வந்த உறவுகள்,
சிவகங்கை மாவட்ட சிங்கங்கள், புதுக்கோட்டையின் பூர்வகுடிகள், மற்ற மாவட்டங்களின் சமுதாய
ஆர்வலர்கள், செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள், அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் மருத்துவர்
ராமதாஸ், இதையெல்லாம் தாண்டி தார்மீக ஆதரவினை வழங்கிய அனைத்து சமுதாய மக்கள் அனைவருக்கும்
நன்றியினை உரித்தாக்குகிறோம்.
சஞ்சய்காந்தி
அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்
இளம்
சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக