சென்னை முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் தலைவர் திரு.மாறன், செயலர் திரு. ராமன் அவர்களுடன் நான்
கூட்டத்தின் தொடக்கமாக இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். இச் சிறப்புரையில் கலந்து கொண்டவர்கள் அரசு அலுவளர்கள், தொழிலாளர்கள், தொழில் நிருவனத் தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.
இச் சிறப்புரையில் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி மற்றும் தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடுகள் ,எதிர்வரும் காலங்களில் இணையத்தின் உதவியுடன் தமிழை வளர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் வழிமுறைகள் பற்றியச் செய்திகளையும் எடுத்து விளக்கினேன்.
மேலும் முத்துக்கமலம், பதிவுகள்,திண்ணை,வார்ப்பு இணைய இதழ்களைக் காட்டி இணைய இதழ்களுக்கு எவ்வாறு எழுதுவது என்று சுட்டிக்காட்டினேன்.
தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய அவசியத்தையும் அதனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் பேசப்பட்டது.
வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற படிநிலைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.
மின்குழுமங்களின் பங்களிப்பையும் அதில் நாம் தொடுக்கும் வினாவிற்கு தகுந்த விடையை கொடுக்கும் உலகத்தமிழர்களையும்(மின் குழுமம், அன்புடன் குழுமம்,அழகி குழுமம், கீற்றுக்குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்) காணும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இணையம் தொடர்பான வினாக்களைக் கேட்டார்கள்.
1.இணையத்தில் எவ்வாறு தமிழில் எழுதுவது?
2. இணையத்தில் எந்த தலைப்பைத் தேடினாலும் பதில் கிடைக்குமா?
3. நம் கருத்தை எவ்வாறு இணையத்தில் பதிவேற்ற இயலும்?
4.மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?
5.வலைப்பூ என்றால் என்ன? அதனை உருவாக்கும் முறைகளைப் பற்றிக் கூறுங்கள்.
இதுபோன்ற பல வினாக்களுக்கு செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.
இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பார்வேந்தன் அவர்கள் நன்றி கூறினார்.
இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இடம் கொடுத்த சங்கத்தின் செயலாளர் திரு ராமன், பொருளாலர் திரு.கன்னியப்பன், துணைச்செயலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும் வலைப்பூவின் ஆசிரியருமான சென்னையைச் சேர்ந்த திரு.சேதுபாலா அவர்களும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.

THANKS: http://manikandanvanathi.blogspot.com/search?updated-min=2011-01-01T00:00:00-08:00&updated-max=2012-01-01T00:00:00-08:00&max-results=27
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள். மிக வியப்பாக உள்ளது. முத்தரையர் என்று இணையத்தில் தட்டினால் ஒரு வலைப்பூக் கூட இல்லையென்ற ஏக்கத்தை நண்பர்கள் போக்கியுள்ளனர். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆக்கப்பூர்வமான பணிகளை நாம் கையில் எடுக்க வேண்டும்.
அன்புடன்
முனைவர் துரை. மணிகண்டன்.
எமது வலைதளத்திற்கு வந்தமைக்கும் உங்களின் அழைப்பிற்கும் மிக்க நன்றி நாம் இணைந்து செயலாற்ற நாங்கள் தயராகவே இருக்கின்றோம் மீண்டும் நன்றியுடன்
சஞ்சய் காந்தி
கருத்துரையிடுக