Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,

we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 26 மே, 2010

29.05.2010

பட்டுக்கோட்டை

கடந்த வாரம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 -ம் ஆண்டு பிறந்த தினத்தினை நாமெல்லாம் சிறப்பாக கொண்டாடிய அதே நேரம் ராமநாதபுரம் மாவட்டம், ஏர்காடில் முத்தரைய மக்களால் திறந்து வைக்கப்பட்ட முத்தரையர் சிலையை அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் அகற்றியுள்ளது. ஏனோ தெரியவில்லை எலியார் பத்தியானாலும், ஏர்காடானாலும் முத்தரையர் சமூகத்திடம் மாத்திரம் சட்டம் கடுமையான போக்கினையே கடைபிடிக்கிறது, எம்மக்கள் எளிமையானவர்கள், சட்டத்தினை மதிக்க தெரிந்தவர்கள் அதே நேரம் சிலை வைக்க அனுமதி பெறாதது அறியாமையினாலையே தவிர அரசாங்கத்திற்கு எதிராக அல்ல இது மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரிந்திருந்தும் வேண்டும் என்றே அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியதோடு அவசர அவசரமாக சிலையை அகற்ற வைத்துள்ளது, மேலும் சமரசக் கூட்டம் நடத்தி சிலையை அகற்ற எமது சமூகத்தினர் சம்மதித்த போதும் காவல்துறையினரை அங்கே குமித்து மீண்டும் பதட்டமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 50 க்கும் அதிகமானவர்கள் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது , இதில் உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம், தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு மீண்டும் சிலையினை அதே இடத்தில் அரசின் செலவில் வைக்க வேண்டும், இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள அணைத்து வழக்குகளும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம், நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை எங்களிடம் சட்டம் தேவையற்ற கடுமையினை கட்ட வேண்டியதென் அவசியம் எங்களுக்கு புரியவில்லை, மேலும் இப்பிரச்சனையினை ஒரு முடிவிற்கு கொண்டுவருவீர்கள் என்று நம்புகிறோம்

நன்றி

சஞ்சய்காந்தி
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர், தமிழ்நாடு - 614701

கைபேசி எண்கள்: 0091- 9791486581, 0091- 9003834321, 0091-9629328985
E-mail: sanjai28582@gmail.com

மே மாதம் 23 ம் தேதி (2010 ம் வருடம்) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ம் ஆண்டு பிறந்த தின விழாவும், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவும் பழஞ்சூர் சிவன்கோவில் அருகில் மிக சிறப்பாக நடந்தது, இந்த விழாவிற்கு வந்திருந்த இயக்க உறுபினர்களையும்,சமுதாய நண்பர்களையும், பெரியோர்களையும் வரவேற்று இயக்கத்தின் தலைவர் திரு.தேவா (எ) சுரேஷ் பேசினார். மேலும் சிறப்பு விருந்தினராக திரு. கருப்பையன்அவர்களும், மேலும் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் திரு.விவேக், திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.ராஜகுரு ஆகியோரும் சிறப்புரையாற்றினர்,

இயக்கத்தின் வளர்ச்சி குறித்தும் இயக்கத்தின் செயல் திட்டம் குறித்தும் இயக்கத்தின் செயலாளர் திரு.காந்தி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார், மேலும் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும், உறவினர்களுக்கும் விழாவின் நிறைவில் தேனீரும், இனிப்பும் கொடுத்து உபசரிக்கப்பட்டது, இவ்விழாவினை சிறப்பாக நடத்திட இயக்கத்தின் முன்னோடிகள் திரு.ராஜேந்திரன், திரு.நீலகண்டன், திரு.மணிகண்டன், திரு.கார்த்திக், திரு, வீரமணி ஆகியோர் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர் ,

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. தமிழகம் முழுவதும் 29 பட்ட பெயர்களுடன் வாழ்ந்து வரும் முத்தரையர் சமூகத்தினரை ஒரே பெயராக "முத்தரையர்" என்று 2004 ம் ஆண்டில் அன்றைய முதல்வரால் அறிவிக்கப்பட்டதினை தமிழக அரசு உடனடியாக செயல் படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். இதனை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக அறிவிக்கவேண்டும்

2. முத்தரையர் சமுகத்தின் அனைத்து பிரிவினரையும் இணைத்து அறிவிப்பதுடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும், தமிழக அளவில் 20% தனி இட ஒதுக்கிடு வழங்கவும் வலியுறுத்துகிறோம்.

3. தமிழக அமைச்சரவையில் மேலும் ஒரு பிரதிநிதித்துவம் தர திமுக அரசை வலியுறுத்துகிறோம்

4. வறுமைக்கோட்டுக்கு கிழே வாழும் முத்தரையர் சமூகத்தினருக்கு தற்போதிய சூழ்நிலையில் ஒருவேளை உணவிற்கே கஷ்டபடும் நிலையில் எம்மின பெண்களுக்கு திருமணம் என்பது கனவாகவே உள்ளது, நிறைய பெண்கள் திருமண வயதினை கடந்தும் நிற்கிறார்கள் எனவே தமிழக அரசு உடனடியாக முத்தரையர் இன பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூபாய் 5௦,000 வழங்க வேண்டும்

5. நமது நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பிற்கு இசைவான நிலை தெரிவித்த இந்திய மத்திய அரசிற்கு நன்றியினை உரித்தாக்குகிறோம்

6. தமிழக அரசு முத்தரையர் பிறந்த நாளில் விழா எடுபதற்கு எங்களின் நன்றியினை உரிதக்கும் அதே நேரம் முத்தரையர் பற்றிய வரலாற்றினை பாட புத்தகங்களில் சேற்பதுடன் முத்தரையர் பிறந்த நாளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்

7. முத்தரையர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சாவூரில் தமிழக அரசு தனது செலவில் சிலை வைக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்

8. சமுதாயத்தினை சேர்ந்த அரசியல் இயக்க பிரமுகர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்கள், முத்தரையர் சமுதாய இயக்கங்களின் தலைவர்கள், முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியை எடுப்பது என்றும்

9. தமிழக அரசு அமைக்கவிருக்கின்ற சட்டமன்ற மேலவையில் முத்தரையர் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவது எனவும்

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் திரு. நீலகண்டன் நன்றி கூற விழ இனிதே நிறைவடைந்தது

திங்கள், 24 மே, 2010

முத்​த​ரை​யர் சிலையை அகற்ற எதிர்ப்பு: கிராம மக்​கள் போராட்​டம்

First Published : 25 May 2010 01:46:44 AM IST

Last Updated :

ராமே​சு​வ​ரம்,​​ மே 24: ​ ராமே​சு​வ​ரத்​தில் முத்​த​ரை​யர் சிலையை அகற்ற முயற்​சித்த போலீ​ஸô​ருக்கு கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்து சிலை முன் அமர்ந்து திங்​கள்​கி​ழமை போராட்​டம் செய்​த​னர்.​

​ ராமே​சு​வ​ரம் அருகே ஏர​காடு கிரா​மத்​தில் சனிக்​கி​ழமை இரவு பெரும் பிடுகு முத்​த​ரை​யர் சிலை நிறு​வப்​பட்​டது.​ அரசு அனு​ம​தி​யின்றி வைக்​கப்​பட்ட சிலையை அகற்​றிட வேண்​டும் என காவல்​துறை,​​ வரு​வாய்​து​றை​யி​னர் கிராம மக்​க​ளி​டம் வலி​யு​றுத்​தி​னர்.​

​ இதை​ய​டுத்து திங்​கள்​கி​ழமை ராமே​சு​வ​ரம் தாசில்​தார் அலு​வ​ல​கத்​தில் கோட்​டா​சி​யர் இளங்கோ தலை​மை​யில் சம​ர​சக் கூட்​டம் நடந்​தது.​ இதில் கூடு​தல் எஸ்.பி.​ சூரி​ய​பி​ர​காஷ்,​​ ராமே​சு​வ​ரம்,​​ கீழக்​கரை டி.எஸ்.பி.கள்.​ கம​லா​பாய்,​​ ராதா​கி​ருஷ்​ணன்,​​ மற்​றும் மாவட்ட முத்​த​ரை​யர் சங்​கத் தலை​வர் குப்​பு​சாமி,​​ நிர்​வா​கி​கள் செல்​லத்​துரை,​​ முனி​ய​சாமி உள்​ளிட்ட ஏர​காடு கிரா​மப் பிர​மு​கர்​கள் கலந்​து​கொண்​ட​னர்.​

​ இக்​கூட்​டத்​தில் அரசு அனு​ம​தி​யின்றி வைக்​கப்​பட்ட முத்​த​ரை​யர் சிலையை அகற்​றி​விட்டு,​​ மீண்​டும் சிலை நிறுவ ஒரு மாதத்​திற்​குள் அரசு அனு​மதி பெறு​வது என​வும்,​​ விரை​வில் அரசு அனு​மதி வழங்க பரிந்​துரை செய்​வது என​வும் தீர்​மா​னம் இயற்​றப்​பட்​டது.​

​ இதை​ய​டுத்து சிலையை அகற்ற ஏர​காடு கிரா​மத்​திற்​குச் சென்ற வரு​வாய்த்​துறை மற்​றும் போலீ​ஸô​ருக்கு கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​னர்.​ பின்​னர் துணி​யால் மூடப்​பட்ட சிலை முன் அமர்ந்து போராட்​டம் செய்​த​னர்.​ இத​னால் அங்கு பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.

24.05.2010 அன்று "தினமணி" நாளிதழில் வந்த செய்தி.............

1335-வது சதய விழா: முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு

First Published : 24 May 2010 12:50:09 PM IST

Last Updated :

திருச்சி, மே 23: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335-வது சதய விழாவையொட்டி, திருச்சி கன்டோன்மென்ட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பிலும், அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரசு சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மா. ராஜசேகரன், இரா. ராணி, இரா. மாணிக்கம்,

திருச்சி மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணைமேயர்

மு. அன்பழகன், ஆணையர் த.தி. பால்சாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சங்கீதா வசந்தகுமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அ.த.த. செங்குட்டுவன், எஸ். துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அதிமுக சார்பில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட அதிமுக செயலர் ஆர்.

மனோகரன், புறநகர் மாவட்ட செயலர் பே. சுப்பு என்கிற சுப்பிரமணியன், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார், சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப. கிருஷ்ணன், ப. அண்ணாவி, கே.கே. பாலசுப்பிரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பிரின்ஸ் எம். தங்கவேல், என்.ஆர். சிவபதி, டி. ரத்தினவேலு, பாலன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வெல்லமண்டி என். நடராஜன், மாநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலர் சீனிவாசன் உள்ளட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர். விசுவநாதன் தலைமையில் சங்கத்தினர் வரகனேரியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

கட்சியின் மாவட்டச் செயலர்கள் ஆர். விஜயராஜன், செந்தில்குமார், நடராஜன், தொகுதிச் செயலர்கள் ஏ.எம்.ஜி. விஜயகுமார், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவனர் - தலைவர் டி.ஆர். பச்சமுத்து உடையார் தலைமையில் அக் கட்சியினர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் வி. ஜயபால் உள்ளிட்டோரும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் வரகனேரி எஸ். பார்த்திபன், கட்சி நிர்வாகிகள் திருமலை, பெரியசாமி உள்ளிட்டோரும் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சங்கத்தின் மாவட்டச் செயலர் தங்கவேல், பொருளாளர் குஞ்சான், மாநகரப் பொறுப்பாளர்கள் ஜயச்சந்திரன், வேலாயுதம், பெரியசாமி, ராஜமாணிக்கம், விஸ்வம், மூர்த்தி, ஆனந்த் உள்ளிட்டோர் மாலையணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மதிமுக சார்பில் புறநகர் மாவட்டச் செயலர் ஆர். நடராஜன் தலைமையில் அக் கட்சியினர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஒன்றியச் செயலர்கள் எல். கிருஷ்ணமூர்த்தி, டி.டி.சி. சேரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், கோபால், தமிழகன், மகேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திருச்சிமுத்தரையர் சமூகத்தை "எம்பிசி' பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

First Published : 24 May 2010 12:50:22 PM IST

Last Updated :

திருச்சி, மே 23: முத்தரையர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335-வது சதய விழா பொதுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். விசுவநாதன் தலைமை வகித்தார்.

பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

முத்தரையர் மரபில் 29 பட்டப் பெயர்கள், தொழில்பெயர்கள் மற்றும் வழங்கு பெயர்களில் வாழும் அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

முத்தரையர் என்ற தலைப்பின் கீழ் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பிற இனத்தவரின் தாக்குதல்களில் இருந்து சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ளதைப் போல, சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி, முத்தரையர்களுக்கு 20 சதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

சட்டப் பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் முத்தரையர் சமுதாயத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கியும், நியமனப் பதவிகள், வாரியத் தலைவர் மற்றும் அரசுத் தேர்வாணையக் குழு ஆகியவற்றில் இடம் வழங்க வேண்டும்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலையை தஞ்சை, சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் திறந்து வைத்து அரசு விழா எடுக்க வேண்டும். மேலும், தஞ்சையில் பேரரசருக்கு மணிமண்டபம் அமைக்க வேணóடும்.

அரசு பாடநூல்களில் முத்தரைய மன்னர்களில் புகழ்வாய்ந்த சுவரன்மாறன், 2-ம் பெரும்பிடுகு முத்தரையர், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் வரலாறுகள் இடம்பெறச் செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தில் வளப்பக்குடி கிராமத்தையும், மணத்திடல் கிராமத்தையும் இணைக்கும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். புதுக்கோட்டை மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான கொள்ளிடம்- காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். முத்தரையர் இன மக்களுக்கு சுய தொழில்கள் தொடங்கவும், வங்கிகளில் கடனுதவி பெறவும் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒத்தக்கடை பகுதியிலுள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தினர் உண்ணாவிரதம்

First Published : 24 May 2010 01:35:57 PM IST

Last Updated :

தஞ்சாவூர், மே 23: கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தஞ்சாவூரில் முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடம் முன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எஸ்.எம். மூர்த்தி தலைமை வகித்தார்.

மாநில இளைஞர் அணி செயலர் ஏ.எம். புகழேந்தி முன்னிலை வகித்தார். குரலரசு கழக மாநில விவசாயப் பிரிவு செயலர் கு. மாரிமுத்து உண்ணாவிரதத்தை தொடக்கிவைத்தார்.

தஞ்சாவூரில் பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலையுடன் மணி மண்டபம் கட்டி, புதிய பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். தமிழகத்தில் வாழும் முத்தரையர் அனைவருக்கும் குடியிருக்கும் நிலத்திற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

முத்தரையர் மாணவர்கள் சுயதொழில் தொடங்க பிணையம் இல்லா கடன் வழங்க வேண்டும்.

விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்து, நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன

அனுமதியின்றி முத்தரையர் சிலை: எஸ்.பி. ஆலோசனை

First Published : 24 May 2010 12:39:06 PM IST

Last Updated :

ராமேசுவரம், மே 23: ராமேசுவரத்தில் அருகே அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) ராஜசேகரன் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

ராமேசுவரம் அருகே ஏர்க்காடு கிராமத்தில் வசிக்கும் சமூகத்தினர் சனிக்கிழமை இரவு பெரும்பிடுகு முத்தரையரின் 5 அடி உயர சிலையை திறந்துவைத்து பூஜை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் தாசில்தார் ராஜேந்திரன், டி.எஸ்.பி. கமலாபாய் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்கு விரைந்துசென்றனர்

அங்குள்ள கிராமப் பிரமுகர்களிடம் அனுமதியின்றி சிலை நிறுவக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலை குறித்து ராமநாதபுரம் கோட்டாசியர் இளங்கோ, கூடுதல் போலீஸ் எஸ்.பி. சூரியபிரகாஷ் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கிராம முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தமுடியாமல் போனது. இதன்பின்னர் அதிகாரிகள் உத்தரவின்படி சிலையை துணியால் சுற்றி மூடிவைத்தனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. ராஜசேகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்

கோட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் அரசின் அனுமதிபெறும் வரை சிலையை திறக்கவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும்; இதுகுறித்து கிராமப் பிரமுகர்களிடம் செவ்வாய்க்கிழமை ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

பழஞ்சூரில்....

First Published : 24 May 2010 10:04:13 AM IST

Last Updated :

பட்டுக்கோட்டை, மே 24: பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூரில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பின் 2 -ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பேரவையின் முன்னாள் தலைவர் வி. கலைமணி இயக்கக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். ஜெயராமன், தசரதன், உத்திராபதி, சரவணன்,நீலகண்டன், மணிகண்டன், விவேக், ராஜகுரு, வீரமணி உள்ளிட்ட இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இயக்கச் செயலர் எம். காந்தி வரவேற்றார். தலைவர் ஆர். சுரேஷ் நன்றி கூறினார்.

24.05.2010 அன்று தினமலர் நாளிதழில்.....

.பேரரசர் முத்தரையர் சதயவிழா கட்சியினர் மாலை அணிவிப்பு

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,335வது சதயவிழாவையொட்டி, திருச்சியில் பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,335வது சதயவிழாவையொட்டி, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் சவுண்டையா, எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, சேகரன், ராஜசேகரன், சவுந்திரபாண்டியன், ராணி, மாணிக்கம், மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சங்கீதா, பஞ்சாயத்து தலைவர்கள் செங்குட்டுவன், துரைராஜ், மாநகராட்சி கோட்டத்தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், அறிவுடைநம்பி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க., சார்பில், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் வெங்கடாச்சலம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், புறநகர் மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், எம்.பி., குமார், எம்.எல்.ஏ., பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க., சார்பில், மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் விஜயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3.இடஒதுக்கீடு வழங்க கோரி முத்தரையர் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி அணி செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சிவனேசன், மாரிமுத்து, நகர செயலாளர் முத்துகுமார் உட்பட பலர் பேசினர். முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் தனி இடஒதுக்கீடு வேண்டும். தஞ்சையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும். தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என பெயர் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் வாழும் முத்தரையர் அனைவருக்கும் குடியிருக்கும் நிலத்தை உடனடியாக பட்டா வழங்க வேண்டும். முத்தரையர் மாணவர்களுக்கு சுய தொழில் செய்ய பிணையம் இல்லாத கடன் வழங்க வேண்டும். விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்து நடப்பு ஆண்டில் வழங்க வேண்டும். சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.

2.ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி சிலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகில் அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைத்துள்ளனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., கமலபாய் சிலையை அகற்று கூறினார். சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவிட்டதால் ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

நேற்று காலை அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து, நான்கு புறமும் துணியினால் தடுப்பு ஏற்படுத்தி சிலையை மறைத்து வைத்தனர். அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., இளங்கோ, சிவகங்கை எஸ்.பி.,ராஜசேகரன் , ஏ.எஸ்.பி.,பிரகேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி முத்தரையர் சிலை திடீர் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி நிறுவப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலையை போலீசார் அகற்ற கூறியதால் பதட்டமான சூழ்நிலை உருவானது. ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தில் அதிகளவில் முத்தரையர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் அருகில் பீடம் அமைத்து நேற்று முன்தினம் இரவில் ஐந்தடி உயரத்தில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை நிறுவியுள்ளனர். அனுமதியின்றி சிலை வைத்ததால் ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,கமலபாய் தலைமையில் போலீசார் நிறுவப்பட்ட சிலையை அகற்றுமாறு கிராமத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால் பொது மக்கள் மறுத்து விட்டதால் ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே முத்தரையர் சிலையை போலீசார் அகற்றப்போவதாக தகவல் பரவியதால் ராமேஸ்வரம்,பாம்பன், மண்டபம் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான முத்தரையர் சமுதாயத்தினர் ஏரகாடு கிராமத்தில் நள்ளிரவில் குவிந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். நேற்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன்களில் திரண்டு வந்த இச்சமுதாயத்தினர் சிலைக்கு மாலையிட்டு திருச்சியில் நேற்று நடைபெற்ற மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு புறப்பட்டு சென்றனர். பின் அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து முத்தரையர் சிலையின் நான்கு புறமும் துணியினால் தடுப்பு ஏற்படுத்தி சிலையை மறைத்து வைத்தனர். இதனிடையே ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., இளங்கோ, சிவகங்கை எஸ்.பி.,ராஜசேகரன் (ராமநாதபுரம் பொறுப்பு), பரமக்குடி ஏ.எஸ்.பி., பிரகேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலையை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

முத்தரையர் சதய விழாவில் தேசிய மக்கள் கட்சி துவக்கம்

பதிவு செய்த நாள் : மே 23,2010,02:13 IST

திருச்சி: "தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடுபடவே தேசிய மக்கள் கட்சி உதயமாகிறது' என்று அக்கட்சியின் மாநில தலைவர் தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநில தலைவருமான அருணாச்சலம் கூறியதாவது:
தேசிய மக்கள் கட்சி முத்தரையர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக துவக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லா சலுகையும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய நோக்கமாகும். பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா இன்று 23ம் தேதி திருச்சியில் நடக்கிறது.இதற்காக ஸ்ரீரங்கத்திலிருந்து ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலை வரை ஊர்வலமாக வந்து தேசிய மக்கள் கட்சி துவக்கப்படுகிறது. முத்தரையர்களுக்கு ஜாதிவாரியாக எந்த சலுகையும் கிடைப்பதில்லை. ஆகையால், ஜாதிரீதியாக சலுகை பெறவேண்டும் என்ற நோக்கிலும் தேசிய மக்கள் கட்சி துவக்கப்படுகிறது.

பதிவு செய்த நாள் : மே 24,2010,03:58 IST

மதுரை: முத்தரையர் புனரமைப்பு கழக தென் மண்டல மாநாடு மதுரையில் நடந்தது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் அழகுமலை தலைமை வகித்தார். இட ஒதுக் கீட்டில் முத்தரையர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குதல்; தனி நலவாரியம் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறுவனர் தனுஷ்கோடி பங்கேற்றார்.

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு

கீழக்கரை : ஏர்வாடியில் ஒளி வெள் ளத்தில் மிதந்து வந்த சந்தனக்கூடால் பரவசமடைந்த பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் ஜாதி, மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு தர்காவில் சமாதி அடைந்துள்ள செய்யது இப்ராகிம்மை சரணடைந்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை அனைவரது மத்தியிலும் உள்ளது.

மதநல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்து வரும் ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு விழா நேற்று அதிகாலை நடந்தது. வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்த தர்காவின் சுற்றுப்புற பகுதிகளை முத்தரையர் சமூகத்தினர் கொண்டு வந்த தண்ணீரால் சுத்தம் செய்தனர். சந்தனகூடின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் உருவாக்கினர். அலங்கரிக்கும் பொறுப் பினை ஆதி திராவிடர்கள் ஏற்றனர். ஊர்வலத்தில் வழிகாட்டுதலுக்காக பிடிக்கப்படும் தீப்பந்தங்களுக்கான துணிகளை சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்தனர். அதில் ஊற்றப்பட வேண்டிய எண்ணையை ஆதி திராவிடர்கள் வழங்கினர்.

பல்வேறு சமூகத்தினரின் முதல் மரியாதையை பெற்று கொண்ட சந்தனகூடு சந்தன பேழையை சுமந்து கொண்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தவாறு தைக்காவில் இருந்து வெளியேறியது. சந்தனகூட்டினை பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்று தர்காவிற்குள் அழைத்து சென்றனர். புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வுக்கு பின் பக்தர்கள் பிரசாத சந்தனத்தை பெற்றனர். ராமநாதபுரம் எஸ்.பி., செந்தில்வேலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சனி, 22 மே, 2010

22.05.2010

இன்று மங்களூர்ரில் இடம் பெற்ற விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களையும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறோம்..... !

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

21.05.2010
பட்டுக்கோட்டை

அன்பான என் இன சகோதரர்களே, உங்களை வணங்குகிறேன்... நாளது நாள் 23.05.2010 ல் நமது இனத்தில் வரலாற்றில் இடம் பெற்ற மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ம் ஆண்டு பிறந்த தின விழா.......... இந்நாளில் நாம் பெருமைப்பட தக்க ரீதியில் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் "சாதியையும் கணக்கில் எடுக்கப்படும்" என்ற அறிவிப்பு உள்ளது. இதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் , நமது இனத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள், இந்நாள் அமைச்சர் பெருமக்களுக்கும், எமது சமுதாய சங்கங்களின் தலைவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோளினை வைக்கிறோம், தயவுசெய்து உங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை கலைந்தோ, அல்லது உங்களின் தனிப்பட்ட செல்வாக்கினைப் பயன்படுத்தியோ தமிழக முதல்வரை சந்தித்து கணக்கெடுப்புக்கு முன்பாக 29 பட்ட பெயர்களுடன் தமிழகம் முழுவதும் பறந்து வாழும் முத்தரையர் சமுதாயத்தினர் தங்களின் பட்ட பெயர்களுக்கு முன்பாகவோ, பின்பாகவோ முத்தரையர் என்ற சொற்பதம் சேர்த்துக்கொள்ள அரசாணை வெளியிட வலியுறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், இது நமக்கு கிடைத்துள்ள மிக அற்புதமான சந்தர்ப்பம் இதனை நழுவ விட தயவு செய்து நீங்கள் காரணமாகி விடாதிர்கள், பல ஆண்டுகளாக நாம் கோரிக்கை விடுத்தது, கோரிக்கை விடுத்தது இப்பொழுதுதான் நமக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு எடுத்துள்ளது. இப்பொன்னான வாய்ப்பினை நமக்கு சாதகமாக பயன்படுத்திட இனத்தின் பிரபலமானவர்கள், முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைக்க எமது இயக்கம் தன்னாலான பணியினை ஆற்றிடும் என்பதனை தெரியப் படுத்துகிறோம்.
மேலும் சகோதரர்களே, இனத்தின் வரலாற்றின் நாயகர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவன்று திருச்சி மாநகரின் மத்தியில் முன்னாள் தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொது செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா வினால் திறந்துவைக்கப்பட்ட மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழித்திட பல்வேறு அரசியல் இயக்கங்களும், முத்தரையர் சங்கங்களும் தயாராகி வருகின்றன, அதே போல் முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாநாட்டுப் பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது, அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம், மேலும் எமது இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவுக்கும், கொடியேற்று விழாவுக்கும், மேலும் மாமன்னர் படத்திற்கு மரியாதையை செலுத்தும் விழாவிற்கும் பட்டுக்கோட்டைக்கு அருகில் பழஞ்சூர் ரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறிவிப்பதோடு அனைவரையும் விழாவில் பங்கெடுக்கவும் அன்போடு அழைக்கிறோம்.

அன்புடன்....
R.தேவா (எ) சுரேஷ் B.Sc.,
தலைவர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9791-4865-81

நண்பர்களே மே மாதம் 23 ம் நாள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 வது பிறந்த தினம் இந்நாளினை முத்தரைய மக்கள் சிறப்பாக கொண்டாட அன்புடன் அழைக்கிறேன்

அன்போடு
காந்தி
செயலாளர்,
இளம் சிங்கங்களின் எழுட்சி இயக்கம்

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம், மிக நீண்ட நாளாக பகிர்ந்துக் கொள்ள நினைத்த ஒரு விஷயம்..........ஆம் நம்மவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நான் இந்த சாதியை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை... காரணம் நாம் கீழ் சாதியாயிர்ற்றே என்ற தாழ்வு மனப்பான்மை........... முட்டாள் தனமான இந்த கருத்தை பெரும்பாலும் படித்தவர்களே கொண்டிருக்கிறார்கள். முத்தரையர் சமுகம் வெறுமனே பத்தோடு பதினோன்றானதல்ல இச்சமுகம் நாடாண்ட சமுகம் என்பதனை வேண்டா வெறுப்பாகவே தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தஞ்சாவூர் மாவட்டத்திற்கான இணைய தளத்தில் www.thanjavur.tn.nic.in/ சோழர் என்ற தலைப்பில் எழுதப்பட்ட வரலாற்றினை வாசிப்பவர்கள் அறிந்துக்கொள்ள முடியும்

சோழர்களை முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள் என்று வரலாற்றினை பிரிப்பதும் 7-ம் நுற்றாண்டு முதல் 9-ம் நுற்றாண்டு வரை வரலாற்றின் இருண்ட காலம் என்பதும் நம்முடைய வரலாற்றினை சிதைக்கும் முயற்சியே அன்றி வேறில்லை முகலாயர்கள் இசுலாமியர்களே, பாளையக்காரர்கள் பாளையக்கரர்களே அதே போல சோழர்கள் முத்தரையர்களே........... இதை இல்லை என்று மறுப்பவர்கள் நிருபிக்கட்டும் பின்னர் ஏற்றுக்கொள்வோம். ஆகவே நண்பர்களே நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக்கொள்வோம் நாம் தான் சோழர்கள் , நாமேதான் முத்தரையர்கள் இதில் யாரும் பங்கு கொள்ள சம்மதியோம்.

இது இவ்வாறு இருக்க நம்மினத்தின் மெத்த படித்த சிலர் சாதியின் பெயரைக் கூற வெட்கபடுகிறோம் என்கிறார்கள் வெட்கப்படும் உறவுகளே நீங்கள் அறியாமல் பிறந்த இந்த சாதி நீங்கள் நினைப்பது போல தாழ்ந்த சாதியல்ல இவ்வாறு நீங்கள் நினைக்க காரணம் நம் முன்னோர்களை பிறர் நடத்திடும் விதம், மற்றும் நம் இனத்தின் வரலாற்றினை அறியாமையினால்தான் நண்பர்களே நாம் பிறந்த இந்த சமுகம் நாடாண்ட சமுகம் என்பதினால் பெருமையுடன் கூரிகொல்லுங்கள் நான் "முத்தரையன்" என்று..........

சிலருக்கு வேறு தயக்கங்கள் ஆம், நாம் பழகிய பிற இனத்தவர் நம்மைக் குறித்து தவறாக நினைப்பார் என்று, தவறு நண்பர்களே...! நீங்கள் அறிந்தோ அறியாமலோ இசசமுகத்திற்காக அரசாங்கம் வழங்கிடும் சிறிய சலுகைகளில் கூட நீங்கள் உங்கள் பங்கை பெற தயங்குவதில்லை, தனது மகளோ, சகோதரியோ தனது இனத்தை தாண்டி திருமணம் செய்துக் கொள்வதில் விருப்பமில்லை ஆனால் சாதியின் பெயரை கூற மட்டும் வெட்கம்....! "ஆதிதிராவிடர்கள்" எப்போதுமே தனது இனத்தை வெளிக்காட்டிக் கொள்வதில் தயங்கியதே கிடையாது, அதே போல் பிராமணர்கள், முக்குலதோர்கள் தான் சார்ந்த சமுகத்தின் பெயரைக் கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள் ஆனால் நாம்.................. சிந்தியுங்கள்.

இதோ இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தொடக்கி ஒரு ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் மே 23 அன்று அடியெடுத்து வைக்கிறது, அன்றைய தினம் நாம் தரிசிக்க வேண்டிய தினம் ஆம் அன்றைய தினத்தில் தான் நம் இனத்தின் முன்னோடி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தினம், உறவினர்களே....... நம்மால் விழாவாக கொண்டாட முடியாவிட்டாலும் ஒரு சிறு முயற்சியாக இவ்வாண்டு நீங்கள் வாழ்கின்ற பகுதிகளில் உங்கள் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியாவது சந்தோசமாக கொண்டாடுவோம்.

எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நாம் நாடாண்ட வம்சத்தின் வாரிசுகள், நம்மிடையே பெருந்தன்மையும், விட்டுக்கொடுப்புகளும் இருக்கலாம் அதே நேரம் நம்மை பிறர் ஏமாற்ற ஒரு சந்தர்ப்பம் வழங்கிவிடாதிர்கள் "முத்தரையர்" என்று கூரிகொல்வதில் பெருமிதம் கொள்ளுங்கள்

" இது அடங்கி கிடக்கும் கூட்டமல்ல.....
நாட்டை ஆள வந்த சிங்கங்கள்.......!
நட்பென்றால் உயிர் கொடுப்போம்............
நடிப்பென்றால் உயிர்........?

"வாழ்க முத்தரையர் இனம்"

என்றும் அன்போடு...........

உங்களின் சஞ்சய்காந்தி

அம்பலம்கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அம்பலம் என்பதற்கு "அடக்கி ஆள்பவர்கள்" என்று பொருள் படும்[மேற்கோள் தேவை].முத்தரையர் சமூகத்தில் உள்ளடங்கியதில் இதுவும் ஒன்றாகும்.பண்டைக்காலத்தில் பல மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களை அம்பலம் என்று குறிப்பிட்டார்கள்[மேற்கோள் தேவை].அது சற்று மறுவி அம்பலக்காரன் அல்லது அம்பலகாரர்கள் என்று பெயர் மாற்றம் பெற்றது.பொன் அம்பலம் என்று பெயர் வைப்பதும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

2009 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை .........

எனது அன்பிற்குரிய உறவுகளே ! நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... ! இம்முறை ஒரு புதிய செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் ஆம்... இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து உங்களோடு சில விஷயங்கள் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன் .. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியை தண்டி சென்று கொண்டு இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த கதையே.. ! இம்முறையும் கணக்கெடுப்பில் சாதிவாரியாக கனகெடுக்கப்பட மாட்டது என்று அறிவித்துள்ளர்கள் , காரணம் மக்கள் சாதியை குறித்து தவறான தகவல்களை தெரிவித்துவிடுவார்களம் என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து அவ்வாறினில் இப்பொழுது நீங்கள் வழங்கும் இட ஓதிக்கிட்டிற்கு மட்டும் எப்படி சரியான தகவல் உங்களுக்கு கிடைக்கிறது. இந்திய மக்களை இன்னும் எதனை ஆண்டுகளுக்கு முட்டாள்களாக வைக்க போகிறிர்கள்? நீங்கள் வழங்கும் சாதி சான்றிதள்களை கனகடுத்தாலும் உங்களுக்கு சரியான தகவல் கிடைக்குமே........ ஏன் செய்ய மாட்டேன் என்கிறிர்கள் இதில் இருந்தே தெரியவில்லையா நீங்கள் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறிர்கள் என்று இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களால் இந்த நாடகத்தை நடத்திக்கொண்டு செல்ல முடியும்....? மிக விரைவில் உங்களுக்களின் நாடகம் முடியத்தான் போகிறது காத்திருங்கள்.

உறவுகளே........ உரிமையை வெல்ல ஓன்று கூடுவோம்.......... வெற்றிக்கான்போம்..

மீண்டும் வரும்வரை விடை பெறுவது.......

என்றும் உங்கள்

சஞ்சய்காந்தி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

விஜயநகர அரசர்கள் காலத்து முத்தரையச சோழர்கள் மரபுப்பட்டியல்
வீரசொலசம்ப மகராஜா (கி.பி.1314-1340)
கரிகால் சோழ மகாராஜர் (கி.பி.1340-1370)
கரிகால் சோழவிக்கிரம பாண்டியன் (கி.பி.1370-1400)
வாலக சோழ மகராஜா (கி.பி.1400-1445)
அக்கலரைய வழக்கமாய சோழமகராஜ (கி.பி.1445-1481)
திப்பைய தேவசோழ மகாராஜா (கி.பி.1457-1501)
பொக்கைய சோழ மகாராஜா (கி.பி.1471-1540)
ராமைய சோழ மகாராஜா (கி.பி.1507-1555)
பெரமைய சோழகானர் (கி.பி.1555-1585)
விட்டலேஸ்வர சோழகனர் (கி.பி.1583-1615)
சென்னை சோழ மகாராஜா (கி.பி.1468-1500)
சென்னைபாலயசோழ மகாராஜா (கி.பி.1500-1538)
ரசிங்கதேவ சோழனார் (கி.பி.1538-1573) திருச்சி பகுதி-குளித்தலை,
முசிறி,திருவானைகோவில்)
வீர சேகர சோழ மகாராஜா (கி.பி.1538-1554)
ஜெயங்கொண்டம் பகுதி முத்தரைச சோழர்கள்
வன்னியர் உறவுடன் கலந்தது.
தொல்லியல் ஆய்வாளர்
சி.சுந்தரராஜன் சேர்வை.

Araiyar
Ambalakarar
Ambalakaran
Bharatava Valaiyar (Paratava Valayar)
Irular
Kavalgar
Kannappa Kula (Valmiki)
Muthuraja
Muthuraja Naidu
Muthiriya
Muthiriya Naidu (Gavara)
Muthiriya Naicker
Muthiriya Moopar
Moopar
Moopanar
Muthiriya Urali Gounder
Muthiriya Rao
Pillai
Palayakara
Palayakkaran
Palayakkarar
Palayakara Naiker
Poosari
Servai
Servaikkaran
Talaiyari
Valaiyar
Valayar
Vazhuvadiyar
Vedan
Vetan
Vetar (Vedar / Bedar)
Vanniyarkula Muthuraj

செவ்வாய், 11 மே, 2010

தஞ்சையில் இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி முகாம்

தஞ்சாவூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சையில் வரும் 17ம்தேதி தொடங்க உள்ளதாக அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 17ம்தேதி தொடங்குகிறது. ஏ.சி., ரெப்ரிஜிரேட்டர் பழுதுபார்க்கும் பயிற்சி இலவசமாக நடத்தப்படுகிறது. தொடர்ந்து 30 நாட்களுக்கு நடக்கும் பயிற்சிக்கு பஸ் கட்டணம், உணவு, பயிற்சி பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும்.

காலை 10 மணி முதல் மாலை 5 வரை பயிற்சி நடக்கும். பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.பயிற்சியில் கலந்து கொள்ள 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அவசியம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், பக்கிரிசாமி பிள்ளை வீதி, ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி ரோடு, தஞ்சை என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். அல்லது 242377 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது அன்பிற்குரிய உறவுகளே ! நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... ! இம்முறை ஒரு புதிய செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் ஆம்... இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து உங்களோடு சில விஷயங்கள் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன் .. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியை தண்டி சென்று கொண்டு இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த கதையே.. ! இம்முறையும் கணக்கெடுப்பில் சாதிவாரியாக கனகெடுக்கப்பட மாட்டது என்று அறிவித்துள்ளர்கள் , காரணம் மக்கள் சாதியை குறித்து தவறான தகவல்களை தெரிவித்துவிடுவார்களம் என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து அவ்வாறினில் இப்பொழுது நீங்கள் வழங்கும் இட ஓதிக்கிட்டிற்கு மட்டும் எப்படி சரியான தகவல் உங்களுக்கு கிடைக்கிறது. இந்திய மக்களை இன்னும் எதனை ஆண்டுகளுக்கு முட்டாள்களாக வைக்க போகிறிர்கள்? நீங்கள் வழங்கும் சாதி சான்றிதள்களை கனகடுத்தாலும் உங்களுக்கு சரியான தகவல் கிடைக்குமே........ ஏன் செய்ய மாட்டேன் என்கிறிர்கள் இதில் இருந்தே தெரியவில்லையா நீங்கள் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறிர்கள் என்று இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களால் இந்த நாடகத்தை நடத்திக்கொண்டு செல்ல முடியும்....? மிக விரைவில் உங்களுக்களின் நாடகம் முடியத்தான் போகிறது காத்திருங்கள்.

உறவுகளே........ உரிமையை வெல்ல ஓன்று கூடுவோம்.......... வெற்றிக்கான்போம்..

மீண்டும் வரும்வரை விடை பெறுவது.......

என்றும் உங்கள்

சஞ்சய்காந்தி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

ILLAM SINGAM (YOUNG LION) MUTHARAIYAR
Welcome