இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிகமான முத்தரையர்கள் கலந்து கொண்டாலும் இவர்கள் இருவரும் அதிக பிரபலம் அடைந்தவர்கள் ஒருவர் ஆ.முத்தையா ,தளுகை பாதர்பேட்டை . மற்றுமொருவர் அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.
இதில் காலத்தால் முந்தியவர் திரு ஆ.முத்தையா .
தந்தை :ஆணை முத்துராஜா
தாய் :பெரியம்மாள்
1914 ஆம் ஆண்டு 15 வயதில் தந்தையை இழந்தார் .உடன் தனது தாயாருடன் இலங்கை சென்றார் .அங்கே காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். தனது 25 வயதில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரமாக பங்கு பெற்றார்.1942 செப்டம்பரில் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார் மீண்டும் 1943 கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
தேச தலைவரான காமராஜர்,கக்கன் ஆகியோர் தொடர்பு ஏற்பட்டது .1948 இல் திருச்சி வந்து காங்கிரசில் போட்டியிட்டு வென்றார் .1954 இல் திருச்சி மாவட்ட காங்கிரசில் செயலாளர் ஆனார் .
வகித்த பதவிகள்
1959 இல் திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினர்
1957 -1962 வரை உப்பிலியபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
1962 -1968 வரை திருச்சி நகர சிட்டி கிளப் தலைவர் .
1963 இல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உறுப்பினராகத் தேர்வு பெற்று பணியாற்றினார்.
Thanks to : Palanivel Sankilithevan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக