Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

சனி, 22 மே, 2010

22.05.2010

இன்று மங்களூர்ரில் இடம் பெற்ற விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களையும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறோம்..... !


இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்






21.05.2010
பட்டுக்கோட்டை

அன்பான என் இன சகோதரர்களே, உங்களை வணங்குகிறேன்... நாளது நாள் 23.05.2010 ல் நமது இனத்தில் வரலாற்றில் இடம் பெற்ற மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ம் ஆண்டு பிறந்த தின விழா.......... இந்நாளில் நாம் பெருமைப்பட தக்க ரீதியில் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் "சாதியையும் கணக்கில் எடுக்கப்படும்" என்ற அறிவிப்பு உள்ளது. இதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் , நமது இனத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள், இந்நாள் அமைச்சர் பெருமக்களுக்கும், எமது சமுதாய சங்கங்களின் தலைவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோளினை வைக்கிறோம், தயவுசெய்து உங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை கலைந்தோ, அல்லது உங்களின் தனிப்பட்ட செல்வாக்கினைப் பயன்படுத்தியோ தமிழக முதல்வரை சந்தித்து கணக்கெடுப்புக்கு முன்பாக 29 பட்ட பெயர்களுடன் தமிழகம் முழுவதும் பறந்து வாழும் முத்தரையர் சமுதாயத்தினர் தங்களின் பட்ட பெயர்களுக்கு முன்பாகவோ, பின்பாகவோ முத்தரையர் என்ற சொற்பதம் சேர்த்துக்கொள்ள அரசாணை வெளியிட வலியுறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், இது நமக்கு கிடைத்துள்ள மிக அற்புதமான சந்தர்ப்பம் இதனை நழுவ விட தயவு செய்து நீங்கள் காரணமாகி விடாதிர்கள், பல ஆண்டுகளாக நாம் கோரிக்கை விடுத்தது, கோரிக்கை விடுத்தது இப்பொழுதுதான் நமக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு எடுத்துள்ளது. இப்பொன்னான வாய்ப்பினை நமக்கு சாதகமாக பயன்படுத்திட இனத்தின் பிரபலமானவர்கள், முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைக்க எமது இயக்கம் தன்னாலான பணியினை ஆற்றிடும் என்பதனை தெரியப் படுத்துகிறோம்.
மேலும் சகோதரர்களே, இனத்தின் வரலாற்றின் நாயகர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவன்று திருச்சி மாநகரின் மத்தியில் முன்னாள் தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொது செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா வினால் திறந்துவைக்கப்பட்ட மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழித்திட பல்வேறு அரசியல் இயக்கங்களும், முத்தரையர் சங்கங்களும் தயாராகி வருகின்றன, அதே போல் முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாநாட்டுப் பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது, அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம், மேலும் எமது இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவுக்கும், கொடியேற்று விழாவுக்கும், மேலும் மாமன்னர் படத்திற்கு மரியாதையை செலுத்தும் விழாவிற்கும் பட்டுக்கோட்டைக்கு அருகில் பழஞ்சூர் ரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறிவிப்பதோடு அனைவரையும் விழாவில் பங்கெடுக்கவும் அன்போடு அழைக்கிறோம்.

அன்புடன்....
R.தேவா (எ) சுரேஷ் B.Sc.,
தலைவர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9791-4865-81

நண்பர்களே மே மாதம் 23 ம் நாள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 வது பிறந்த தினம் இந்நாளினை முத்தரைய மக்கள் சிறப்பாக கொண்டாட அன்புடன் அழைக்கிறேன்

அன்போடு
காந்தி
செயலாளர்,
இளம் சிங்கங்களின் எழுட்சி இயக்கம்







அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம், மிக நீண்ட நாளாக பகிர்ந்துக் கொள்ள நினைத்த ஒரு விஷயம்..........ஆம் நம்மவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நான் இந்த சாதியை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை... காரணம் நாம் கீழ் சாதியாயிர்ற்றே என்ற தாழ்வு மனப்பான்மை........... முட்டாள் தனமான இந்த கருத்தை பெரும்பாலும் படித்தவர்களே கொண்டிருக்கிறார்கள். முத்தரையர் சமுகம் வெறுமனே பத்தோடு பதினோன்றானதல்ல இச்சமுகம் நாடாண்ட சமுகம் என்பதனை வேண்டா வெறுப்பாகவே தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தஞ்சாவூர் மாவட்டத்திற்கான இணைய தளத்தில் www.thanjavur.tn.nic.in/ சோழர் என்ற தலைப்பில் எழுதப்பட்ட வரலாற்றினை வாசிப்பவர்கள் அறிந்துக்கொள்ள முடியும்

சோழர்களை முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள் என்று வரலாற்றினை பிரிப்பதும் 7-ம் நுற்றாண்டு முதல் 9-ம் நுற்றாண்டு வரை வரலாற்றின் இருண்ட காலம் என்பதும் நம்முடைய வரலாற்றினை சிதைக்கும் முயற்சியே அன்றி வேறில்லை முகலாயர்கள் இசுலாமியர்களே, பாளையக்காரர்கள் பாளையக்கரர்களே அதே போல சோழர்கள் முத்தரையர்களே........... இதை இல்லை என்று மறுப்பவர்கள் நிருபிக்கட்டும் பின்னர் ஏற்றுக்கொள்வோம். ஆகவே நண்பர்களே நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக்கொள்வோம் நாம் தான் சோழர்கள் , நாமேதான் முத்தரையர்கள் இதில் யாரும் பங்கு கொள்ள சம்மதியோம்.

இது இவ்வாறு இருக்க நம்மினத்தின் மெத்த படித்த சிலர் சாதியின் பெயரைக் கூற வெட்கபடுகிறோம் என்கிறார்கள் வெட்கப்படும் உறவுகளே நீங்கள் அறியாமல் பிறந்த இந்த சாதி நீங்கள் நினைப்பது போல தாழ்ந்த சாதியல்ல இவ்வாறு நீங்கள் நினைக்க காரணம் நம் முன்னோர்களை பிறர் நடத்திடும் விதம், மற்றும் நம் இனத்தின் வரலாற்றினை அறியாமையினால்தான் நண்பர்களே நாம் பிறந்த இந்த சமுகம் நாடாண்ட சமுகம் என்பதினால் பெருமையுடன் கூரிகொல்லுங்கள் நான் "முத்தரையன்" என்று..........

சிலருக்கு வேறு தயக்கங்கள் ஆம், நாம் பழகிய பிற இனத்தவர் நம்மைக் குறித்து தவறாக நினைப்பார் என்று, தவறு நண்பர்களே...! நீங்கள் அறிந்தோ அறியாமலோ இசசமுகத்திற்காக அரசாங்கம் வழங்கிடும் சிறிய சலுகைகளில் கூட நீங்கள் உங்கள் பங்கை பெற தயங்குவதில்லை, தனது மகளோ, சகோதரியோ தனது இனத்தை தாண்டி திருமணம் செய்துக் கொள்வதில் விருப்பமில்லை ஆனால் சாதியின் பெயரை கூற மட்டும் வெட்கம்....! "ஆதிதிராவிடர்கள்" எப்போதுமே தனது இனத்தை வெளிக்காட்டிக் கொள்வதில் தயங்கியதே கிடையாது, அதே போல் பிராமணர்கள், முக்குலதோர்கள் தான் சார்ந்த சமுகத்தின் பெயரைக் கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள் ஆனால் நாம்.................. சிந்தியுங்கள்.

இதோ இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தொடக்கி ஒரு ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் மே 23 அன்று அடியெடுத்து வைக்கிறது, அன்றைய தினம் நாம் தரிசிக்க வேண்டிய தினம் ஆம் அன்றைய தினத்தில் தான் நம் இனத்தின் முன்னோடி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தினம், உறவினர்களே....... நம்மால் விழாவாக கொண்டாட முடியாவிட்டாலும் ஒரு சிறு முயற்சியாக இவ்வாண்டு நீங்கள் வாழ்கின்ற பகுதிகளில் உங்கள் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியாவது சந்தோசமாக கொண்டாடுவோம்.

எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நாம் நாடாண்ட வம்சத்தின் வாரிசுகள், நம்மிடையே பெருந்தன்மையும், விட்டுக்கொடுப்புகளும் இருக்கலாம் அதே நேரம் நம்மை பிறர் ஏமாற்ற ஒரு சந்தர்ப்பம் வழங்கிவிடாதிர்கள் "முத்தரையர்" என்று கூரிகொல்வதில் பெருமிதம் கொள்ளுங்கள்

" இது அடங்கி கிடக்கும் கூட்டமல்ல.....
நாட்டை ஆள வந்த சிங்கங்கள்.......!
நட்பென்றால் உயிர் கொடுப்போம்............
நடிப்பென்றால் உயிர்........?


"வாழ்க முத்தரையர் இனம்"

என்றும் அன்போடு...........

உங்களின் சஞ்சய்காந்தி



அம்பலம்கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அம்பலம் என்பதற்கு "அடக்கி ஆள்பவர்கள்" என்று பொருள் படும்[மேற்கோள் தேவை].முத்தரையர் சமூகத்தில் உள்ளடங்கியதில் இதுவும் ஒன்றாகும்.பண்டைக்காலத்தில் பல மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களை அம்பலம் என்று குறிப்பிட்டார்கள்[மேற்கோள் தேவை].அது சற்று மறுவி அம்பலக்காரன் அல்லது அம்பலகாரர்கள் என்று பெயர் மாற்றம் பெற்றது.பொன் அம்பலம் என்று பெயர் வைப்பதும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.


2009 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை .........










எனது அன்பிற்குரிய உறவுகளே ! நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... ! இம்முறை ஒரு புதிய செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் ஆம்... இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து உங்களோடு சில விஷயங்கள் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன் .. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியை தண்டி சென்று கொண்டு இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த கதையே.. ! இம்முறையும் கணக்கெடுப்பில் சாதிவாரியாக கனகெடுக்கப்பட மாட்டது என்று அறிவித்துள்ளர்கள் , காரணம் மக்கள் சாதியை குறித்து தவறான தகவல்களை தெரிவித்துவிடுவார்களம் என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து அவ்வாறினில் இப்பொழுது நீங்கள் வழங்கும் இட ஓதிக்கிட்டிற்கு மட்டும் எப்படி சரியான தகவல் உங்களுக்கு கிடைக்கிறது. இந்திய மக்களை இன்னும் எதனை ஆண்டுகளுக்கு முட்டாள்களாக வைக்க போகிறிர்கள்? நீங்கள் வழங்கும் சாதி சான்றிதள்களை கனகடுத்தாலும் உங்களுக்கு சரியான தகவல் கிடைக்குமே........ ஏன் செய்ய மாட்டேன் என்கிறிர்கள் இதில் இருந்தே தெரியவில்லையா நீங்கள் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறிர்கள் என்று இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களால் இந்த நாடகத்தை நடத்திக்கொண்டு செல்ல முடியும்....? மிக விரைவில் உங்களுக்களின் நாடகம் முடியத்தான் போகிறது காத்திருங்கள்.

உறவுகளே........ உரிமையை வெல்ல ஓன்று கூடுவோம்.......... வெற்றிக்கான்போம்..

மீண்டும் வரும்வரை விடை பெறுவது.......

என்றும் உங்கள்

சஞ்சய்காந்தி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்






விஜயநகர அரசர்கள் காலத்து முத்தரையச சோழர்கள் மரபுப்பட்டியல்
வீரசொலசம்ப மகராஜா (கி.பி.1314-1340)
கரிகால் சோழ மகாராஜர் (கி.பி.1340-1370)
கரிகால் சோழவிக்கிரம பாண்டியன் (கி.பி.1370-1400)
வாலக சோழ மகராஜா (கி.பி.1400-1445)
அக்கலரைய வழக்கமாய சோழமகராஜ (கி.பி.1445-1481)
திப்பைய தேவசோழ மகாராஜா (கி.பி.1457-1501)
பொக்கைய சோழ மகாராஜா (கி.பி.1471-1540)
ராமைய சோழ மகாராஜா (கி.பி.1507-1555)
பெரமைய சோழகானர் (கி.பி.1555-1585)
விட்டலேஸ்வர சோழகனர் (கி.பி.1583-1615)
சென்னை சோழ மகாராஜா (கி.பி.1468-1500)
சென்னைபாலயசோழ மகாராஜா (கி.பி.1500-1538)
ரசிங்கதேவ சோழனார் (கி.பி.1538-1573) திருச்சி பகுதி-குளித்தலை,
முசிறி,திருவானைகோவில்)
வீர சேகர சோழ மகாராஜா (கி.பி.1538-1554)
ஜெயங்கொண்டம் பகுதி முத்தரைச சோழர்கள்
வன்னியர் உறவுடன் கலந்தது.
தொல்லியல் ஆய்வாளர்
சி.சுந்தரராஜன் சேர்வை.





Araiyar
Ambalakarar
Ambalakaran
Bharatava Valaiyar (Paratava Valayar)
Irular
Kavalgar
Kannappa Kula (Valmiki)
Muthuraja
Muthuraja Naidu
Muthiriya
Muthiriya Naidu (Gavara)
Muthiriya Naicker
Muthiriya Moopar
Moopar
Moopanar
Muthiriya Urali Gounder
Muthiriya Rao
Pillai
Palayakara
Palayakkaran
Palayakkarar
Palayakara Naiker
Poosari
Servai
Servaikkaran
Talaiyari
Valaiyar
Valayar
Vazhuvadiyar
Vedan
Vetan
Vetar (Vedar / Bedar)
Vanniyarkula Muthuraj

கருத்துகள் இல்லை: