Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் ஆதிசங்கரர் இருந்தது எப்படி எக்காலத்தில் உணர்ந்திருக்கக்

கடந்த மார்ச் மாதம், 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும்
தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய
கருத்தரங்கம் நடந்தது. அதில் வாசிக்கப் பட்ட ஆய்வுகட்டுரைகள், ஒரு
புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது.

அதில், கீழ்காணும் கட்டுரை, "பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?" என்ற
கட்டுரைக்கு சம்பந்தம் உள்ளது என்பதால், அதை இங்கு படிவு செய்கிறேன்.


1. அட்டவணைகள் சரியாக பதிவாகவில்லை. வார்த்தைகள் சிதறியுள்ளன.


2. அடிக்குறிப்புகள் பதிவாகவில்லை.


3. பாடல்களும் தெரியவில்லை.


4. நமது குழுவில், "எடிட்டிங்" வசதி உள்ளதா, என்று தெரியவில்லை.
---------------------------------------------------------------------------­-------------------------------------------------------------------


தமிழகத்தில் ஆதிசங்கரர் இருந்தது எப்படி எக்காலத்தில் உணர்ந்திருக்கக்
கூடும்?


கே. வி. ராமகிருஷ்ண ராவ்


முன்னுரை: ஆதிசங்கருடைய காலம் பண்டிதர்களாலும் சரித்திர ஆசிரியர்களாலும்
நடப்பு சகாப்தத்திற்கு முன்பு 6ம் நூற்றாண்டில் (6th cent.BCE) மற்றும்
நடப்பு சகாப்ததின் 9வது நூற்றாண்டில் (9th cent.CE) இருந்திருந்ததாக பல
ஆதாரங்களின் மீதான எடுத்துக் காட்டப்பட்ட கருத்துகள் இன்றளவிலும்
வந்துள்ளன. இடைத்தவிர மிகவும் மாறுபட்ட தேதிகளை 32nd cent.BCE மற்றும்
14th cent.CE எனவும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இருப்பினும்
ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய காலக் கணக்கிடுகளை சுருக்கமாக, இலக்கிய,
சமகால, வானியல், கல்வெட்டுகள் மற்ற ஆதாரங்களின் மீதுள்ள இரு தேதிகளில்
அடக்கலாம், அவை முறையே 509-477 BCE மற்றும் 788-820 CE என்பனவாகும்,


ஆதிசங்கரரால் ஏற்படுத்தப் பட்ட மடங்கள் என்று சொல்லப்படுபவை 509-477 BCE
காலத்தைதான் பின்பற்றுகின்றன . ஆதிசங்கரர் பிறந்தது, வளர்ந்தது,
படித்தது, சிறு வயதிலேயே சந்நியாசியாகியது, பல பண்டிதர்களுடன் வாதிட்டு
வென்றது, பல நம்பிக்கை முறைகளை அறுசமயங்களில் அடக்கியது முதலிய மற்ற
அவரது வாழ்க்கைக் குறிப்புகளைக் கவனிக்கும்போது, அவையெல்லாம்
பழந்தமிழகத்தில் அல்லது தென்னிந்தியாவில் நிகழ்ந்திருக்கவேண்டும்.
ஆகையால் அவரது சமகால நண்பர்கள், பண்டிதர்கள் மற்றவர்கள், அவர் இருந்ததை,
அவரது பிரபலமான அத்வைத தத்துவத்தின் தாக்கத்தை உணர்ந்திருக்காமல்
இருக்கமுடியாது. அந்நிலையில் கீழ்காணும் விவரங்களை கருத்தில்
கொள்ளவேண்டியுள்ளன:


1. ஆதிசங்கரர் தமிழகத்தில் பிறந்திருந்ததனால், அத்தகைய பல இடங்களுக்குச்
சென்று வந்த, மிகவும் செயல்பாடுள்ள, அவரை சமகாலத்து ஆட்சியாளர்கள்,
தத்துவ அறிஞர்கள், துறவியர், புலவர்கள், மற்றவர் மொத்தமாக தமது
எழுத்துகளில் குறிப்பிட மறந்திருக்க முடியாது.
2. அதுவும் பற்பல இந்திய நம்பிக்கையாளர்களை அறுவகை சமய பிரிவுகளில்
கொண்டு வந்த பெருமையை அவருக்கு அளித்துள்ளனர் . அவையாவன:
எண் முக்கிய வழிபடும் தெய்வம் நம்பிக்கை மற்றும் வழிபடும் தெய்வங்கள்,
தேவதைகள் முதலியன
1 காணபத்யம் கணபதி, வினாயகர் முதலியன
2 கௌமாரம் குமரன், முருகன் முதலியன
3 வைணவம் விஷ்ணு, திருமால் முதலியன
4 சௌரம் சூரியன், அக்னி முதலியன
5 சாக்தம் சக்தி, கொற்றவை, இலக்குமி முதலியன
6 சைவம் சிவன், பசுபதி, ருத்ரன் முதலியன
இத்தகைய ஒன்றுசேர்த்த செயல்பாடு பரந்த பாரத தேசத்தில் நடந்திருந்ததால்
மேற்குறிப்பிடப் பட்ட இரு காலத்தைய இலக்கிய, அகழ்வாய்வு
ஆதாரங்களினின்றுத் தப்பித்து இருக்க முடியாது.
3. அத்தகைய ஒன்றுபடுத்திய முயற்ச்சிகளில், அவர் பற்பல சாகைகள், அவற்றின்
தலைவர்கள், மாறுபட்ட பிரிவினர், முதலியோரை எதிர்கொண்டிருக்கவேண்டும்,
அவர்களும் தமது நூற்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
4. இவற்றையயல்லாம் விட, புத்தமதம் இந்தியாவிலிருந்து துரத்திவிட அல்லது
மறந்துவிட இவர்தாம் காரணம் என்று குற்றஞ்சாட்டப் படுகிறார் .
அவ்வாறாகயிருப்பின் பௌத்தர்கள் அத்தகைய தமது எதிரியை விட்டு வைத்திருக்க
மாட்டார்கள். மேற்குறிப்பிடப் பட்ட இருகாலகட்டங்களிலும் புத்தமத
இலக்கியங்களில் நிச்ச்சயமாக குறிப்பிடப்பட்டிருப்பார்.


ஆகவே பழந்தமிழ் இலக்கியங்களில் அவரைப் பற்றிய அல்லது அவரது அத்வைத
தத்துவத்தின் தாக்கம் முதலியவற்றைப் பற்றி ஏதாவது நேரிடை அல்லது மறைமுக
குறிப்புகள் உள்ளனவா என்று மேற்கண்ட விவரங்கள் மனத்திற்கொண்டு
ஆராயப்படுகின்றது


சங்க-இலக்கியத்தில் “சங்கர” என்ற வார்த்தை உள்ளதா? “சங்கர” என்ற
சொற்பிரயோகம் சங்க-இலக்கியத்தில் இல்லை. சங்கருடணன் = “சங்கர்ஷண”,
என்பதனை தமிழ்படுத்தி “கருங்கண் வெள்ளை” என பரிபாடலில்
குறிப்பிடபட்டுள்ளது. வாசுதேவன்-சங்கருடணன்-பிரத்தியும்னன்-அநிருத்தன்
என்ற நால்வரும் -


செங்கட் காரி கருங்கண் வெள்ளை
பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (பரிபாடல். 3.80-81)


என்று பரிபாடலில் குறிப்பிடப்படுகின்றனர். இங்கு சங்கருடணன் என்றால்
எல்லாவற்றையும் தன்னுள் ஈர்ப்பவன், இழுப்பவன், சேர்ப்பவன் என்ற பொருள்
வரும். சமஸ்கிருதத்தில் சங்கர, ஸங்கர, ஷங்கர முதலிய வார்த்தைகளுக்கு
கீழ்கண்டவாறு பொருள் உள்ளது :


• சம்கர = மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, இன்பத்தை
உண்டாக்குடகின்றவன்
• சங்கர / ஷங்கர = சிவனைக் குறிக்கும் பொதுப்பெயர்; பிரபலமான குரு,
மதத்தலைவர், அதாவது ஆதிசங்கரர்.
• ஸங்கர = 1. கலவை, எல்லாம் சேர்ந்தது, குழுமம்.
2. எல்லாவற்றையும் சேர்ப்பது, இணைப்பது.
3. குழப்பம், பலசாதிகள் கலப்பு, கலப்பு-விவாகங்களினால்
ஏற்படும் பற்பல கலப்பு-சாதிகள்.
4. இரண்டு வார்த்தைகள் சேர்ந்தது, “சம்ஸ்ருஸ்டி” என்பதற்கு
எதிரானது.
5. பொடி, தூள்


“சங்கவருணர்” என்ற நாகரியர், புலவராக இருக்கலாம் என சில தமிழ்
உரையாசிரியர்கள், ‘தந்துமாறன்’ (புறம்.360) என்ற புறநானூற்றுப் புலவனைக்
குறிப்பதாக கூறுகின்றனர். வையாபுரிப் பிள்ளை இவரை மரபாற் பெயர் பெற்ற
புலவர் வரிசையில் சேர்த்துள்ளார். அவ்வை துரைசாமி “சங்கவர்ணன்” என்பதனை
வளைவணன் என்னும் தமிழ் பெயரின் வடமொழி ஆக்கம் எனக்கொண்டு, வளைவணன் என்று
மணிமேகலையில் வருகின்ற நாகநாட்டரசன் என்ற பெயருடன் ஒப்பிட்டு, இவர்
பெயரும் ‘நாகரியர்’ என்றுள்ளமையால், அவனோடும் அந்நாட்டோடும்
தொடர்புபடுத்துவார். ஆனால், முக்கியமாக ‘தந்துமாறன்’ ஒரு ‘சங்கவருண’
அதாவது கலப்பு-சாதியை சேர்ந்தவன் என்பதனை நேரிடையாகக் குறிப்பிட
தயங்கியது தெரிகின்றது. எனவே சங்கருடணன், சங்கவருணன் முதலியவை “சங்கம்”
குழுமம், சேர்ப்பு என்ற பொருளில் உள்ளதை காணலாம்.


எனவே, சங்ககாலத்தில் அவ்வாறு “சங்கர, ஷ்ங்கர, ஷங்கர்ஸண” என்ற
வார்த்தைகளை அறிந்திருக்கலாம், ஆனால் மறைமுகமாகத்தான் குறித்துள்ளனர்.
நிகண்டுகள் நேரிடையாக சமஸ்கிருத பொருட்களை-அர்த்தங்களைக் கொடுத்துள்ளன.


“ஆதி” என்ற வார்த்தையின் உபயோகம்: சங்க-இலக்கியத்திலிருந்து முதல்
நூற்றாண்டுகளில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்கள் வரை காணப்படும் “ஆதி”
என்ற சொல், மிகவும் முக்கியத்துவமாகத் தோன்றுகிறது. திருவள்ளுவரின்
“ஆதிபகவன்” என்ற சொற்றொடரும் சிறப்பானதாகும். சங்க-இலக்கியத்தில் “ஆதி”
என்ற சொல், கீழ்கண்டவாறு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது:


1. ஆதி = பழமை (கலித்தொகை.96:36-37)
2. ஆதிமந்தி = ஆட்டன் அத்தி என்பவனது மனைவி, கரிகாலனின் மகள் (அகம்.45,
56, 236, 376, 306)
3. ஆதிமந்தியார் = குறுந்தொகை 31ம் பாடல் பாடிய புலவர்.
4. ஆதிபிரும்மம் = முதல் பிரும்மன் (பரிபாடல்.3.63)
5. ஆதிஅந்தணன் = நான்முகன், முதல் பிரும்மன் (பரிபாடல்.5.22-25)
6. ஆதிரை = நட்சத்திரங்களில் முதன்மையானது (பரிபாடல்.11.7)
7. ஆதிரையான் = ஆதிரை நாளுக்கு உரியவன், சிவன் (கலி.150:10)
8. ஆதிரை முதல்வன் = சிவன் (பரிபாடல்.8.6-7)
9. ஆதி வராஹம் / கேழல் = முதல் பன்றி மூழ்கிய உலகத்தை / வேதங்களை ஊழி
வெள்ளத்திலிருந்து வெளிகொணர்ந்தது (பரிபாடல்.8.6)


ஐம்பெருங்காப்பியங்களில் “ஆதி” என்ற சொல் மிகவும் பரவலாக ஜீனர்களையும்
புத்தர்களையும் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது.


1. ஆதிமுதல்வன் புத்தனைக் குறிக்கிறது மணிமேகலை.6:11, 10:61, 12:37,
12:108; 29:23
2. ஆதிபூதம் முதல் பூதம் , அதாவது முதன்மையான பூத வகையினர்
(சிலப்பதிகாரம்.22:36)
3. ஆதிமுனிவன் மணி.7:10
4. ஆதிசான்முனிவன் புத்தன் (மணி.7:19; 8:61)
5. ஆதிஜீனேந்திரன் புத்தரைக் குறிக்கிறது, அதாவது “ஆதி புத்தனை”க்
குறிக்கிறது (மணி.29:47)
6. ஆதிநாய்கன் கந்துக்கடன் = நாயகனுக்கு / கடவுளுக்கு செய்யப்படும் முதல்
கடமை (சீவகசிந்தாமணி.665)
7. ஆதிமுதுநாய்கன் முதல் முழு நாய்கன் (சீவ.1797)
8. ஆதியந்தமகன்ற நான்மைக்கொடி முதலும் முடிவும் இல்லாத அகலமான நான்கு
வகையான வெற்றிக்கொடிகள் (சீவ.3082)
9. ஆதிகாலத்து அந்தணமகன் முதல் அந்தணன் = பிரம்மன்.
பிரம்மனது மகன் = சுயாம்பு மனு (சீவ.366)
10. ஆதிக்கண் = ஆதிக்காலம், ரிஷபதேவர் தோன்றியதற்கு முன்பான காலம் (சீவ.
2713)
11. ஆதிவேதம் = ஜைனவேதம் (சீவ.1242)


“ஆதிவேதம்” என்பதை சைனர்கள் தமது மத-நூற்களுக்கு உபயோகப் படுத்துவது,
இங்கு “சீனேந்திரன்” என்ற சைனர்களின் வார்த்தையை பௌத்தர்கள் எடுத்தாள்வது
முதலியன எவ்வாறு முதலில் சைனர்கள் ஏற்கெனவே மக்ககளிடையே பிரபலமாக உள்ள
வேதமதச் சின்னங்களை உபயோகித்து, அவர்களைக் கவர எடுத்தாளுகின்றனர்
என்பதனைக் காணலாம். பிறகு வந்த, பௌத்தர்களும் அதே முறையைக் கையாண்டு
மற்றமத-நம்பிக்கைகளை எடுத்தாண்டு, தமக்குடையது போன்றத் தோற்றத்தை
ஏற்படுதியுள்ளனர் என்பதையும் காணலாம் . சீவகசிந்தாமணியின் நாயகன் எல்லா
வேதகால தேவதைகளயும் (பெண்-கடவுளர்கள்) வெற்றிக் கொண்டது போலச்
சித்தரிக்கப் படுகிறான் .


முன்பே குறிப்பிட்டபடி, திருக்குறளின் “ஆதிபகவன்”, அந்நூலாசிரியரின் தாய்-
தந்தயரைக் குறிக்கும் என பரவலான கருத்து உள்ளது. உரையாசிரியர்களின்
“ஆதிபகவன்” பற்றிய விவாதங்கள் மிகவும் பயனளிப்பதாக உள்ளது . இங்கு “ஆதி”
முதல் எனவும், “பகவன்” = பக + வன் = எல்லாவறையும் பெற்றுள்ள அல்லது
தன்னுள் அடக்கியுள்ள என்று பொருள்படும். ஆகவே “ஆதி” என்ற வார்த்தை தகுந்த
இடத்தில் அதன் பொருள் பெறுமாறு உபயோகித்ததை சங்காலத்திலிருந்தே காணலாம்.
ஆகவே, “சங்கர” என்பவரை அறிந்திருந்தால், அக்காலகட்டத்தில் அப்பெயர்
“சங்கர” என்றோ “ஆதிசங்கர” என்றோ உபயோகப் பட்டிருக்கும். ஆனால், அவ்விதமாக
காணப்படாதலால், அத்தகைய - “ஆதி” என்பதனை “சங்கர” என்பதுடன் சேர்த்து -
குறிப்பிடப்படும் வழக்கம், பிற்பாடு தோன்றிருக்கவேண்டும். ஒன்றிற்கும்
மேலான மடங்கள் நிறுவப்பட்டு, பல சங்கரர்கள் இருந்தபோது, முதல் சங்கரரை
எடுத்துக் காட்டும் முறையில் “ஆதி சங்கர” என்ற உபயோகம்
தோன்றிருக்கக்கூடும்.


“ஆதிசங்கரர்” தாக்கத்திலிருந்து வந்தவை தான் “ஆதிஜீனன்”, “ஆதிபுத்தன்”
முதலியன: நிச்சயமாக சங்கரருடைய பணியை அவரது சீடர்கள் தொடர்ந்து செய்து
வந்ததால், அவர்களது புகழ் பரவ ஆரம்பித்தது. இந்திய பாரம்பரியம் படி
பார்த்தால் ஒரு குருவின் வழியில், அவரது பெயரிலேயே நற்பணி தொடர்ந்து
வந்து கொண்டிருக்கும். எனவே, அவரை மற்றவரிடமிருந்து காட்ட “ஆதிசங்கரர்”
என்ற பதத்தை உபயோகித்து இருக்க வேண்டும். இதனாலேயே, பிறகு ஜைனர்களும்,
பௌத்தர்களும் இந்த “மஹாவீரர்” ஒரு தீர்த்தங்கர் தான், அவருக்கு முன்பு பல
தீர்த்தங்கர்கள் இருந்தனர் என்று தமது புராணங்களை எழுத ஆரம்பித்தனர் .
புத்தமததினரும் அத்தகைய “ஆதிபுத்தன்” என்ற கருத்தை தமது மதநூல்களில்
புகுத்திக் கொண்டனர் . எப்படி, விஷ்ணு அவதாரங்கள் எடுத்தாரோ, அதே மாதிரி
அச்சின்னங்களை உபயோகித்து அவர்களும் தங்களுடைய ஜீனர்களையும்,
புத்தர்களையும் ஏற்படுத்தினர் . இதில் வேடிக்கை என்னவென்றால், இந்துக்கள்
புத்தரையும் உரு அவதாரமாக்கி அதன் மூலம், புத்தமத்தத்தை கவர்ந்துவிட்டனர்
என்றெல்லாம், இக்கால சித்தாந்த-சரித்திர ஆசிரியர் மற்றவர் எழுதுவர்.
ஆனால், ஜைனர்கள் பத்தல்ல 24 அவதாரங்கள் உள்ளன என்று 24 தீர்த்தங்கர்களை
முன் வைத்தனர். பௌத்தர்களும் விடவில்லை, அவர்களும் 24 புத்தர்களை
முன்வைத்தனர் . அதுமட்டுமல்லாது, ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஆறு புத்தர்கள்”
தாம் என்றாலும், திடீரென்று 120 புத்தர்கள் உள்ளதாக தமது நூல்களில்
திருத்திக் குறிப்பிட்டனர் . இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஆறு புத்தர்கள்”
என்பதும், பிற்பாடு பிரபலமான ஆதிசங்கரருடைய “அறுமத” இணைப்பு தத்துவத்தை
எடுத்தாளும் முயற்ச்சி என்று நன்றாகத் தெறிகிறது.


சங்க இலக்கியத்தில் “அத்வைத / வேதாந்தக் கூறுகள்”: “பிரமம்” என்ற
வார்த்தை, சங்க-இலக்கியத்தில் காணப்படவில்லை என்றாலும், எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு நூற்களில் அத்தகைய சிந்தனைகள் உள்ளதைத் தெளிவாகக்
காணலாம்.


1. பிரம்மம் என்பது உண்மை.
2. இந்த உலகம் மாயை.
3. உடலிலுள்ள ஆத்மா பிரம்மமாகும், எனவே அது பிரம்மத்தை தவிர்த்து
வேறானதாகாது.


இத்தகைய கருத்துகள் சங்க-இலக்கியத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன.
நிலையற்ற வாழ்க்கை, பிறப்பு-இறப்பு சுழர்ச்சி, பிறந்தவன் இறப்பது
நிச்சயம், உடலிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பு, ஆத்மாவின் அழிவற்றத்
தன்மை எடுத்துக் காட்டும் . வாழ்க்கையென்பது நீர்குமிழி போன்றது, அது
எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம். மேலும் அது மழை பெய்யும்போது, நீரின்
மேலே மிதந்து செல்கிறது. அதாவது, அந்த குமிழி தானாக உடைவதைவிட, இன்னும்
துரிதமாக உடைய இயற்கையும் உள்ளது என்றெல்லாம், கீழ்காணும் பாடல் (புறம்.
192) எடுத்துக் காட்டுகிறது:


¡Ðõ °§Ã ; ¡ÅÕõ §¸Ç¢÷ ;
¾£Ðõ ¿ýÚõ À¢È÷¾Ã šá ;
§¿¡¾Öõ ¾½¢¾Öõ «Åü§È¡ ÃýÉ ;
º¡¾Öõ ÒÐÅÐ «ý§È ; Å¡ú¾ø
þÉ¢Ð±É Á¸¢úó¾ýÚõ þħÁ; ÓɢŢý,
þýÉ¡ ¦¾ýÈÖõ þħÁ; .Á¢ý¦É¡Î
Å¡Éõ ¾ñÐÇ¢ ¾¨Äþ, ¬É¡Ð
¸ø¦À¡ÕÐ þÃíÌõ ÁøÄü §À÷¡üÚ
¿£÷ÅÆ¢ô ÀÞ¯õ Ò¨½§À¡Ä, ¬Õ¢÷
Ó¨ÈÅÆ¢ô ÀÞ¯õ. ±ýÀÐ ¾¢È§Å¡÷
¸¡ðº¢Â¢ý ¦¾Ç¢ó¾Éõ ¬¸Ä¢ý, Á¡ðº¢Â¢ý
¦Àâ§Â¡¨Ã Å¢Âò¾Öõ þħÁ;
º¢È¢§Â¡¨Ã þ¸ú¾ø «¾É¢Ûõ þħÁ.


மறுபடி-மறுபடி பிறக்கும்-இறக்கும் “சுழர்ச்சி”, இறப்பது நிச்சயம்,
இருப்பினும் புகழொடு இறப்பது சிறந்தது என்பதெல்லாம் மாயாவாத
சிந்தனைகள்தாம்:


Á¡È¢ô À¢ÈôÀ¢ý þý¨ÁÔõ ÜÎõ;
Á¡È¢ô À¢ÈÅ¡÷ ¬Â¢Ûõ, þ¨ÁÂòÐì
§¸¡ÎÂ÷ó ¾ýÉ ¾õÁ¢¨º ¿ðÎò,
¾£¾¢ø ¡쨸¦Â¡Î Á¡ö¾ø ¾Åò ¾¨Ä§Â, (புறம்.214)


தண்டபாணி தேசிகர் திருக்குறளில் எவ்வாறு வேதாந்தக் கருத்துகள் உள்ளன என
எடுத்துக் காட்டியுள்ளார்.


ஆதிசங்கரர் நாயன்மார்களைக் குறிப்பிடுகின்றார? சங்கரது என்ற சொல்லப்படக்
கூடிய சுலாகங்களிலினின்று, சில குறிப்புகளை எடுத்து அவற்றிற்கு விளக்கம்
கொடுத்து, நாயன்மார்களைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதனால்,
அவர்களுக்குப் பிந்தான், அவர் இருந்திருக்கக்கூடும் என்ற வாதம் உள்ளது.
குறிப்பாக, சௌந்தர்யலஹரி என்ற சுலோகத்தில் காணப்படுல் “திராவிட
சிசு” (எண்.75) என்ற வார்த்தையினை எடுத்துக் கொண்டு, அவர்
திருஞானசம்பந்த்ரைத் தான் குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு குழுமமும்,
இல்லை, அவர் தம்மையே அவ்வாறு குறிப்பிட்டுக் கொண்டார் என இருவகை
கருத்துகள் நிலவி வருகின்றன. எனவே முன் கருத்தின் படி, ஆதிசங்கரர்,
திருஞானசம்பந்தருக்குப் பிறகு, அதாவது 8வது நூற்றாண்டில்
இருந்திருக்கக்கூடும் என வாதிடுகின்றனர்.


சௌந்தர்யலஹரி 63ம் சுலோகத்தில், “மார்க்கவர்த்தபாதுக பசுபதே: அங்காஸ்ய
குற்சயதே... ...” என்றுள்ளது. இது கண்ணப்ப நாயனாரைக் குறிப்பதாகும்.


சிவபுஜங்க ஸ்தோத்திரத்தில்,


“ந சங்க்ரேமி காந்த பர்துரோஹலேஸம் கதம் பிர்யசே த்வம் ந ஜனே கிரிஸா
தத ஹி ப்ரசன்னார்சி கன்யபி காந்தசுததுரோஹினோ வ பித்ருதுரோஹினோ வ||”


இதிலுள்ள குறிப்பிட்ட சொற்றொடர்களுக்கு கீழ்கண்டவாறு பொருள்
கொள்ளப்படுகிறது:


1. காந்த-துரோஹி = மனைவியின் எதிரி அல்லது மனைவிற்கு வேண்டாதவர்.
2. சுத-துரோஹி = மகனின் எதிரி அல்லது மகனுக்கு வேண்டாதவர்.
3. பித்ரு-துரோஹி = தந்தையின் எதிரி அல்லது தந்தைக்கு வேண்டாதவர்.


சிறுத்தொண்டர் தொகை மற்றும் பெரிய புராணத்தை அறிந்தவைகள், இவர்கள் யார்
என்று கீழ்கண்டவாறு அறிவர்:


உபயோகப்படுத்திய சொற்றொடர் தமிழ் இலக்கியத்தின் படி சமமாகக் கருதக்
கூடியவர் சுமாரான அவரது காலம்
காந்ததுரோகி சுந்தரமூர்த்தி நாயனார்
இயற்பகை நாயனார்
கழார்சிங்க நாயனார்
காலிகாம்ப நாயனார்
குங்கிலியகலய நாயனார் 7வது அ 9வது நூ.
12வது நூ.முன்பு
அவ்வாறே
அவ்வாறே
அவ்வாறே
சுததுரோகி சிறுத்தொண்ட நாயனார் 8வது நூ.
பித்ருதுரோகி சண்டேச நாயனார் 12வது நூ.முன்பு
கண்ணப்பர் நாயனார் 12வது நூ.முன்பு


சிவாநந்தலஹரி என்ற மற்றொரு சுலோகத்தில் சிவனைக் கல்லால் அடித்து
வழிபட்டதாகாக குறிப்பு உள்ளது. புராணங்களின்படி, அவ்வாறு, சிவனை
வழிபட்டவர் சாக்கிய நாயனார் அல்லது அர்ஜுனனாக இருக்கக்கூடும் அன
வாதிடுகின்றனர். அத்தகைய சுலோகங்களுடன் அல்லது அத்தகைய
கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டால், ஆதிசங்கரர் சாக்கிய நாயனார் (6ம் /
7ம் / 8ம் நூற்றாண்டிற்கு) அல்லது அர்ஜுனன் (3102 - 3050 BC) காலத்தில்
சங்கரர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. இது சங்கரரை 32ம்
நூற்றாண்டு BCEக்கு எடுத்துச் செல்கிறாது. இங்கு குறிப்பிட வேண்டியது
என்னவென்றால், நாயன்மார்களது காலங்களை யாரும் முடிவாகக் குறிப்பிடவில்லை.
மேலும் 63 நாயன்மார்களும் ஒரே காலத்தில் இருந்தார்களா, தனிதனியாக
சரித்திர காலகட்டங்களில் இருந்தார்களா இல்லயா என்று எழும் கேள்வியாகும்,
ஏனெனில், அத்தகைய குறிப்புகள் அதிசயங்கள், மற்றும் ஆச்சரியப்படக்கூடிய
விவரங்களாக உள்ளன. எனவே. நாயன்மார்களின் காலத்தை தீர்மானிக்கமல், அவர்களை
சங்கரருடன் இணைத்துப் பேசமுடியாது. மேலும், மேற்குறிப்பிடப்பட்ட
சமஸ்கிருத சுலோகங்களை நுணுக்கமாக ஆராய்ந்தவர்கள் ஆதிசங்கரரால் எழுத/
பாடப் படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.


திருஞானசம்பந்தரும் ஆதிசங்கரரும்: இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல
இருந்தாலும், குறிப்பாக சில முக்கியமானவை நுணுக்கமாக அலசப்படுகின்றன:


1. சங்கர விஜயங்களின் உரையாசிரியர்கள், சுரேஸ்வரர் மற்றும் தோடகர் தமது
குருவை “திரவிட” அல்லது “திராவிட” என்று குறிப்பிடுவதாக எடுத்துக்
காட்டுகிறார்கள் . மேலும் அத்தகைய சொல் உரிச்சொல்லாக அல்லது சொற்கூறாக
அக்காலத்தில் உபயோகபடுத்தப்பட்டது, திரமிடாச்சார்ய, திரமிட தேச சங்கடன
(காரவேலன் கல்வெட்டு), பஞ்சத்திராவிட, பஞ்சகௌட முதலிய சொற்றொடர்களில்
காணலாம்.
2. தேவி / இறைவி அழும் குழந்தைக்கு பாலூட்டும் நிகழ்ச்சி இருவர்
வாழ்க்கையிலும் உள்ளது.
3. ஆகவே ஆதிசங்கரருடைய தேதியை திருஞான சம்பந்தருடன் தொடர்பு படுத்துவது,
தமிழ் தெரிந்த பண்டிதர்கள் “திராவிடசிசு” என்ற சொற்றொடரை அது
ஆதிசங்கரரைக் குறிக்கும் என்று அறிந்திருந்தும் திருஞானசம்பந்தருக்கு
உபயோகப்படுத்தும் முயற்சியிலிருந்து அறியலாம்.
4. மேலும் சம்பந்தர் தமது பாடல்களில் கடுமையாகச் சாடுவது
ஜைனமதத்தினரையேன்றி, புத்தமததினரை அன்று.
5. இருவருமே தமது தத்துவார்த்த எதிரிகளை தர்க்கத்தினால் வெற்றிகொண்டனர்
முறையே தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் வாதிட்டு வென்றனர். ஆனால்,
ஆதிசங்கரருக்குத் தமிழ் தெரியுமா எனத்தெரியவில்லை.
6. சங்கரருடைய ஒரு தேதி 8ம்-9ம் நூற்றாண்டுகளில் உள்ளதால் அவர்
சம்பந்தருடைய காலத்தைச் சார்ந்தவர் எனவும் கொள்ளலாம். அப்போது, அவர்
புத்தமதத்தை தென்னிந்தியாவிலிருந்து ஏன் இந்தியாவிலிருந்தே
விரட்டியிருக்க வேண்டும் என கொள்ளலாம்.
7. அதுமட்டுமல்லாது இருவரும் ஒன்று சேர்ந்தே செயல்பட்டு தமது 32 மற்றும்
16 வயதிற்குள் வெற்றிகொண்டனர் எனவும் கூறலாம்.
8. ஆனால், சங்கரருடைய எண்ணம் வேறுபடியாகவுள்ளதால், அவர் என்றுமே ஜைனர்-
புத்தர்களிடம் சேர்ந்து போகவில்லை. உள்ள நம்பிக்கையாளர்களின் குழுமங்களை
வேதமதம் / சனாதனமதம் என்ற குடையின் கீழ் “எல்லாம் ஒன்று” என்ற கொள்கயை
வலியுறுத்தி கொண்டுவர முனைந்தார்.


ஒரு உள்ளத்தாட்சி சம்பந்தர் ஆதிசங்கரருக்குப் பின் வந்திருக்கவேண்டும்
எனத் தெளிவாகக் காட்டுகிறது.


முன்னம் இருமூன்று சமயங் ளவையாகி
பின்னை யருள் செய்த பிறையாளன்
……..
ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன்.


என்றுக் குறிப்பிடும் போது, தமக்கு முன்னமேயிருந்த “ஆறுசமயத்தொகுப்பினை”
எடுத்துக் காட்டும்போது, அத்தகைய அமைப்பு தோன்றியப்பிறகு, இவர்
வந்திருக்க வேண்டும். சங்கரர் தாம் “ஷண்மத” அமைப்பிற்கு காரணம்
எனும்போது, சம்பந்தர் அவருக்கு முன்னம் இருந்திருக்க முடியாது. ஆகையால்
சம்பந்தருடைய இலக்கிய ஆதாரம் (7ம் நூற்றாண்டு) மற்றும் மஹேந்திரவர்மன் -
I (600-630 CE) காலத்து தொல்லியல் ஆதாரம், ஆதிசங்கரரை 6ம் நூற்றாண்டிற்கு
முன்பு எடுத்துச் செல்கிறது.


சம்பந்தரின் காலம் அல்லது அவருக்குக் கொடுக்கப்படுகின்ற தேதிகள்:
சம்பந்தருடைய தேதியை ஆதிசங்கருடைய தேதியுடன் தொடர்பு படுத்துவதால்,
சம்பந்தருடைய தேதியை சரியாக அறியவேண்டியுள்ளது. அவர் 16 வயதுகாலம் தான்
வாழ்ந்திருந்ததால், சிலர் அவர் இருந்தாரா இல்லையா என்ற சந்தேகத்தையும்
எழுப்பியுள்ளனர். ஆகவே, பண்டிதர்கள் கொடுத்துள்ள பல தேதிகளை
அட்டவணையிட்டுக் காட்டப்படுகிறது:


எண் ஆரய்ச்சியாளர் / குறிப்பு தேதி / காலம் முடிவுக்கு வர காரணம்
1 சைமன் காசி செட்டி 5வது நூ. சோழர்களுடைய “பூர்வ தாமிர பட்டயங்களில்”
குறிப்பிடப்பட்டபடி, சம்பந்தர், நாவுக்கரசர், நம்பொயூரார் சமகாலத்தவர்.
2 டெய்லர் 1320 BCE கூன்பாண்டியன்1320 BCE காலத்தை சேர்ந்தவனாதலால்,
சம்பந்தரும் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்
3 C. W. தாமோதரம் பிள்ளை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூன்பாண்டியன் 2000
வருடங்களுக்கு முன்பு இருந்ததால், சம்பந்தரும் அதே காலத்தில்
இருந்திருக்க வேண்டும்
4 P. குமரசுவாமி விஷத்தால் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் கதை
சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. கயவாகுவின் சமகாலத்தின் படி 113-135
CE, அவன் சில வருடங்களுக்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.
5 ஹுல்ட்ஸ் சுமாராக முதல் நூ. கரிகாலன் மற்றும் கோச்செங்கனான் காலத்தில்
பெரும்பான்மையான பாடல்கள் பாடப்பட்டதால், அப்புலவர்களை அக்காலத்தில்
வைக்க எந்த மறுப்பும் இல்லை.
6 P. சுந்தரம் பிள்ளை 7வது நூ. ஆரம்பத்தில் “திராவிட சிசு” என்பதனை
சம்பந்தருடன் சம்பந்தபடுத்தி, அதனால், சங்கரர் அவருக்கு முந்தியவர்
என்றது.
7 துரைசாமி பிள்ளை 6வது நூ. ஹுல்ட்ஸ் திருகற்றலி கோவில் 550 CE
காலத்தைச் சேர்ந்தது என்கிறார். எனவே, திருமேட்ரலி கோவில் திருகற்றலியோடு
அடையாளங் கொண்டால், சம்பந்தர் அதே காலத்தைச் சேந்தவர் எனலாம்.
8 K. S. ஸ்ரீநிவாச பிள்ளை 609 மற்றும் 642 வருடங்களுக்கிடையில் 16
வருடங்கள்
9 P. சௌந்தர 638-656 CE சிறுத்தொண்டர், அப்பர் முதலியோரது காலத்தவர்.
10 M. ராஜமாணிக்கம் 640-656 அவ்வாறே
11 R. வெள்ளைவாரனார் 638-654 அவ்வாறே
12 அவ்வை S துரைசாமி பிள்ளை 639-655 அவ்வாறே


இதிலிருந்து எவ்வாறு சம்பந்தருடைய தேதிகள் 1360 BCE லிருந்து 7வது
நூற்றாண்டு CE வரையிலும் உள்ளன எனக் காணலாம். சங்கரர் நாயன்மார்களைக்
குறிப்பிட்டுள்ளார் என்தற்கு மேலே எடுத்துக் காட்டியபடி ஆதாரங்கள் இல்லை,
ஏனெனில் அம்முறை 3102 BCE வரைக்கும் செல்கிறது! ஆகவே ஆதிசங்கரரது காலம்
நாயன்மார்களின் காலத்திற்கு முன்பாகவுள்ளது.


கயவாகு கால-ஒப்புமை, அதன் ஆதாரமாக தமிழ் காலக்கணக்கீடு செய்து பெறப்பட்ட
சார்புடைய தேதிகள்: “கயவாகு கால-ஒப்புமை” (Gayavahu synchronism)
உபயோகித்து மேனாட்டு மற்றும் தமிழ் ஆய்வாளைகள் பல தமிழ்-
காலகணக்கீட்டிற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், மேனாட்டவரே
அம்முறையிலுள்ள குறைபாட்டினை எடுத்துக் காட்டியுள்ளனர். ஹெயின்ஸ்
பெகர்ட் என்பவர் புத்தரின் தேதியை நிர்ணயிக்கும்போது எவ்வாறு உள்ள
விவரங்கள் மற்றும் குறிப்புகளை தமதிச்சைக்கு ஏற்றவாறுத் திரித்து
கூறுகின்றனர் என எடுத்துக் காட்டும் போது, கிழ்க்காணும் உண்மைகளைத்
தருகிறார்:


1. காலகணக்கீட்டிற்கான தகவல்கள் மற்றும் அவற்றை உபயோகப்படுத்தும் விதம்
கவலைக்கு இடமாக உள்ளது.
2. புத்தரது தேதி நிர்ணய முயற்ச்சிகளில் எவ்வாறு காலகணக்கீட்டி-
அமைப்புகள் மற்றும் கால-ஒப்புமைகள் முதலியவை மாற்றியமைக்கப்படுகின்றன,
அதற்காக போலிகள் கொண்டு திரிக்கப்படுகின்றன என்பதை காணலாம் (fabrication
of chjronological constructions and synchronisms).
3. ஸ்ரீலங்காவின் ஆவணங்களை பொறுத்த மட்டிலும், கீழ் கணட உதாரணங்கள்
தரப்படுகின்றன:
1) விஜயனுடைய கால-ஒப்பீடு மற்றும் புத்தரது நிர்வாணம்.
2) “கயவாகு கால-ஒப்புமை”
3) காளிதாசர் மற்றும் குமரதாசர் இவர்களது சமகாலத்துவ நிலை.
4. “சிங்களவர்கள் தாம் புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” என
நியாயப் படுத்துவதற்காக, புத்தருடைய நிர்வாணம் மற்றும் சிங்களவரது
மூலமாக / தந்தையாக கருதபடக் கூடிய மாயத்தந்தை-“விஜய”வுடன்
சம்பந்தப்படுத்த சரித்திரவரைவாளர்கள் ஒரு கால-ஒப்புமை-அமைப்பை
உருவாக்கினார்கள்.
5. இரண்டாவது “கயவாகு கால-ஒப்புமை”, இதுதான் ஆரம்ப தமிழ்-
காலகணக்கீட்டிற்கு பயன்படுத்தப் படுகிறது . அனவே அத்தகைய சந்தேகமாகவுள்ள
“ஒப்புமையை” தமிழ் ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்துள்ளதை
ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் தொடர்ந்து உபயோகிக்கிறார்கள் என்பதனை
கவனிக்கவேண்டும்.
6. ஜி. ஒபெயஸிகெரெ என்பவர், இந்த “கயவாகு கால-ஒப்புமை”, சரித்திர
ஆதாரமில்லாமல் முழுமையாகக் கட்டுக்கதையின் மீது ஆதாரமாக
புனையப்பட்டுள்ளது, என எடுத்துக் காட்டுகிறார்.
7. மற்றொரு உதாரணம் காளிதாசருடைய தேதி . ஆய்வாளர்கள் காளிதாசர் மற்றும்
குமாரதாசர் அல்லது குமாரதாதுசேன என்பவர்கள் சமகாலத்தவரா என்று ஆய்ந்து-
அலசி அதன் மூலம் காளிதாசருடைய தேடியை நிர்ணயிக்க முயன்றுள்ளனர். ஜானகிஹரண
என்ற நூலின் ஆசிரியரான குமரதாசர், “குமாரதாதுசேன” என்ற மன்னனுக்கு பல
நூற்றாண்டுகளுக்குப் பின்வாழ்ந்தவன்! ஆனால், இந்த மொத்த கதையே பிற்காலக்
கண்டுபிடுப்பு !


ஆகவே “கயவாகு கால-ஒப்புமை”, புராணக்கதை/கட்டுக்கதைகளின் மீது ஆதாரமாக
உள்ளது, சரித்திர காலக்கணக்கு தமதிச்சைக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டது.
அதற்கேற்றார்போல கணக்குகள் திருத்தப் பட்டன என்பனவெல்லாம் சரித்திர-
மோசடிகள் ஆகும் . எனவே, அத்தகைய ஒப்புமை சரித்திர அத்தாட்சியாக எடுத்துக்
கொள்ளமுடியாது. ஏற்கெனவே தமிழ்நாட்டு சரித்திர நிகழ்ச்சிகளின் தேதிகளைக்
நிர்ணயிக்க இந்த “கயவாகு கால-ஒப்புமை”, உபயோகிக்கப் பட்டிருப்பதால்,
அத்தகைய காலக்கணக்கீட்டை முதலில் மறுபரிசீலனை செய்யவேண்டும். ஆகவே,
இந்நிலையில் நிச்சயமாக சம்பந்தருடைய தேதியை, சங்கரருடைய தேதியுடன் 7
அல்லது 8வது நூற்றாண்டுகளில் வைத்து இணைக்க முடியாது. ஆகையால் மற்ற
சரித்திர அத்தாட்சிகளை நாம் இங்கு பார்க்க வேண்டும்.


சேரநாடு - கேரளதேச பாரம்பரியம்: சங்க-இலக்கியத்தைப் பொறுத்த மட்டிலும்,
சேரநாடு/கேரளதேசம் தமிழகத்தின் பகுதியாகக் கருதப் பட்டது.
பதிற்றுப்பத்தின் படி சேர அரசர்கள் எப்படி வேதமுறைகளைப் பின்பற்றி
வந்துள்ளனர் என்பதை காணலாம். இருப்பினும், அகழ்வாய்வு ஆதாரங்கள்
பிற்காலத்தைச் சார்ந்ததாகவே உள்ளன. கேரள / மலையாள ஆவணங்களில் “சங்கரர்”
காணப்படுவதில்லை.


மேலும் மலையாளத்திலுள்ள தொன்மையான ஆவணமே 9வது நூற்றாண்டைச் சேர்ந்தது
தான் என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் . எனவே மலையாள
இலக்கியம் அவரைப்பற்றி பேசாமல் அமைதியாகயிருந்தது ஆச்சரியமான விஷயமில்லை.
மேலும் கேரளத்தில், சமஸ்கிருத நூல்களின் தொன்மையே 7ம் நூற்றாண்டு
வரைத்தான் செல்கிறது . பிறகு எப்படி காலடியில் பிறந்த சங்கரர்
சமஸ்கிருதம் படித்து, வேதங்கள் படித்து, அம்மொழியில் தேர்ச்சி பெற்று,
தர்க்கம் பிரிந்து, அத்வைத தத்துவதை வழங்கி முதலிய பல காரியங்களை,
அதுவும் குறுகிய காலகட்டத்தில் செய்து முடித்திருக்க முடியும்? கேரள
சமஸ்கிருத நூல்கள் “சர்வஜனாத்மன்” (10th cent.CE),
“சங்கரஹிருதயாகம” (13th cent.CE), “துர்காபிரசாத்யதி” (14th cent CE)
முதலிய பிற்காலத்தைய நூல்கள்தாம் அவர் பெயரைக்குறிக்கின்றது. ஆனால், கேரள
வானியல் பாரம்பரியம்படி வரருசியை கவனத்தில் கொண்டால், அது மூன்றாவது
நூற்றாண்டிற்குள்ளது . அதுமட்டுமல்லாது, கேரள வானியல் மற்றும் கணக்கியல்
வல்லுனர்கள், ஆரியபடர் (ஆரியபட்டர் என்று குறிப்பிடுவது தவறு)
தம்முடையவர் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆகவே இத்தகைய முரண்பாடுகளை
சரித்திர ரீதியில் நோக்கவேண்டியுள்ளது.


சங்கரருடன் தர்க்கத்தில் வாதிட்டதாகிய சமகாலத்தவர் என்பவர்கள் வெவ்வேறு
காலத்தில் உள்ளனர்:


1. தர்மகீர்த்தி 530-600 மற்றும் 600-660 CE.
2. குமாரில பட்டர் 7ம் நூற்றாண்டு ஆரம்பம், 600-660 CE முதலியன.
3. மண்டல மிஸ்ரர் 615-695 CE, 690-710 CE முதலியன.


அறிஞர்கள் ‘மத்யாமிக நாகார்ஜுனர்’ (2nd cent. CE) மற்றும் ‘தந்திரிக
நாகார்ஜுனர்’ (6ம்-7ம் நூற்றாண்டு CE) எனப்படுகின்ற இருவரும் வேறு என்று
எடுத்துக் காட்டியும், புத்த பாரம்பரியங்கள் இருவரும் ஒன்றே எனக்
கொள்கின்றன. இது, ஒரு நாகார்ஜுனர் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு
வாழ்ந்தார் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. ஆகவே புதியதாக ஏற்படுத்திக்
கொண்ட சங்கரருடைய தேதிகளுக்கு ஏற்ப மற்றவர்களையெல்லாம் அந்த காலத்தில்
செருகமுடியாது அல்லது சங்கரரை பலகாலங்களில் வாழ்ந்த அவர்களுடன் வைக்க
முடியாது. சங்கரர் வாழ்ந்ததோ 32 வருடங்கள் தாம், இதில் 16-20 வருடங்கள்
தாம் பண்டிதர்களுடன் தர்க்கங்களில் ஈடுபட்டிருப்பார்.
அப்படியிருக்கும்போது, பல காலங்களில் வாழ்ந்த பலருடன் இணைத்தால், அதாவது
அவ்வாறு செய்தால் நாகார்ஜுனரைப் போலவே சங்கரரும் பல நூற்றாண்டுகள்
600-850 வாழ்ந்திருக்கவேண்டும், எல்லாகாலத்தவர்களுடன் வாதித்தியிருக்க
வேண்டும் என்றாகிறது. அல்லது அவரவர் காலங்களில் “சங்கரர்” என்ற பெயரில்
மற்ற பண்டிதர் இருந்திருக்க வேண்டும் .


‘கேரளோத்பத்தி’ என்ற மலையாளத்தில் எழுத பட்டுள்ள கேரள வரலாற்று நூல், ஆதி
சங்கரருக்கு இரண்டு தேதிகளைக் கொடுக்கிறது - 400 CE மற்றும் 427 CE.
‘கொங்குதேச-ராஜா-கதா’, ஐந்தாம் நூற்றாண்டிற்கு மத்தியில் அவர்
பிறந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. ‘கேரள தேசத்து சரித்திரம்’ என்ற
நூல், 314-278 BCE காலத்தில் கேரளத்தை ஆண்டதாக சொல்லப்படும் சேரமான்
பெருமாள் காலத்தில் ஆதிசங்கரர் பிறந்ததாகக் கூறுகிறது . கேரளாவிலேயே அவர்
பிறந்த இடம் இருந்தும் இவ்வாறு கேரள பாரம்பரியம் அவரது பிறந்த காலத்தை
4ம் BCE முதல் 5ம் CE வரை நூற்றாண்டுகளில் ஆதிசங்கரருடைய பிறந்த தேதியை
வைக்கின்றது.


கருநாடக பாரம்பர்யம்: ஆதிசங்கரர் சிருங்கேரியில் ஒரு மடத்தை
நிறுவியிருந்தும் அங்குள்ள அதாவது உள்ளூர் இலக்கியமோ கல்வெட்டுகளோ அவரது
பெயர், அத்வைதம் அல்லது நூல்கள் பற்றி குறிப்பிடுவதில்லை. ஆனால்
சந்திரகுப்த மௌரியன், ஜைனமதத்திற்கு மாறியது, ஸ்ரவனபெலகோலாவிற்கு வந்து
வடக்கிருந்து இறந்தது முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அப்பகுதியில்
இருந்த புத்தர்களை விட அதிகமான ஆதிக்கத்தை ஜைனர்கள் கொண்டிருந்தனர்
என்பதனைக் காட்டுகிறது. ஆனால், ஆதிசங்கரர் பற்றியோ அவர் ஜைனர்களை
எதிர்கொண்டது பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. அதுமட்டுமல்லாது, மற்றொரு
பிரபலமான-ஆதிக்கத்தை கொண்டிருந்த வீர-சைவ இலக்கியமும் இவரைக்
கண்டுகொண்டதாக தெரியவில்லை.


ஸ்ரவனபெலகோலா, 7ம்-8ம் நூற்றாண்டுகளில் CE ஜைனர்களின் படிப்பிற்கு கல்வி-
பீடமாக அமைந்திருந்தது. காஞ்சிபுரத்தில், ஹிமசிதல என்பவனின் தர்பாரில்
தர்க்கம் நடந்தபோது “அகாலங்க” என்ற பண்டிதர் வரவழைக்கப்பட்டு
பௌத்தர்களுடன் வாதிட பணித்தனர். அகாலங்க அவ்வாறே பௌத்தர்களை 788 CE ல்
தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் . இந்நிகழ்ச்சி
மிகவும் கவனிக்கவேண்டியதாக உள்ளது, ஏனெனில் 788 CE தேதி மற்றும்
பௌத்தர்கள் காஞ்சிபுரத்திலிருந்து வெளியேற்றபட்டது, இரண்டுமே
ஆதிசங்கருடன் சம்பந்தப்பட்டுள்ளது. 788 CE அவர் பிறந்த தேதி, காஞ்சிபுரம்
அவர் சமாதியுள்ள மற்றும் அவரால் நிறுவப்பட்ட மடம் இருக்கும் இடம் ஆகும்!


ஆந்திரதேச பாரம்பரியம்: ஆந்திரபிரதேசம் பௌத்தர்களின் மிகவும் ஆதிக்கம்
கொண்டிருந்த பிரதேசம் ஆகும். தொல்பொருட் சான்றுகள் பெரருமளவில் அந்த
உண்மையினை எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே அக்காலத்தில் சங்கரர்
இருந்திருப்பின் அவருக்கு இங்கு மிகவும் கடினமான நிலை இருந்திருக்கும்.
ஆனால், உள்ளூர் இலக்கியமோ கல்வெட்டுகளோ அவரது பெயர், அத்வைதம் அல்லது
நூல்கள் பற்றி குறிப்பிடுவதில்லை. பௌத்தர்களின் நூல்களும் அமைதியாகவே
உள்ளன.


மேலும் சரித்திர ஆதாரங்களினால் மிகவும் தெளிவாக உள்ள ஆந்திர சரித்திரம்
300 BCE-300 CE காலத்தில் வைதீக-பிராமண மத ஆதிக்கத்தில் உள்ளதாக
இருக்கிறது. சாதவாஹனரின் கல்வெட்டுகள் அவ்வாறான நிலையைக் காட்டுகிறது.
“அத்தகைய வெளிப்பட்ட பிராமணமத மறுமலர்ச்சி, யாக நெருப்பாக பௌத்தர்களை
தணித்தது மற்றும் ஜைனர்களை சுட்டெரித்தது” , என்று ஒரு சரித்திர ஆசிரியர்
எழுதுகிறார். அப்படியுருக்கும்போது, சங்கரர் அந்த காலத்திற்குப் பிறகு
தோன்றியிருக்க அவசியமே இல்லை, ஏனெனில் அவருக்கு வேலையே இல்லை.


சமகாலத்தைய தமிழக ஆட்சியாளர்கள் / அரசர்கள்: அரசியல் ரீதியில்
தென்னிந்தியா என்பது தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம் மற்றும் கேரளம்
கொண்ட பழந்தமிழகம் ஆகும். இருப்பினும் பல வம்சங்களைச் சேர்ந்தவர்கள்
தங்களது அதிகாரங்களை குறிப்பிட்ட நகரங்களில் தக்க வைத்துக்கொண்டு ஆட்சி
புரிந்து, அவற்றை மையமாக கொண்டு தமது அரசை பரப்பினர். ஆகையால்தான் பல
வம்சாவளிகளைச்சேர்ந்த அரசர்களை நாம் காண்கிறோம். அவர்களுள் 8வது-9வது
நூற்றாண்டுகளில் வாழ்ந்த மன்னர்கள், அட்டவணையில் கொடுக்கப்படுகின்றன:


ஆண்ட மன்னர் காலம் / தேதி CE வம்சாவளி
நந்திவர்மன் பல்லவ மல்லன் 710-755 பல்லவ
தண்டிவர்மன் 755-826 பல்லவ
நந்திவர்ணன்- II 826-849 பல்லவ
நெடுஞ்செழியன் பராந்தகன் 765-790 பாண்டிய
ராஜசிம்ஹ பாண்டியன் -II 790-792 பாண்டிய
வரகுண பாண்டியன் 792-835 பாண்டிய
விக்ரமாதித்யன் 733-743 சாளுக்கிய
துருவ 780-794 ராஸ்டிரகூட
கோவிந்த II 793-814 ராஸ்டிரகூட
அமோகனர்ஷ -I நிருப்துங்க 814-878 ராஸ்டிரகூட
மார்ப்பிடுகு/பராதிரையன் 770-791 முத்தரையர்
விடல்விடுக முத்தரையன் /குறவன் சாத்தன் 791-826 முத்தரையர்
சத்தன் பாலியல் 826-851 முத்தரையர்
சிம்ஹபோத நொம்பாதிராஜ 785-805 நொளம்ப
பரமேஸ்வர பல்லவாதிராஜ / சாருபொன்னேர 805-830
விஜயாதித்யா I 772-824 பான
மல்லதேவ 824-843 பான
விக்கிரமாதித்யா I 843-892 பான


இவர்கள் எல்லாம் இந்து, பௌத்த, ஜைன நம்பிக்கையாளர்களாக இருந்தும் அனைத்து
மற்ற மதநம்பிக்கையாளர்களையும் ஆதரித்து வந்தனர். ஆனால் இவர்கள்
அக்காலத்தில், 788-820 ஆண்டுகளில் வாழ்ந்ததாக கருதப் படுகின்ற
ஆதிசங்கரரைத் தெரிந்து கொண்டதாக இல்லை. அதே மாதிரி ஆழ்வார்கள்
நாயன்மார்களுக்கும் இந்த கால-கட்டங்களிலேயே இருந்ததாக சரித்திர
ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள். அவர்களும் சங்கரரைப்
பற்றி மூச்சுக் கூட விடவில்லை!


நாயன்மார் / துறவி அவரது காலம் / தேதி
திருஞானசம்பந்தர் c.7th cent.CE
திருநாவுக்கரசர் -do-
ஐடிகள் காடவர்கோன் -do-
சுந்தரர் c.8th cent.CE
சேரமான் பெருமாள் -do-
ஏனாதி சட்டஞ் சாத்தனார் -do-
மாணிக்கவாசகர் c.9th cent.CE
பட்டினத்து அடிகள் -do-
சேந்தனார் -do-
பெருமானடிகள் -do-


சங்கரரோ பல இடங்களுக்குச் சென்று, பல பண்டிதர்களைச் சந்தித்து,
அவர்களுடன் வாதம் புரிந்து, பற்பல நம்பிக்கையாளர்களுடன் உரையாடி அவர்கள்
கருத்து அறிந்து அனைவரையும் இணைக்கும் முயற்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்
போது, இக்காலத்தில் யாருமே அவரை அறியாமல் இருந்தது, ஒரு பெரிய சரித்திர
புதிரும், மாயமும் ஆகும்.


ஆதிசங்கரர் 509-477 BCE மற்றும் 788-820 காலகட்டங்களில்
இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள்: இந்திய மற்றும் மேனாட்டு அறிஞர்கள்
இந்திய சரித்திரத்தில் இவ்வாறு பல புதிர்களைத் தீர்க்காமல் குறிப்பிட்ட
சுமாரான “c. = circa” என்று தோரயமாக வைத்துக் கொண்ட தேதிகளையெல்லாம்
முடிவாக நிர்ணயிக்காமல் “c.”ஐ எடுத்து விட்டு, ஏதோ தீர்மாணித்த தேதிகளைப்
போல குறிப்பிட ஆரம்பித்து விட்டனர் . இந்திய பள்ளிக் குழந்தைகள், கல்லூரி
மாணவர்கள் மற்றும் அரசுதேர்வுகள் எழுதுபவர், அத்தேதிகளே இறுதியானவை
எனக்கொண்டு தேர்வுகள் எழுதி பட்டம் பெறுகிறார்கள், அதிகாரிகள்
ஆகிறார்கள். அத்தகைய தவறான தேதிகளை வைத்துக் கொண்டு முன்னுக்கு முணாக
பேசுகிறார்கள்-எழுதிகிறார்கள் . ஆகவே, எல்லோரும் பாரபட்சமின்றி, இரண்டில்
எந்த காலம் / தேதிகள் ஆதிசங்கரருக்குப் பொருந்தி வரும் என்று பார்க்க
வேண்டும்:


1. பௌத்தமதம் அரசாங்க-ஆதரவுடன், ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடிய நிலையில்
இருந்திருக்கவேண்டும் .
2. இந்துமதத்தினர் சாதகமற்ற நிலையில் பல இன்னல்ககளுக்கு உட்பட்டுக்குக்
கொண்டிருக்க வேண்டும்.
3. பௌத்தமதம் அத்தகைய நிலையில், உள்ள வேத-இந்து மதத்தினருக்கு,
சமூகத்திற்கு பெருத்த அளவில் அபாயகரமான / மோசமான நிலையை உண்டாக்கியிருக்க
வேண்டும். இல்லையனில் பௌத்தமததை விரட்டவேண்டும் என்ற எண்ணம், நிலை
ஏற்பட்டிருக்காது.
4. வேறு விதமாக நோக்கினால், புத்தமதம் தனக்கே உரித்தான அமைதி, சாந்தி,
நிர்வாணம், கொல்லாமை, வன்முறையற்றத்தன்மை முதலியவற்றைத் துறந்து,
அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஏதாவது காரியங்களை செய்திருக்க
வேண்டும்.
5. தத்துவ-தர்க்க விவாதங்களினால் அல்லது அவற்றில் பௌத்தர்கள்
தோற்கடிக்கப்பட்டதினால் மட்டும், பௌத்தம், தனது சமூக-முக்கியத்துவத்தை
அரசியல்-அதிகாரத்தை தத்துவ-செல்வாக்கை இழந்திருக்க முடியாது.
6. ஆகவே மக்களே அதனை மறுக்க, வெறுக்க, துறக்க ஆரம்பித்து விட்டனர்
எனும்போது, நிச்சயம் பௌத்தர்கள் அத்தகைய முரண்பாடுள்ள, எதிர்மறையான,
மக்களுக்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபட ஆரம்பித்து இருக்க வேண்டும்.
7. சமூகமும் முழுவதுமாக வேதமத்தைப் பின்பற்றிக் கொண்டு, அதன் சமூக-மத
ஸ்தாபனங்களின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் ஆதிசங்கரர்
சமஸ்கிருதத்திலேயே பேசி விவாதித்து பண்டிதர்களை வென்றதாகச் சித்தரிக்கப்
படுகிறார். மேலும் குறிப்பிட்டபடி, பற்பல நம்பிக்கைக் கொண்ட மக்கள்,
அவர்களது தலைவர்கள் முதலியவர்களை பாரதம் முழுவதும் சென்று உரையாடி,
அவர்களை சம்மதித்து “ஸண்மத” கட்டுக்குள் எடுத்து வந்தார் என்றால்,
அத்தகைய சாதகமான நிலை இருஎதிருக்க வேண்டும்.
8. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் காட்டும் சமூக நிலை அவ்வாறு இல்லை.
சமஸ்கிருதத்தில் கல்வெட்டு இல்லை, பாலி மொழி பாமர மக்களால் பேசி வந்தனர்;
அரசர்கள் எல்லம் ஜைன-பௌத்த மதங்களைத் தழுவி அவ்வாறே ஆதரவு கொடுத்து
வந்தனர். உதாரணத்திற்கு தாத்தா சந்திரகுப்தன் ஜைனமதத்தையும், பேரன்
அசோகன் பௌத்தமதத்தியும் சேர்ந்தவர்கள். அதே மாதிரி தென்னிந்தியாவிலும்
மன்னர்கள், அவ்வாறே ஜைனர்கள்-பௌத்தர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆகையால்
தான் “களப்பிரர்கள்” என்பவர் தோன்றி தமிழ்-கலாச்சாரம், சம்பிரதாங்கள்
அனைத்தையும் அழித்து விட்டனர், அதனால் முதல் மூன்று-நான்கு
நூற்றாண்டுகளில் தமிழகம் இருண்டு கிடந்தது (Kalabhra interlegnam)
என்றெல்லாம் சரித்திரப் பண்டிதர்கள் எழுதியுள்ளனர் .
9. அத்தகைய நிலைகளில் - அதாவது சிறிதும் சாதகமான சமூக-சமய-அரசியல்
சூழ்நிலைகள் இல்லாத கால-கட்டத்தில், ஆதிசங்கரர் எப்படி சம்ஸ்கிருதத்தில்
படித்து, பண்டிதராகி, மற்ற எல்லா பண்டிதர்களை விவாதங்களில்
“சமஸ்கிருதத்திலேயே பேசி” வாதிட்டி வென்றிருக்க முடியும்? பாரதம்
முழுவதும் - நேபாளம் வரை - சாதரணமாக சுற்றிவந்திருக்க முடியும்? வாரணாசி,
பூரி, துவாரகா, சிருங்கேரி மற்றும் காஞ்சிபுரம் முதலிய இடங்களில் மடங்களை
நிருவியிருக்க முடியும்? மிகவும் பலமான, செல்வாக்குள்ள பௌத்தர்களை வென்று
துரத்தியடித்திருக்கக்கூடும்?
10. தொல்பொருட்-ஆராய்ச்சியாளர்களும் பௌத்த விஹாரங்கள் எங்கும்
பரவியுள்ளதை காட்டுகின்றனர், ஆனால் அக்காலத்தில் வேத-இந்து மதத்தின்
வழிபாட்டு இடங்கள் காணப்படுவதில்லை. சரித்திரரீதியில் வேதகாலதிற்கு
பிறகு, வேத-மதத்தினை மறுத்து (கடவுளை மறுத்து) -எதிராக ஜைன-பௌத்த மதங்கள்
தோன்றியிருக்கும்போது, அவ்வாறே தொல்துறைரீதியில், அடுகடுக்காக பூமியில்
அந்தந்த நம்பிக்கையாளைகளின் பதிவுகள் c.3500 BCE (சிந்துசமவெளி நாகரிகம்)
முதல் 300 BCE (மௌரிய பேரரசு) வரை இருந்திருக்கவேண்டும். மிகவும்
முதிர்ச்சியடைந்த நாகரிகம் 2200-1950 BCE காலகட்டத்தில் இருந்தது. பிறகு
1950 BCE முதல் 300 BCE வரை என்னவாயிற்று என்று 300 BCE தொல்பொருட்-
ஆராய்ச்சியாளர்களும், சரித்திர-ஆசிரியர்களும் விளக்க மறுக்கின்றனர்கள் .


எதுவும் வெறுமையின்றி வந்திருக்கமுடியாது என்பது, தத்துவம் மட்டும்
அல்லாது, விஞ்ஞான முடிவும் ஆகும். சரித்திரத்தில் மன-உடல் கூறுகளின்
தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், சிந்தனைகள் வெளிப்பட்டு
திடப்பொருட்களாக மாறும் போது, தொல்பொருள் அத்தாட்சிகளாக பதிவு
வெய்யப்பட்டிருப்பதுத் திண்ணம். இலக்கியம் உள்ள-படைத்த மனிதர்கள்,
தத்துவத்தில் சிறந்தவர்கள், 9000 YBP வரைச் செல்லும் நாகரிகத்தவர்
“படிபற்றவர்” என்று வாதிடுகின்றனர். இதையேத் தான் “சரித்திரத்திற்கு
முந்தைய காலம்” (pre-historic) என்று சொல்லி, இந்திய தொன்மையினை
மறுத்தனர்.


ஆனால், உள்ள அத்தகைய அத்தாட்சிகளை எதோ காரணங்களினால் ஒப்புக்கொள்ளாமல்
தொடர்ந்து இந்திய-சரித்திரத்தை, முடிவற்ற தொங்குநிலையில் வைத்து
சரித்திரத்தை எழுதி படித்து முடிவுகளுக்கு வருவது அறிவுபூர்வமாக தவறானது,
என்பதை அந்த சரித்திர-அறிவு ஜீவிகள் உணர்வதில்லை. அவ்வாறு தவறாக
இருக்கும்போது எங்கு தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டு அதனை
திருத்திக் கொள்ளவேண்டும். இவ்விதமாக உள்ள ஆதாரங்களை வைத்துப்
பார்க்கும்போது, உதாரணமாக ஹரப்பன்களின் “எழுத்துகளை” படிக்கமுடியாமல்
அவர்களை “எழுத்தறிவற்றவர்கள்” என்று பேசுவது-ஆராய்ச்சி செய்வது கற்றக்
கல்விற்கே ஒவ்வாததாகும். அகவே மாற்றுக் கருத்துகளில் உண்மை எதுவும்
உள்ளதா என ஆராயமல் இருப்பது விந்தையாக இருக்கிறது. மேற்கண்ட விவரங்கள்,
சான்றுகள், உண்மைகள் முதலியவற்றிலிருந்து 788-820 CE கால-கட்டத்தை விட
509-477 BCE தகுந்ததாகத் தோன்றுகிறது.


எதிர்வாதங்கள், சாதகமில்லாத வர்ணனைகள், முதலியவற்றை ஆராய்தல்: பௌத்த
இலக்கியங்களை ஆராய்ந்த அறிஞர்கள் பல எதிர்வாதங்கள், சாதகமில்லத
வர்ணனைகள், விமர்சனங்கள் என்று பல விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளனர்:


1. தர்மபாலனின் சீடன் ஒரு பிராமணனைத் தோற்கடித்தது: யுவான் சுவாங்
தர்மபாலனின் சீடனாகிய சீலபத்ரன் (c.500 CE) தென்னிந்தியாவிலிருந்து வந்த
ஒரு பிராமணனை பல நாட்கள் வாதிட்டு முடிவில் வென்றதாகக்
குறிப்பிடுகின்றார். ஆனால், அந்த “தென்னிந்திய பிராமணனின்” பெயர்
குறிப்பிடப் படவில்லை.
2. தர்மகீர்த்தி ஒரு சங்கராச்சாரியரை வெற்றிக்கொண்டது: தர்மகீர்த்தி
(530-600 / 600-660 CE) மிகவும் படித்த ஒரு சங்கராச்சாரியாருடன் வாதிட்டு
வென்றதாக குறிப்பிடப்படுகிறது . அவ்வாறு தோற்றதால் சங்கராச்சாரியார்
கங்கை நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக உள்ளது. இங்கு
“சங்கராச்சாரியார்” என்று குறிப்பாகயுள்ளது.
3. “ப்ரச்சன புத்தர்”- परचॅऩन बुधॅध என்ற குற்றச்சாட்டு: ஆதிசங்கரரே ஒரு
பௌத்தராக புத்த-மதத்தினராக இருந்தார், என்ற குற்றசாட்டு உள்ளது .
“ப்ரச்சன புத்தர்”- परचॅऩन बुधॅध என்றால் ரகசியமாக பௌத்தரைப் போல்
இருந்தவர் என பொருள்படும். அத்வைதம் மற்றும் புத்த-மத கருத்துகளான
விஞ்ஞானம், சூன்யம், மத்யாமிக பௌத்தம் முதலியவற்றிலுள்ள ஒற்றுமைகளை
வைத்து அவ்வாறான விமர்சனம் செய்யப் படுகிறது. இருப்பினும் தத்துவ
வழக்காடுகள் மூலம், பண்டிதர்கள் அதனை மறுத்துள்ளனர் .
4. கவுடபாதரும் “ப்ரச்சன புத்தர்” தாம்: கவுடபாதரும் விஞ்ஞான-
சூன்யவாதங்களை அத்வைதத்துடன் ஒத்துபோகும் முயற்ச்சியில் ஈடுபட்டதால்
அவ்வாறு குற்றஞ்சாட்டப்படுகிறார் .
5. சங்கரருக்கு முன்னமே “அத்வைதம்” இருந்தது: இங்கு இரண்டு வாதங்களைக்
காணலாம். அதாவது தத்துவரீதியில், சங்கரர் புதியதாக எதையும் சொல்லவில்லை,
ஏனெனில் அத்தகைய கருத்துகள், ஏற்கெனவே வேதங்களில்-உபநிஷத்துகளில் உள்ளன
என்பது ஒரு வாதம். இதை, வேதங்களை ஆதரிப்பவர்-எதிர்ப்பவர் இருசாராரருமே
அவ்வாறு வாதிடலாம். ஆனால், சரித்திர ரீதியில், காலத்தினால் அத்வைதம்
பேசும் நூல்கள் இருந்து, குறிப்பாக 788-820க்கு முன்பாக இருந்தால்,
அவற்றை அவ்வாறு ஒதுக்கிவிட முடியாது . ஏனெனினில் 509-477 கால நிலையை
எதிர்ப்பவர்-மறுப்பவர் அவ்வாறு வாதிட்டு உண்மையினை மறைக்கலாம்.


ஆகையால் இத்தகைய குற்றச்சாட்டுகள், விவர்சனங்களை ஒதுக்கிவிட முடியாது.
அவற்றை நுணுக்கமாக ஆராய்ந்தால், அவற்றின் பின்னணி விளங்கும். எனவே அவற்றை
ஆராயும்போது, கீழ்காணும் சாத்தியக்கூறுகள் தெரிகின்றன:


1. பௌத்தர்களின் மதம் பலமிழக்க காரணமாக இருந்தவர் சங்கரர் தாம் என்ற
எண்ணம் இருந்தபோது, அவர் மீது வெறுப்பு, துவேஷம் எழுந்தது-இருந்தது
உண்மை.
2. பௌத்தர்கள்-இந்துக்களிடையே 5-6-7 நூற்றாண்டுகளில் வாதங்கள் இருந்தது-
தொடர்ந்தது என்பது பொதுவான அறிந்ததொன்றாகும்.
3. அத்தகைய வாதங்கள், இந்திய பாரம்பரியத்தின் மீது ஆதாரமாக - தர்க்கம்
என்ற நிலையில் இருந்ததால், அமைதியாகவே இருந்ததன, நடந்தன.
4. இலக்கியம் “ஒரு சங்கராச்சாரி” என்றுதான் குறிப்பிடுகிறதேத் தவிர
“ஆதிசங்கரர்” என்று குறிப்பிடவில்லை.
5. எது எப்படியாகிலும், இந்த வழக்கும் 5ம் நூற்றாண்டிற்கு முன்பு
செல்கிறது.
6. இவ்விவாதம் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்ஸ்கிருத நூல்களிலே
காணப்பட்டாலும் “விவாதம் செய்தவர் தென்னிந்தியாவிலிருந்துதான் வந்தார்”
எனும் போது தென்னிந்தியாவின் உயர்ந்த கல்விநிலையைக் காட்டுகிறது. அதாவது,
சமஸ்கிருத படிப்பு முதலியன தென்னிந்தயாவில் இருந்தது என்பது
தெளிவாகிறது .
7. “ப்ரச்சன புத்தர்”- परचॅऩन बुधॅध க்க்காஅகுற்றச்சாட்டு “சங்கரரை” எந்த
அளவிற்கு பௌத்தர்கள் மதிக்கின்றனர் அல்லது “சங்கராச்சாரரி” அவர்களை
பாதித்துள்ளார் என்பது தெரிகிறது.


கம்போடிய கல்வெட்டை ஆராய்தல்: தென்னிந்தியர்கள் பெருமளவில் தென்மேற்கு
ஆசிய நாடுகளுக்குச் சென்றதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக
கௌண்டின்ய தோத்ரம் கொண்ட பிராமணர்கள் பெருமளவில் சென்றதை
ஆராய்ச்சியாளர்கள் விளக்குவதில்லை. முக்கியமாக பிராமணர்கள் கடல் தாண்டிச்
செல்லக் கூடாது என்றால் இவர்கள் எப்படி சென்றிருக்கக் கூடும்? 1950களில்
கம்போடிய கல்வெட்டில் கண்ட ஒரு “पगवाचँचंखर = பகவாச்சங்கர” என்ற
சொற்றொடரை “ஆதிசங்கரர்” தாம் எனக்கொண்டு அவர் காலத்தை 788-820க்கு
தீர்மானித்தனர். அக்கல்வெட்டைத் தமிழில் இவ்வாறு படிக்கலாம்:


தேன திப்தானி சாஸ்திரானி பகவாச்சங்கராக்னயத்|
....................................
யஹ்: சதா தக்ஷிணாச்சார்: கும்பயோனிர்வப்ரஹ
நிஸ்சேஸமுதர்லி மலாலிததக்ரிபங்கஜாத்||
த்ர்க கவ்ய திஸபூதாமிதபூதுமவ்ய யஹ|
புராண பாரத ஸைஸ்ய சைவ வ்யாகர்ணதிஸு
சாஸ்திரேஸ்ய குஸலோ யொஹபூத் தத்காரக ஐவ ஸ்வயம்
சர்விதைகனிலயோ வேதவித் ...

கருத்துகள் இல்லை: