
சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என். ஆனந்த் போட்டியிடுகிறார்.
அந்தநல்லூர் ஒன்றியம் காந்தபுரம் என்.ஆனந்த்துக்கு வயது 29. இவர் பி.எஸ். சி. பட்டம் பெற்றவர்.
வெளிநாடு சென்று வேலைபார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரிலேயே விவசாயத்தை கவனித்து வருகிறார்.
150 ஏக்கரில் வாழை பயிரிட்டு விற்பனை செய்யும் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் இருக்கிறது.
தற்போது இவர் திமுக கிளைச்செயலாளராக இருக்கிறார்.
முத்தரையர் இனத்தைச்சேர்ந்த இவருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மனைவி சவுமியா எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவர் கருணாநிதியை சென்னை அண்ணா
அறிவாலயத்தில் சந்தித்து ஆசி பெற்ற ஆனந்த்திடம் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவது குறித்து கேட்டபோது,
‘’அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வென்று வெற்றிக்கனியை தலைவர் கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன்’’ என்று அதிரடியாய் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக