பாசம் கலந்த கம்பிரமான வீரத்தை கொண்ட என் முத்தரையர் உறவுக்களுக்கு என் வணக்கம். நான் வாழும் நாமக்கல் மாவட்டத்தை பற்றி எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் என்று அழைக்கப்படும் திருச்சிக்கு வடமேற்கில் அமைந்துள்ள ஒரு சிறிய மாவட்டம் .......
மலைகோட்டையும் அதன் அடியில் உள்ள உலக புகழ்வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலும், கொல்லிமலையும் மாவட்டத்திருக்கு அழகு சேர்க்கின்றன.. .. நாமக்கல் மாவட்டத்தில் கௌண்டர்கள் (கொங்கு) தான் அதிகம் வாழ்கிறார்கள் இருந்தும் மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு முத்துராஜா (நாமக்கல் மாவட்டத்தில் முத்தரையர்கள் முத்துராஜா என தான் அழைக்கபடுகிறார்கள் இல்லை வாழ்கிறார்கள்).
இந்த மாவட்டத்தில் எருமப்பட்டி ஓன்றியத்தில் தான் முத்தரையர்கள் அதிகம். இந்த பேருருராச்சிக்கு உட்பட்ட 25 ஊர்களிலும் நம் இன மக்கள் வாழ்கின்றனர்... ஏறத்தாழ 22 ஊர்களில் நாம் தான் அதிகம்... இருந்தும் நம் இன மக்களால் ஒரு சேர்மன் (கவுன்சிலர்) கூட கொண்டு வர முடியவில்லை... காரணம் அரசியல் கட்சிகளினால் நம் இன மக்கள் பிளவுபட்டு ஒற்றுமை இல்லாமல் வாழ்கின்றனர், கல்வி அறிவிலும் பொருளத்தரதிலும் பின் தங்கி தான் உள்ளோம் .. எனக்கு தெரிந்து நம் இனத்தினர் பெரிய அந்தஸ்த்தில் (அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்) இங்கு யாரும் இல்லை.
மாவட்டத்தில் கோளிபன்னைகளும், லாரி தொழிலும் , அதிகமாக இருந்தாலும் நம் இன மக்கள் இந்த தொழில்களில் அதிகம் ஈடுபடுவதில்லை (நம் இன இளைஞர்கள் கட்டிட மேஸ்த்ரி தொழிலை அதிகம் செய்கின்றனர்).
தற்போது தான் நம் இளைஞர்களிடையே மாற்றங்கள் தெரிகிறது. நம் இனம் வாழும் அனைத்து ஊர்களிலும் நம் மன்னர் படம் வரைந்த போர்டு (விளம்பர பலகை ) வைத்து உள்ளனர். அடிகடி மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்கின்றனர். கோணங்கி பட்டி கிராமத்தில் மன்னர் சிலை உள்ளது இன்னும் சில ஊர்களில் சிலை வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
முத்தரையரின் வெற்றி வெகு தூரத்தில் இல்லை...அதற்க்கு நம் இளைஞர்கள் நல்ல கல்வி பெற்று ஒற்றுமையுடன் இருந்தால் போதும் (குறிப்பாக நமது இளைஞர்கள் மது பழக்கங்களை கைவிட்டு கல்வி மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் இது எனது தாழ்மையான வேண்டுகோள் ஆகும் ) இந்த மாற்றங்கள் நாமக்கலில் தொடங்கி உள்ளது விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் முத்தரையரின் நிலை மாறி மீண்டும் தமிழகத்தில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கைவுடன்
என்றும் உங்கள் ,
செல்வா முத்தரையர் ...
நாமக்கல்.
1 கருத்து:
good job
கருத்துரையிடுக