Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு



தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் : மர்ம கும்பலால் வெட்டிக் கொலை



புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை நேற்றிரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம். இவர், அ.தி.மு.க., ஆட்சியின் போது, சிறிது காலம் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது, ஜெ., பேரவை மண்டல செயலராக பணியாற்றி வந்தார்.இவரது சொந்த ஊர் ஆலங்குடி அடுத்த வடகாடாகும். நேற்றிரவு வழக்கம் போல், கடை வீதி சென்று விட்டு வடகாட்டிலுள்ள வீடுக்கு திரும்பியுள்ளார். இரவு 8.30 மணியளவில், வீட்டிற்கு வெளியே நாற்காலியில் உட்கார்ந்து மனைவி, குழந்தைகள், உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, ஆறு பேருக்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள், பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத காரில் திடீரென வந்து இறங்கினர்.சற்றும் எதிர்பார்க்காத வகையில் வெங்கடாசலத்தை சுற்றி வளைத்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், தலை, கழுத்து, மார்பு, கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவமனையில் வெங்கடாசலத்தை அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், அரசு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். புதுகை அரசு மருத்துவமனைக்கு இரவு 9.20 மணிக்கு வெங்கடாசலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.இத்தகவல் வடகாடு முழுவதும் பரவியதால், வெங்கடாசலம் ஆதரவாளர்கள் மற்றும் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்த துவங்கினர்.

இதில், ஏராளமான டூவீலர் மற்றும் போலீஸ் ஜீப், லாரி, பஸ்களும் கொளுத்தப்பட்டன. சாலை முழுவதும் மரங்களை வெட்டிப் போட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தகவலறிந்த புதுக்கோட்டை எஸ்.பி., முத்துசாமி சம்பவ இடத்துக்கு விரைந்தார். நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், அதிரடிப்படை, அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு பணிக்கு தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெங்கடாசலம் உடல் வைக்கப்பட்டுள்ள புதுகை அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (74)
shankar dubai - pudukkottai,இந்தியா
2010-10-10 02:04:32 IST
good person diead what a do?police ans witing for pudukkottai...
A.Pandi - Singapore,சிங்கப்பூர்
2010-10-08 16:27:40 IST
My deep condolence to Mr. Venkatachalam family. Whenever DMK rule(d) TN there is(was) no law and regulations. MK will be answerable for every tamilan for his poor administration....
sendhil - singai,இந்தியா
2010-10-08 16:08:48 IST
அட கடவுள சராசரி மனிதன் வாழ முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்த செயல்....
ஜெயக்குமார் - திருவி,இந்தியா
2010-10-08 15:45:38 IST
படிச்சவன் வேலை பாக்குறான்..... படிக்காதவன் அரசியல் வியாதிக்கு அடியாள் ஆகுறான்........
GANESAN - KAMPALAUGANDA,உகான்டா
2010-10-08 15:40:44 IST
நல்ல மனிதரை பழி வாங்கி விட்டார்கள். இவரை பலமுறை சந்திந்து உள்ளேன் . உதவி செய்யும் உள்ளம் கொண்டவர். ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுகிறேன் ....
venkat - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 15:33:59 IST
அப்பகுதி மக்களின் வாழ்க்கை பாதிக்காமல் பார்த்துகொள்வது அரசின் கடமை...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-10-08 15:08:48 IST
பேசாமல் கூலிபடையையும் அரசே ஏற்று நடத்தலாம். ஆற்று மண், டாஸ்மாக், போல. இல்லாவிட்டால் கேபிள் டிவி, சாட்டிலைட் டிவி, திரைப்படம் தயாரிப்பு போல தனது குடும்பத்திலேயே யாருக்காவது குடுத்து விடலாம்...
fid - frankfurt,இந்தியா
2010-10-08 14:11:58 IST
தமிழ் நாடு மக்களே நீங்கள் இந்த மாதிரி கொள்ளை அடிக்கும் ஆட்சிக்கு வரபோகும் தேர்தலில் ஓட்டு போடாதிங்க. நான் எந்த கட்சியும் சாராதவன். நான் ஒரு தமிழ் நாடு பிரஜை. இந்த ஆளு ஆட்சி சரில்லை. ஆட்சி ஒழுங்கா செய்யாமல் சினிமா காரன் நடத்தும் விழாவுகு போய்கிட்டிருக்கார். பிறகு எங்க உருப்படும் தமிழ் நாடு....
ஈஸ்வர் - தம்பா,யூ.எஸ்.ஏ
2010-10-08 14:05:34 IST
ஆந்திராவில் - 500 பேரு கர்நாடகாவில் - 400 பேரு கேரளாவில் 650 பேரு தமிழ்நாட்டில் - 399 பேரு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் கொலையனோர் கம்மிதான். சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று யார் சொன்னது. என் ஆட்சியை கவிழ்க்க சதி....
கலை - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 13:57:14 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் ......
kalaivanan - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 13:54:26 IST
நாங்கள் மிகப்பெரிய தலைவரை இழந்து விட்டோம் .......
பாரதி - கோபிசெட்டிபாளையம்,இந்தியா
2010-10-08 13:52:42 IST
அம்மா ஆட்சி தேவை. வர இருக்கும் தேர்தலில் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள்....
சுரேஷ் singapore - singapore,இந்தியா
2010-10-08 13:48:53 IST
என்ன கொடுமை இதெல்லாம் அவரு ரொம்ப நல்லவரு .எல்லாம் அந்த சாமிக்கு தான் தெரியும். என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். இப்படிக்கு உண்மை யானவன் சுரேஷ் சிங்கப்பூர்...
அஸ்வின் - குவைத்,குவைத்
2010-10-08 13:47:22 IST
என் ஆழ்ந்த அனுதாபங்கள்... பழக எளிமையானவர் என்பதை நான் ஒரு முறை நேரில் சென்று அவரை பார்த்த போதே தெரிந்து கொண்டேன்... அரசுதான் இவரின் இழப்பிற்கு பதில் சொல்ல வேண்டும்.. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.....
செல்வகுமார் - வேப்பங்குடிதிருவரங்குளம்,இந்தியா
2010-10-08 13:00:43 IST
மனம் குமுறுகிறது ஒரு மாவீரனை இழந்து விட்டோமே என்று! சட்டம் தன் கடமையை செய்யும் - வெறும் பேச்சு அளவில் மட்டுமே உள்ளது. தனி மனித பாதுகாப்பு தமிழகத்தில் கிடையாது என்பதற்கு இது ஒரு எடுதுக்காட்டு. . மக்களே விழிப்புடன் இருங்கள்........
சிதம்பரம் Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 12:45:46 IST
முத்தரையர் சமுதாயத்தின் பெரும் வேதனைக்கு ஆளாக்கிய இந்த கொடிய கூலிப்படை கும்பலை கைது செய்து தமிழக போலீசார் சிறந்தவர்கள் என்று நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன்...
dhandayuthapaniG - vadalur,இந்தியா
2010-10-08 12:19:19 IST
மக்கள் வாக்களிக்கும் போது யோசிக்காமல் செய்துவிட்டு இப்போது குத்துது கொடையுது என்றால் என்ன செய்வது? மக்கள் சரியாக இருந்தால் ஆட்சியாளரும் சரியாக இருப்பார்கள்!...
packiaraj - Tirunelveli,இந்தியா
2010-10-08 12:08:55 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் தமிழ் நாடு. அதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவை ஒரு ரூபாய் அரிசி தானே?......
lusuu - jahra,குவைத்
2010-10-08 11:28:47 IST
போங்கையா போய் புள்ள குட்டிகள படிக்கச் சொல்லுங்க ....
ஜான் - பெங்களூர்,இந்தியா
2010-10-08 11:21:07 IST
அடுத்த தேர்தலில் ADMK காரனோட பலம் என்னன்னு நாங்க காட்டுவோம்....
செந்தில் kumar - vadakadu,இந்தியா
2010-10-08 11:05:57 IST
ஆழ்ந்த அனுதாபங்கள்...
உன்னைப்போல் ஒருவன் - Texas,யூ.எஸ்.ஏ
2010-10-08 10:53:48 IST
மக்கள் விழித்து கொள்ளாத வரையில், இது தொடர்ந்து கொண்டு இறுக்கும். தமிழா விளித்து கொள். இலவசத்தை நம்பி ஏமாறாதே...தமிழக மக்கள் முட்டாள் ஆகி கொண்டிருக்கிறார்கள்....இந்த dmk ஆட்சி போதை மருந்தை கூட இலவசமாக கொடுக்கும் அடுத்தும் தொடர்ந்தால்......
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 10:42:55 IST
ஆலங்குடி தொகுதியில் இருந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் வெங்கடாசலம். அதிலும் 1996ம் ஆண்டு சுயேச்சையாக வென்று பிறகு தாய் கட்சிக்கு திரும்பியவர். இது போன்ற கூலிப்படைகளின் செயல்கள் சமுதாயத்துக்கு மிகவும் ஆபத்தானவை. சில மேதாவிகள் இதனையும் நியாயப்படுத்துகின்றனர். தயவு நீங்கள் எல்லாம் கருத்துகள் எழுதுவதை நிறுத்திகொள்ளுங்கள். அது தான் இந்த சமுதாயத்துக்கு நல்லது. வெங்கடாசலம் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய இழப்பு புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவுக்கு மிகப் பெரிய இழப்பு. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு....
கலைவாணன் - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 10:32:55 IST
நங்கள் மிக பெரிய தலைவரை இழந்துட்டோம்..... இவரது ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறோம் ........
ராஜுராஜு - மதுரை,இந்தியா
2010-10-08 10:09:06 IST
Whoever he was, the way he was attacked was ruthless. In particular at his house infront of family members. There is protection for any one. Police should do some encounters ....
Sam - tirupur,இந்தியா
2010-10-08 10:04:26 IST
இது என்னவோ திமுகவை சார்ந்தவர்கள் தான் கொலை செய்தவர்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் மாதிரி கமண்ட்ஸ் கொடுகிறீர்கலே இந்த ஆட்சியில் நடந்தால் அது திமுக தானா ? ஏன் இது உள்கட்சி பூசலாக இருக்க கூடாது ? இறந்தது ஒரு ஆத்மா. அத விட்டுட்டு இதிலும் கட்சி சாயம் பூசி ஆதாயமா தேடுகிறீர்கள் ? சே கேவலமா இருக்கு...
மனிதன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-08 09:55:45 IST
ஒண்ணுமே புரியலே எனக்குதானே, ஒரே மர்மமாக இருக்குது தலையும் கிறுக்குது! ஒண்ணுமே புரியலே எனக்குதானே, என்னமோ நடக்குது தமிழ்நாட்டிலே! ஒரே மர்மமாக இருக்குது ஒண்ணுமே புரியலே எனக்குதானே,...
Raman - Singapore,இந்தியா
2010-10-08 09:49:38 IST
இலவசம், இலவசம் என்று இலவசத்தை பார்த்து பரிகாசம் செய்யும் இலவசங்களே.... ஒரு செய்தியை போட்டு, அதற்கு இலவசமாக கருத்து சொல்லலாம் என்றவுடன் புற்றீசல் போல் வந்து கருத்து சொல்லும் இலவசங்களே... ஒரு வேளை, கருத்து சொல்ல, ஒரு பதிவுக்கு, CREDIT OR DEBIT CARD NUMBER ஐ கொடு, குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால்தான் கருத்து பதிவு செய்யப்படும் என்றால், எத்தனை இலவசங்கள், இங்கே, வாய் கிழிய கருத்து சொல்ல வரும்... ஏன், வெகுஜன மக்களின் மன நிலையை இலவசமாக பரிகாசம் செய்கிறீர்கள்......"முதலில் உன் கண்ணில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு, அடுத்தவனுக்கு முயற்சி செய்"!!!!!...
எஸ்.பி.பக்கிரி - சென்னை,இந்தியா
2010-10-08 09:39:20 IST
படுகொலையானவர் நல்லவரா கெட்டவரா என்கிற விவாதத்தை விடுத்து, வெகு வேகமாக சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீரமைத்தைப்பற்றி விவாதிப்பதுதான் தமிழக நலனுக்கு நல்லது....
பரமேஸ்வரன் - காரைக்குடிசிவகங்கைமாவட்டம்,இந்தியா
2010-10-08 09:37:44 IST
இதே நிலை இன்னமும் தொடர்ந்தால் தமிழக மக்களை ஏற்கனவே ரஜினி சொன்னதுபோல் " ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது". தமிழக மக்களே! நன்கு சிந்தித்து வாக்களியுங்கள், சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனை அழித்தவர் யார்! எவரது ஆட்சியில் ரவுடிகளின் அட்டகாசம் அழிக்கப்பட்டது என்று சற்று சிந்தித்து கடவுள் இல்லை ஜாதகம் தவறு என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழின துரோகி கருணாநிதிக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள். சட்டம் ஒழுங்கு தலைநகரிலேயே இல்லையென்றால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் எப்படி சரியாக இருக்கும்!!!!!!!!!!!!!! இவர்களது குடும்ப ஆட்சிக்கு ஒரு பாடம் புகட்டுங்கள்!!!!!!!!!...
சேகர் - singapore,இந்தியா
2010-10-08 09:35:42 IST
டேய் சிவா மற்றும் உண்மையான பெயரை சொல்ல தைரியம் இல்லாத உண்மை உங்களை போன்ற அடி முட்டாள்களுக்கு என்ன தெரியும், ஏழைகளுக்கு உதவி செய்ய நீதி கிடைக்க அதிரடியாக செயல்பட்டவர். இனிமேலும் தவறான கருத்தை வெளியிடதே....
Murugan P C - PeriyalurAranthangi,இந்தியா
2010-10-08 09:34:49 IST
Deep condolance to Venkatachalam....
ஸ்ரீராம் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-10-08 08:59:34 IST
ஒழுங்காக ஒரு ரூபாய் அரிசியை இலவச காஸ்-இல் சமைத்து சாப்பிட்டு, இலவச மின்சாரத்தில் (மானாட மயிலாட வரும் போது மட்டும் தான் மின்சாரம் வரும்) இலவச டிவியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு வேலை வெட்டி எதுக்கும் போகாமல் பொதுக்கூட்டம், செம்மொழி மாநாடு மற்றும் இடைத்தேர்தலின் போது லாரியில் மாட்டை ஏற்றி செல்வதை போல் கூட்டத்திற்கு ஆள் கணகிற்காக ஊர் ஊரக சென்று குவார்டர் பிரியாணி சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டும் சாதாரண தன்மான தமிழனை இந்த பொன்னான ஆட்சியில் யாராவது வெட்டி சாய்திருக்கிரார்களா? இல்லையே!!! வெட்டபட்டிருப்பவரோ எதிரி கட்சியை (எதிர் கட்சி என்று யாரையும் இந்த பொன்னான ஆட்சியில் கூறக்கூடாது) சேர்ந்தவர். எப்படி இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடோ, இரண்டு நாடும் இரவு/பகல்/கடும் வெயில்/கடும் குளிர் என்று எந்த நேரமும் உஷாராக இருப்பார்களோ அது போல் தமிழ்நாட்டில் மேலே கூறியுள்ள நமது சாதாரண தன்மான தமிழனை தவிர மற்ற எல்லோரும் எந்த நேரமும் உஷாராக இருக்கவேண்டும். இல்லையேல் விவேக் சொல்வது போல் "இன்னைக்கு செத்தல் நாளைக்கு பால்". பின் குறிப்பு: தமிழகத்தில் இன்றுள்ள நிலைமையில் யாராவது உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைத்தால் இதோ நீங்கள் வெற்றி பெற ஒரு ரகசியம். பேசாமல் பால் வியாபாரம் பண்ணினால் 2011-க்குள் கோடிஸ்வரன் ஆகிவிடலாம்....
arun - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 08:48:18 IST
வடகாட்டின் வள்ளல் இறந்ததற்கு வருந்துகிறோம்.வள்ளலின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகிறோம் . கண்ணீருடன். ஆரணிபுரம் பகுதி புதுகை ....
ரவி - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 08:29:59 IST
அந்த மாநிலத்தை பாருங்கள், அந்த நாட்டை பாருங்கள், அங்கே நடந்ததை விட இங்க கம்மி தான் என்று புள்ளி விவரம் தருவார். புள்ளி விவரம் அறிவிக்கும் புள்ளியாளர் கருணாநிதி...
hamdunashraf - பரங்கிபேட்டை,இந்தியா
2010-10-08 08:27:38 IST
வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடும். இது தமிழ்நாடா இல்லை சுடுகாடா........
தமிழன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 08:08:07 IST
முன்னாள் அமைச்சருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தயவு செய்து ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க வினரால் சேதபடுத்தப் பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கினால் நேற்று அவர் விடுத்த அறிக்கையை அனைவரும் ஏற்று கொள்வார்கள். செய்வாரா முன்னாள் முதல்வர்? அப்படி செய்தால் தி.மு.க வினரால் தாக்கப் பட்ட வாகனங்களுக்கும் கருணாநிதி இழப்பீடு வழங்க வேண்டும். செய்வாரா இந்நாள் முதல்வர்? எனக்கு தெரிந்து இது இரண்டுமே நடக்காத காரியம்....
விகடன் - சென்னை,இந்தியா
2010-10-08 08:02:11 IST
மற்ற மாநிலங்களில் நக்சலைட் தொல்லை, தமிழ்நாட்டில் திமுக நக்சலைட் தொல்லை. என்று விடியுமோ??????????????...
பராசக்தி - மன்னார்குடி,இந்தியா
2010-10-08 08:01:56 IST
என்ன செய்வது எங்கள் ஆட்சியில் தான் எங்கள் சொந்த மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வம் படுகொலை செய்யப்பட்டார். நாங்கள் என்ன கவலையா பட்டோம். இதெல்லாம் எங்கள் ஆட்சியில் சர்வ சாதாரணம். பரவாயில்லை விடுங்க. நாங்க குடும்பத்தோட போயி எந்திரன் படம் பார்க்கணும்....
விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 07:53:38 IST
யார் வாழ்ந்தாலும் செத்தாலும் பாதிக்கபடுவது என்னவோ பொதுமக்கள் தான். கூலிப்படைகளை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும். தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு....
விமல் ஸ்ரீநிவாஸ் - சென்னை,இந்தியா
2010-10-08 07:31:46 IST
கொலை செய்தால் பெருசா ஒன்னும் இல்லை என்ன. அடுத்த நாள் தின மலர்ல வரும் இரண்டு,மூணு,மாசம். அப்புறம் ஏவல் சாரி காவல் துறை மெதுவா கைது செய்யும். ஒரு மாசம் தான் ஒரே மாசம் தான் ஜாமீன்ல வருவோமில்ல. அப்பரம் எட்டு,,பத்து..வருஷதுக்கு அப்புறம் எல்லாரும் மறந்த பின்னாடி ஆட அமர (அமர்வு)நீதிமன்றம் தீர்ப்பு வழுங்கும். அதையும் தாண்டி தண்டனை வந்தா அப்பீல் செய்யோம் இல்ல. அது ஒரு மூணு,நாலு வருஷம் ஓடும். அப்புறம் திருப்பி அப்பீல் அது இது....கடைசியா அவுக என்ன தண்டனை கொடுக்கறது. நானா போய் சிவனேன்னு ஜெயில்ல உக்கார்ந்துப்பேன்....
siva - Madurai,இந்தியா
2010-10-08 07:28:49 IST
செத்தவரே ஒரு கூலிப்படை தலைவர் தாம்பா, வினை விதைச்சவன் வினை அறுப்பான்....
Siva - madurai,இந்தியா
2010-10-08 07:26:10 IST
seththavane oru koolippadai thalaivan thaampa....
கே.anbu - trichy,இந்தியா
2010-10-08 07:25:57 IST
மஞ்சள் துண்டாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படியா நிலைமை போனால் நீங்கள் போன தேர்தலில் வாக்களித்தபடி ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போட்டோம். அதனால் மக்கள் எப்போதும் எங்களுக்கு தான் வோட்டு போடுவார்கள் என்று கனவு காணாதீர்கள். வாக்களித்தபடி போட்ட அரிசி உங்கள் கட்சிக்கு வாக்கரிசி யாக போய்விடும். அல்லகைகளின் பேச்சை கேட்காதீர்கள். எங்கள் ஆட்சியில் வாக்கரிசி கூட ஒரு ரூபாய்க்கு விற்றோம் என்ற பெயர் வேண்டுமானால் தொடர்ந்து இப்படியே நடந்துகொள்ளுங்கள். அழிவு காலம் மிக அருகில் உள்ளது...
இராஜா - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-08 07:06:19 IST
அய்யாவிடம் இருந்து நாளை ஒரு மடல் வெளிவரும்; அதில்: "அ.தி.மு.க.வில் அவர்களே வெட்டிக்கொண்டு ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் காட்டுமிராண்டித்தனம் இது. இப்படியெல்லாம் கொலை செய்து எங்கள் ஆட்சியை அழிக்க முடியாது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இன்று கூட ஜெயந்தி அம்மையார் என்னிடம் கூட்டணி குறித்து இறுதி ஒப்பந்தம் செய்து சென்றுள்ளார். உடன் பிறப்புகள் அமைதி காக்கவும்."...
சிங்கை கார்த்திக் - singapore,சிங்கப்பூர்
2010-10-08 07:04:55 IST
வினை விதைத்தவன் வினை அறுப்பான்... இவரால் இறந்தவர்கள் எத்தனையோ .. இவர் உயிருக்கு மட்டும் மரியாதையா ??...
செந்தில் புதுக்கோட்டை - singapore,இந்தியா
2010-10-08 07:00:30 IST
மிக ஆழ்ந்த வருத்தங்கள் ... அதிர்ச்சியான விஷயம் ... ஆலங்குடி தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் .. முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு .... இவருடைய இழப்பு அப்பகுதி மக்களுக்கு பேரிழப்பு ... என்று இந்த தி மு க ஒழியுமோ அன்றுதான் இது போன்ற வன்முறைகளுக்கு முடிவு .....கூலி படைகளை முதலில் ஒழிக்க வேண்டும் ........
ஏழுமலை - வில்லுபுரம்,இந்தியா
2010-10-08 06:37:01 IST
திமுக வினரிடமிருந்து இழப்பீடு வாங்கனுமுன்னு செல்வி சொல்லி முடிக்கல. அதுக்குள்ளே இப்படியா. ம்ம் ம் ம் ம் ....... குடுத்துடுவங்கய்யா குடுத்டுது டுவாங்கய்யா!!!!!!!!...
நாகராஜன் முது - HARRISBURG,யூ.எஸ்.ஏ
2010-10-08 06:26:51 IST
POLICE DEPARTMENT MUST FIND THE GANG AS SOON AS POSSIBLE....
APR.Kannadhasan - கேம்ப்...singapore.குலமங்கலம்சவுத்.pudukai.DT,இந்தியா
2010-10-08 06:25:09 IST
ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம் நாங்கள் .....எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .....ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் ....
tamil - singapore,இந்தியா
2010-10-08 06:03:59 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!......
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 06:03:43 IST
ஒடனே தருமபுரி, சந்திரலேகான்னு இங்க வக்காலத்து வாங்க ஒரு கும்பல் கெளம்பும்...தருமபுரி சம்பவத்திற்கு சரியான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டே வழங்கிவிட்டது. முன்னாள் நடந்தவற்றைக்காட்டியே இது போல எத்தனை கொலை பாதகங்களை நியாயப் படுத்தபோகிரார்களோ ...புரியவில்லை...தமிழகம் உண்மையில் காட்டுமிராண்டி காலத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது... மக்கள் காசுக்கும் இலவசத்திற்கும் மயங்கும் தன்மையிலிருந்து விழித்தாலொழிய தமிழகத்தினை காப்பாற்றுவது கடினம்....
karthick - soorakkadu,இந்தியா
2010-10-08 05:55:19 IST
அரசியல் விஷயங்கள் தவிர பொது வாழ்வில் மக்களுக்கு சிறந்த நண்பனாகவும் வள்ளலாகவும் திகழ்ந்தவர் சமுதாய துரோகிகளால் சாய்க்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது....
பத்மநாதன் - India,இந்தியா
2010-10-08 05:50:43 IST
ஆங் பாட்டி வைத்தியம் ஆரம்பமாகிவிட்டது! எப்போதெல்லாம் தனக்கு தோல்வி வரும் என்று தெரிகிறதோ அப்போது சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று அதை கெடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து விடுவார்!கொடநாடு போறது,சிறுதாவூர் போறதெல்லாம் சும்மா ஜாலியா இருக்க மட்டும் இல்லை இந்த மாதிரி சதி திட்டம் போடவும்தான்!அ.தி.மு.க கட்சியில் உள்ள அப்பாவிகளே தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்! மக்களும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்....
snakebabu - singapore,சிங்கப்பூர்
2010-10-08 05:13:48 IST
கருணாவின் பொற்கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்னும் மணிமகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்க கல். வாழ்க உமது அரசாக ஆட்சி. வளர்க உமது பணநாயகம்,...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-08 03:56:18 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!...
துளசி ராமன் - சென்னை,இந்தியா
2010-10-08 02:23:37 IST
துளசி ராமன் சென்னை நாடு எங்க போகுதுனே தெரியல ... சட்டம் ஒழுங்கு சூப்பர் ......
உமர் - சவுதி,இந்தியா
2010-10-08 01:43:22 IST
என்ன வாழ்க்கைடா இது. இதுக்கு ஒரு முடிவு இல்லையா அல்ல...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-08 01:30:14 IST
மனுஷன் சாகுரப்போ நிம்மதியா சாகனும்..இது போல சாவெல்லாம் வரக்கூடாது..வழக்கம் போல திமுக ஆட்சியை குறை சொல்லி பலனில்லை.அவங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு ஆட்சி செய்யிறாங்க..எந்த அளவுக்கு திமிரும் செல்வாக்கும் சட்டத்தை மதிக்காத தன்மையும் இருந்துச்சுன்னா, இப்படி வீடு புகுந்து ஆளை போடுவானுங்க..சட்டம் போலீசெல்லாம் அதுக்கு பயப்படுரவனுக்கு மட்டும்தான் போலிருக்கு.....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 01:10:08 IST
தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு மிக மிக மோசமாக கெட்டு போயி உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வுகளாக மாறி விட்டது. கொலை கொள்ளை இல்லாத ஒரே ஒரு நாளை சொல்லுங்கள் பார்ப்போம். இப்ப தெரியுதா? ஜெயா ஏன் ஹெலிகோப்டேர்ல பறக்குறாங்கன்னு. திமுக ரௌடிகள், திமுக ரௌடிகள்................திமுக ரௌடிகள். எங்கும் ரௌடிகள் அட்டூழியம், அராஜகம், கொலை வெறி தாக்குதல்.மஞ்சள் துண்டு குடும்பத்துக்கு தெரியும் ஜெயாவால் மட்டும்தான் குடும்ப திமுக அராஜ ஆட்சிக்கு முடிவு கட்டமுடியும் என்று. மஞ்சள் துண்டு குடும்பத்தின் அராஜகங்களை ஒழிக்க ஜெயா விட்டால் வேற எவன்டா இந்தியாவில் ஏன் உலகத்தில் இருக்கிறான். ஒரு வேட்டி கட்டிய ஆம்பிளையை சொல்லுங்கள். என்னையும் சேர்த்துதான் சொல்றேன். இருப்பினும் ஜெயாவை ஆதரிப்பதால் அதிலிருந்து எனக்கு விதிவிலக்கு. ஒரு முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலை என்ன? எல்லாரும் கேரளாவுக்கு அடிமாடா போங்க. முழிக்காதிங்க. மஞ்சள் துண்டின் ஆசிர்வாதத்தால் கூடிய சீக்கிரம் அந்த நிலை தமிழ் நாட்டில் வரும். தமிழ்நாட்டில் உள்ள பணத்தை எல்லாம் சுரண்டியாச்சு. உசுரு மட்டும்தான் பாக்கி. அதையும் இப்படி தினம் தினம் எடுக்கிறானோ....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-08 00:25:45 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் தமிழ் நாடு.அதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவை ஒரு ரூபாய் அரிசி தானே?...

கருத்துகள் இல்லை: