அகில இந்திய முத்தரையர் இளைஞர் எழுச்சிப்பேரவை மாநிலக்கூட்டம், தலைவர் பாண்டிப்பெருமாள் தலைமையில் நடந்தது. வக்கீல் திரவியம், பெரியகருப்பன், ராமலிங்கம், ஆண்டிச்சாமி, குப்புசாமி, ரவிச்சந்திரன், சிங்கராஜன், கண்ணன், இளங்கோ, தங்கவேல், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பொறியியல், மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதில் மோசடி நடந்து வருகிறது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடும், இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
வணிக நோக்கதில் செயல்படும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விபத்து ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டறிய, அனைத்து ரோடுகளிலும் முக்கிய வீதிகளில் சுழல் காமிரா பொருத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக