தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டை தொகுதி முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்தது. தஞ்சை மண்டல பொறுப் பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சூரைராஜ்குமார், பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் மனோகரன், முன்னாள் துணை அமைப்பாளர் நாட்டுச்சாலை முருகானந்தம் முன்னிலை வகித்தனர். மதுக்கூர் ஒன்றிய தலைவர் ராஜாங்கம் வரவேற்றார்.
பட்டுக்கோட்டை நகர தலைவர் திருஞானம், துணை செயலாளர் ராமு, பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ராசியங்காடு நாகராஜன், ஒன்றிய செயலாளர் துவரங்குறிச்சி சுப்பிரமணியன், ஒன்றிய இணை செயலாளர் தொக்காலிக்காடு நவநீதகிருஷ்ணன், அதிராம்பட்டினம் நகர தலைவர் ராஜா, துணைத்தலைவர் ஓம்பிரகாஷ், துணை செயலாளர் மதி, மதுக்கூர் ஒன்றிய துணை செயலாளர் இளங் காடு காந்தி, பொருளாளர் கருப்பூர் கல்யாணசுந்தரம், ஒன்றிய இளைஞ ரணி தலை வர் பாலமுருகன், துணைத்தலைவர் சிரமேல்குடி காந்தி, இளைஞ ரணி ஒன்றிய துணை செயலாளர் நாட்டுச்சாலை நாகராஜ் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பாலு நன்றி கூறினார்.
இந்த செய்தி எடுக்கப்பட்டது தினகரன் நாளிதழிலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக