Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

முத்தரையர்களை பகைத்துக் கொள்ளும் அ.தி.மு.க


திருச்சி: ".தி.மு.., திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக, ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், ஜாதி அரசியலுக்கு முதல்வர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்துள்ளதார்' என, அக்கட்சியினர் தெரிவித்தனர்.கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், .தி.மு.., வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, திருச்சி புறநகர் மாவட்ட, .தி.மு.., செயலாளர் பதவி பல முறை மாற்றி வழங்கப்பட்டது.தமிழகத்தில், .தி.மு.., ஆட்சியை பிடிப்பதற்கு முன், புறநகர் மாவட்ட செயலாளராக சுப்பு என்ற சுப்ரமணியம் இருந்தார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட சிவபதிக்கு, அந்த பதவி வழங்கப்பட்டது.ஒரு சில மாதங்களிலேயே இவரிடமிருந்து, அப்பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஒரு சில மாதங்களிலேய, புறநகர் மாவட்ட செயலாளர் பதவி, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதிக்கு வழங்கப்பட்டது.டாக்டர் ராணி விவகாரம் தொடர்பாக அமைச்சர் பதவியை இழந்த பரஞ்ஜோதியிடம் இருந்து, புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு, மீண்டும் அமைச்சரான சிவபதிக்கு வழங்கப்பட்டது. இப்படி புறநகர் மாவட்ட செயலாளர் பதவி, மாறி மாறி, முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. இது கட்சியில் உள்ள இதர சமூகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதனால் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இப்பதவியை வழங்க ஜெயலலிதா முடிவு செய்தார். இதன் காரணமாகவே புறநகர் மாவட்டத்திற்கு, தனியாக செயலாளர் நியமனம் செய்யாமல், மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரனையே கூடுதலாக கவனிக்க சொல்லியிருந்தார். அமைச்சர் பதவியை மட்டும் பூனாட்சிக்கு வழங்கினார்.எப்படியும் சுற்றி சுற்றி மாவட்ட செயலாளர் பதவி, நமக்கு தான் வரும் என்ற தீவிர நம்பிக்கையில், முத்தரையர் இனத்தை சேர்ந்த, "மாஜி'க்கள் பலர் ஆவலுடன் காத்திருந்தனர்.ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், முத்தரையர் அல்லாத, கட்சியில் மிகவும் சீனியரான ரத்தினவேலுவை மாவட்ட செயலாளராக, ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார். இது திருச்சி புறநகர் மாவட்ட, .தி.மு..,வில் உள்ள ஒரு பிரிவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும், புறநகர் பகுதியில் குறிப்பட்ட ஒரு ஜாதியினருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தை நிறுத்தி, ஜாதி அரசியலுக்கு ஜெயலலிதா தடை விதித்துள்ளதாக கட்சியில் மற்றொரு பிரிவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.திருச்சி, பெரம்பலூர், அரியலூர் என, முந்தைய ஒருங்கிணைந்த, திருச்சி மாவட்ட செயலாளராக ரத்தினவேல் பதவி வகித்தவர். திருவெறும்பூர் தொகுதி எம்.எல்..,வாகவும், கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகியாக இருந்துள்ளார்.தி.மு..,வைச் சேர்ந்த அன்பில் பொய்யாமொழி மரணத்தைத் தொடர்ந்து நடந்த, திருச்சி, 2வது தொகுதி இடைத்தேர்தலில் ரத்தினவேல், .தி.மு.., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இந்த தேர்தலின் போது பலத்த கலவரம் நடந்தது. ஆளுங்கட்சியான, தி.மு..,வினரை எதிர்த்து இவரும், மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையும் போராடியதன் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன், ரத்தினவேலுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.இவர் மூலம் அரசியலில் பிரபலமான மரியம்பிச்சை, அமைச்சர் பதவி வரை முன்னேறிச் சென்ற நிலையிலும், ரத்தினவேல் மட்டும் டம்மியாக இருந்தார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு, ரத்தினவேலுக்கு மீண்டும் பதவி கிடைத்துள்ளது. "புறநகர் பகுதியில் அரசியல் செய்ய, அவருக்கு ஏற்கனவே உள்ள அனுபவம் கை கொடுத்தாலும், தற்போது கட்சியில் நிலவும் பல ஜாதி அரசியல் மையங்களை சமாளிக்க அவர் போராட வேண்டியிருக்கும்' என, கட்சியினர் கூறுகின்றனர்."எனினும், முதல்வர் ஜெயலலிதா, நியமனம் செய்திருப்பதால், எதிர்ப்புகள் நேரடியாக இருக்காது என்றும், மறைமுக எதிர்ப்புகளை ரத்தினவேல் கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டியிருக்கும்' என, கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் அடித்துக் கூறுகின்றனர்.

News From : DINAMALAR

கருத்துகள் இல்லை: