திருச்சி, ஏப். 3-
திருச்சியிலிருந்து இரவில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் திருச்சியிலிருந்து இயக்க வேண்டும். பகல் நேரத்தில் திருச்சியிலிருந்து இயக்கப்பட்ட பல்லவன் எக்ஸ் பிரஸ் ரெயிலை திருச்சியிலிருந்தே தொடர்ந்து இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மலைக்கோட்டை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீட்புக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந் தது. போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளரும், தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளருமான கோவிந்தராஜூலு, சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் தி.மு.க. சார்பில் முன்னாள் துணை மேயர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தொழில் அதிபர் ஜான்சன் குமார், கவுன்சிலர்கள் லீலா வேலு, கலைச்செல்வி, முத்துச்செல்வம் மற்றும் காஜாமலை விஜய், பாலக் கரை பகுதி செயலாளர் மண்டிசேகர், மாவட்ட பிரதி நிதி மோகன்தாஸ், 10-வது வட்ட செயலாளர் டிபன் கடை ராஜேந்திரன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுருளிராஜன், ஜெரால்டு, மிளகுபாறை பகுதி இளைஞரணி அமைப் பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கிய ராஜ், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.டி.தனபால், எஞ்ஜினீயர் காளீஸ் வரன், பாரி, அரியமங்கலம் ஜோசப், உய்யங்கொண்டான் திருமலை பாஸ்கர், விவசாய பிரிவு செயலாளர் முரளி தரன், ஜெயபால், கோபால கிருஷ்ணன், ஜீவாநகர் மாரி முத்து, எவரெஸ்ட் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் விஜயராஜன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், அவைத் தலைவர் அலங்க ராஜ், பகுதிச் செயலாளர்கள் வீர சிவக்குமார், கலைப்புலி பாண்டியன், பொன்மலை மனோகர், சுரேஷ்கண்ணன், என்ஜினீயர் சுந்தர், வட்டச் செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மலர்மன்னன், வெல்லமண்டி சோமு, கவுன்சிலர்கள் கதிரவன், ராமமூர்த்தி, முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர்கள் கண்ணதாசன், உறந்தை உமாநாத், மாநில இளைஞரணி செயலாளர் பிரின்ஸ், மாநகர செயலாளர் தாராநல்லூர் ராசா, முன்னாள் செயலாளர் திலீப், கிள்ளி வளவன், தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று பாரதீய கிசான் சங்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு, மற்றும் ஸ்ரீரங்கம் நகர் நலச்சங்கம் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், ஐக்கிய ஜனதாதளம் மாநில பொதுச் செயலாளர் ராஜசேகரன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் வையாபுரி, ஹேமநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், விஜய் மன்றம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.கே.ராஜா, புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் சங்கர், ஐயப்பன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பார்த்திபன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பயஸ் அஹமது, இப்ராகிம் ஷா, புரோஸ்கான், தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் தமிழ்செல்வம், பொருளாளர் சுப்பிரமணியம், அமைப் பாளர் கிருஷ்ண மூர்த்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில தலை வர் திலீப், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் ரகமத்துல்லா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இந்திரஜித், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் ஸ்ரீதர், ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பார்வேர்டு பிளாக், தவ்கீத் ஜமாத், தமிழ்நாடு வர்த்தக கழகம் திரைப்பட வினியோகதர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர் சங்கம், முத்தரையர் சங்கம், அனைத்து வர்த்தக சங்கங்கள், வன்னியர் பேரவை, காவிப்புலிகள், நாயுடு மகாஜன சங்கம், ரஜினி, கமல், அஜித், சூர்யா ரசிகர் மன்றத்தினர் உள்பட அனைத்து அமைப்புகளும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் திருச்சியிலிருந்து இயக்க கோரி கோஷம் எழுப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட பொது மேலாளரிடம் மீட்புக்குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு ஏற்கனவே அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மீட்புக் குழு ஒருங்கிணைப் பாளர்கள் கோவிந்த ராஜூலு, சேகரன் ஆகியோர் கூறியதாவது:-
திருச்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு எழுச்சியுடன் போராட்டம் நடத்துள்ளது. இதன் பிறகாவது ரெயில்வே நிர்வாகம் திருச்சியிலிருந்து மலைக்கோட்டை, பல்லவன் ரெயில்களை இயக்கும் என எதிர்பார்க்கிறோம்.இல்லையென்றால் ரெயில் மறியல் உள்ளிட்ட அறப் போராட்டங்களை நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக